Tuesday, May 5, 2015

எதனைச் செய்திடமாட்டார்கள் ? துன்பத்தை விரும்பாதவர்கள் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :- இன்னா செய்யாமை.



குறள் எண் :-   320.



நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்                                                                                        செய்யார் 

நோயின்மை வேண்டு பவர்... ... ... 


விளக்கம் :-   துன்பம் செய்தவர்களுக்கு துன்பம் 

வந்துசேரும்.ஆதலால் துன்பத்தை 

விரும்பாதவர்கள் என்றும் பிறர்க்கு 

துன்பம் செய்திட மாட்டார்கள். இது வான்புகழ் 

வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 

அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரங்கா :-  என்னடா தம்பி கங்கா, என்ன 

இந்தப்பக்கம் ஆளையே காணோம் பத்துப் 

பதினைஞ்சு நாளா ? எங்கடா போயித் 

தொலைஞ்சே ?


கங்கா :-  இல்ல அண்ணே நான் ஆளும்கட்சி

அடிமட்டத் தொண்டன் அதனாலே பெங்களூரு 

போயிட்டு வந்தேன் அதான் நீங்க பாக்க 

முடியலே.


ரங்கா :- என்ன தம்பி அந்த பொம்பளைக்கு 

தண்டனை உறுதிதானே ?

கங்கா :-  ஆமா அண்ணே அதை 

நினைச்சாத்தான் 

ரொம்பரொம்பக் கவலையா இருக்கு.

ரங்கா :- அதுக்கு என்னடா தம்பி செய்றது ? உப்பு 

தின்னா தண்ணீர் குடிச்சுத்தானே ஆகணும். அத்த 

மாதிரி தப்பு செஞ்சா தண்டனை 

அனுபவிச்சுத்தானே ஆகணும். 

அட...என்ன...நான்...சொல்றது ?

கங்கா :- நீங்க சொல்றது என்னவோ 

வாஸ்தவம்தான். ஆனா ...


கங்கா :- ஆனா என்னடா ஆவன்னா, அந்த 

பொம்பளை எத்தனை பேருக்கு துன்பத்தை 

செஞ்சிருக்கு. அதுக்காக உள்ள விலையை 

கொடுத்துத்தானே ஆகணும். அதான் ஜெயில் 

தண்டனை இப்பஉறுதியாகப் போவுது. இந்தக் 

கருத்தைத்தானே நம்ம வான்புகழ்

வள்ளுவரும் ரெண்டாயிரம் வருஷத்துக்கு 

முன்னாடி சொல்லி இருக்காரு. அதனால தம்பி 

அண்ணே நான் என்ன சொல்றேன்னா 

நீயாச்சும், மனசறிஞ்சு யாருக்கும் எந்தத் 

துன்பத்தையும் செய்ய நினைக்காதே.அப்படி 

செஞ்சீன்னா அந்த பொம்பளைக்கு வர்ற 

அதே ஜெயில் தண்டனை உனக்கும் கிடைக்கும். 

நான் வாறன்.நிறைய சோலிகிடக்குதுடா தம்பி.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



( மதுரை.இரா.பாலு )