Wednesday, February 24, 2016

நல்ல அரசன் என்பவர் யார் ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம:-  வெருவந்த செய்யாமை.

குறள் எண் :-  561.



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து... ... ... 


பொருள்:-  தகுந்த முறையில் ஆராய்ந்து குற்றம் 
செய்தவன், மேலும் குற்றம் செய்யாமல் இருக்க,
ஏற்றவகையில் தண்டனையை அளிப்பவனே 
நல்ல அரசன்/நீதிபதி  ஆவான்.  இது வான்புகழ்
திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கன்னையா :-  வாங்க தம்பி  பொன்னையா. 
நல்லா இருக்கீகளா ? உம்..அப்புறம்..வேற..
என்னலே தம்பி விசேசம். சொல்லுங்க தம்பி.

பொன்னையா :-  அண்ணே என்னண்ணே
காலங்காத்துலே என்னையப்போயி நீங்க 
இம்புட்டு உடைசல் பண்ணுதீக.

கன்:- இதென்னடா கொடுமையா போச்சு.
ஏலே நல்லா இருக்கியான்னு கேட்டது 
தப்பாடா சாமி. இனிமே கேக்கல சாமி.

பொன்:- அட..அதுக்கில்லைண்ணே. நீங்க இம்புட்டு விசாரிக்கியளே அதான் கேட்டேன். சரி 
அண்ணே  அத விடுங்க. ஒரு வழியா நம்ம 
அம்மையாரோட சொத்துக்குவிப்பு வழக்கு 
உச்ச நீதி மன்றத்துலே விசாரணைக்கு 
வந்துருச்சு போல. என்ன ஆகும் அண்ணே 
முடிவு.

கன் :- ஏலே !! உனக்கு அதுக்குள்ளே என்னலே
அம்புட்டு அவசரம். பொறுமையா என்ன நடக்குன்னு பாத்துக்கிட்டு கிடலே. இன்னும் எம்புட்டோ படிகள் தாண்டிப் போகனும்லே வழக்கு.

பொன் :- இருக்கட்டும் அண்ணே. கடோசியிலே
நீதிதானே ஜெயிக்கும். என்ன நான் சொல்றது ?

கன்: அடடா..உனக்குஎப்டிபுரியவைக்கிறதுன்னு 
எனக்கு தெரியலே தம்பி. இந்த நீதி,நேர்மை,
உண்மை, ஞாயம், சத்தியம், இது எல்லாம் தம்பி
வைட்டமின் "ப" வுக்கு புறவு தான்லே. சொன்னா 
புரிஞ்சிக்கலே.

பொன் :- வைட்டமின் ப  வா. அப்டின்னா என்னண்ணே ?

கன்:- தம்பி வைட்டமின் ப  அப்படீன்னு சொன்னா 
எல்லாம் துட்டுத்தாண்டா தம்பி. ஆனாஒன்னுடா 
தம்பி. இந்த நாட்டுலே நான் சொன்ன அந்த நாலும்நீதி,நேர்மை,உண்மை,ஞாயம்,சத்தியம் இதெல்லாம் கடுகு அளவாவது இருந்த்துச்சுன்னு சொன்னா அந்த பொம்பள, நிச்சயம் உள்ளேதான் போகணும்.ஆண்டவன்எப்டிஎழுதிவச்சிருக்கானோ? யாருக்குலேதெரியும் அவன் போட்ட கணக்கு.

பொன் :- அண்ணே நீங்க சொல்றதைப்பாத்தா, அந்த அம்மையார் வெளியே வந்துருவாகளா ? சொல்லுண்ணே.

கன் :-  அடே தம்பி. நான் அப்டி சொல்லலே. நிச்சயம் குற்றம் செஞ்சது அது யாரா இருந்தாலும் தண்டனை பெற்றுத்தான் தீரனும். அது மட்டும் இல்ல. அதே குற்றத்தை அந்தாளு மறுபடியும் செய்யாதபடி அந்த தண்டனை 
வழங்குகிறவனே நல்ல அரசன் அதாவது இந்தக் 
காலத்துலே சொல்றதுன்னா நீதிபதி. என்னாலே சொல்றது உனக்கு இப்பனாச்சும் புரியுதாலே. பாப்போம்என்னதான்இங்கன நடக்கப்போவுதுன்னு. சரிலே. நான் போயிட்டு வாறன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.

Friday, February 19, 2016

மிகச்சிறந்த செல்வம் என்பது எது ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  பெரியாரைத் துணைக்கோடல்.


குறள் எண் :-  443.


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 

பேணித் தமராக் கொளல்... ... ...

பொருள் :-  அறிவிற் சிறந்த பெரியோர்களைப் 
போற்றித் தனக்கு உறவினராக ஆக்கிக் கொள்ளுதலேகிடைத்தற்கரிய செல்வங்களில் சிறந்ததாகும்.இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் ;-

சேகர் :-  எண்டா தம்பி நாராயணா நம்ம கோடி வீட்டு குமரேசனை ரொம்ப நாளாவே பாக்க முடியலியே.எங்கடா தொலைஞ்சு போனான் ?

நாராயணன் :- அண்ணே. அந்தப்பயலுக்கு இழவே இல்லண்ணே.

சேகர் :- ஏண்டா அப்டி சொல்றே ?

நாரா :- அந்தா பாருங்க. அதோ வந்துக்கினே இருக்கான்.

சேகர் :- அட..ஆமா..வாடா..வாடா..குமரா. எங்கடா
தொலைஞ்சு போன?பத்துநாளாஆளக்காணோம்.

குமரேசன்:-  அண்ணே எங்க தலைவர் கேப்டன் இல்ல கேப்டன்..அவரு மீட்டிங் சம்பந்தமா பத்து நாளா ஒரே வேலை. அதான்..வரமுடியலே.

சே :-  ஆமா ..அதுக்காக பத்து நாளாவா ? என்னடா சொல்றே ? சரி. மீட்டிங் முடிஞ்சுதா. 

குமரேசன் :-  முடிஞ்சுது அண்ணே.ரொம்ப சூப்பரா இருந்துச்சுண்ணே. அப்டி கோபாவேசமா பேசுனாரு.

சே :- அவருக்கு கோபத்தை என்ன கடையிலேயா வாங்கித்தரனும். என்ன கோபமோ அரசியல்லே தம்பி இப்டி எல்லாம் ஆவேசப்படப்படாது. பொறுமையா நிதானமா அமைதியா பதில் சொல்லன்னுண்டா தம்பி. நம்ம பெருசு 
கலைஞர் மாதிரி. உங்க கேப்டன் மட்டும் நம்ம முத்தமிழ் அறிஞர் மாதிரி அறிவிலே, ஆற்றலிலே,அனுபவத்துலே பெரிய மனிசர்களோடு நட்பு பாராட்டி அவங்க சொல்ற 
அறிவுரை கேட்டு கட்சி நடத்துனார்னு வச்சுக்க, உங்க ஆளு, எங்கயோ போயிருவாரு. முடிஞ்சா இத்த பத்தி அவர்கிட்டே எடுத்துச் சொல்லு. இத்த நான் ஒன்னும் சொல்லலே தம்பி. தமிழ்த் தாத்தா திருவள்ளுவர்தான் சொல்லிருக்காரு. அத்த நம்ம பாலு ஐயா எடுத்து இன்று தினம் ஒரு திருக்குறள் விளக்கத்துலே போட்ருக்காரு.
முடிஞ்சா படிச்சுப்பாரு. வரட்டா தம்பி.

நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா. பாலு.

Sunday, February 14, 2016

நல்லவர்களுக்கு நன்மை செய்யாதவன் யார் ? ( மனைவியைக் கண்டு அஞ்சுபவனே ) வள்ளுவர் வகுத்த வழி இதுதான் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பெண் வழிச்சேறல்.

குறள் எண் :-  905.


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்                                                                                                          றெஞ்ஞான்றும் 
நல்லார்க்கு நல்ல செயல்... ... ... 

பொருள் :-  மனைவியைக் கண்டு அஞ்சுகிறவன் 
எப்போதும், நல்லவர்க்கு நல்லது செய்ய அஞ்சுவான்.வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

ரமேசு :-  என்ன தம்பி சுரேசு. நம்ம தே.மு.தி.க. யாரோட கூட்டணி அமைக்கும்னு நினைக்கிறே ?
சுரேசு :-  அந்தக் கொடுமைய என்னத்த சொல்ல. அவருநல்லவர்தான்.
ரமேசு :- யாரு ? விஜயகாந்தா ?
சுரேசு :- ஆமா அவரேதான். அண்ணே அவரு அவரோட சம்சாரத்துக்கு ரொம்பவே பயப்படுறார் அப்டீன்னு நான் நினைக்கிறேன். அதாலேதான், அவரு திமுக காங்கிரஸ் அணியோட சேர முடியல. இத்தினிக்கும் அல்லா மாவட்ட 
செயலாளர்கள் அத்தினி பெரும் சொல்றாங்க இந்தத்தேர்தலில் நாம திமுக வோட கூட்டு சேரலை என்று சொன்னால், பேசாம கட்சிய கலைச்சுரலாம் அப்டின்னு சொன்ன பிறவும் இந்த பிரேமலதா அம்மா என்னடான்னா 
என்னென்னமோ பேசுகிட்டு திரியுது. அதாலே நான் என்ன சொல்றேன்னா விஜயகாந்த் அவரோட பொண்டாட்டிக்கு பயந்துகிட்டு இருக்கிரவரையிலும், நல்லவர்களோட 
சேரவும் முடியாது நல்ல கூட்டணியிலே இணையவும் முடியாது. இவரு அரசியல்ல ஜெயிக்கவும் முடியாது.சரிதானே நான் சொல்றது.
ரமேசு :-ரொம்ப கரீட்டா சொன்ன தம்பி.                   


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். திருமலை.இரா. பாலு.

Wednesday, February 3, 2016

எல்லாமே விதியின் வழியே செயல்படும் !! வள்ளுவர் வகுத்த வாழ்வின் நெறிமுறை !!






தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  ஊழ்.

குறள் எண் :-  377.



வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது... ... ... ...


பொருள்  :-  கோடி கோடியாய் செல்வம் 
இருந்தாலும்/சேர்த்தாலும் ஊழ் ( விதி )
வகுத்திருக்கும் வகையால் அன்றித் தாம் 
விரும்பியபடி அதனை அனுபவித்திட இயலாது.
இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜபாரு :-  என்ன தம்பி மன்னாரு ஆளைப் 
பாத்து ரெண்டு மூணு மாசத்துக்கு மேலே 
ஆகும்போல இருக்கு. எங்கடா  போன தம்பி.
மன்னாரு :- இல்ல..அண்ணே..தேர்தல் 
வருதில்ல.
ஜபா:-  ஆமா...வருது..அதுக்கு என்ன இப்ப?
மன்:-  அதாலே சின்னம்மா கூப்பிட்டு 
இருந்தாங்க. மக்களுக்கு சந்தேகம் வராம 
இருக்கணும் நாம கொள்ளையடிச்சு சேத்த
லட்சக்கனன்க்கான கோடிகள் மதிப்பு 
சொத்துக்களைப் பற்றிய கணக்கீடு ஒன்னு 
தோட்டத்துலே நடந்துச்சு. உங்களுக்குத்தான் 
தெரியுமே நான் அவங்க கணக்குத்தணிக்கை
நிறுவனத்துலேதான் வேலை செய்றேன்னு.
அதான் வேலை ரொம்ப கெடுபிடி..அதான்..
இந்தப் பக்கம் வரவே முடியல்லே..வேற 
ஒன்னும் இல்ல..அண்ணே..இதோ..இப்பகூட 
அங்கேதான் போயிக்கினு இருக்கேன்.
ஜபா:- ஓகோ ..அப்டியா சங்கதி...ஆனா ஒன்னு 
தம்பி.
மன்:- என்ன சொல்லுங்க அண்ணே.                 ஜபா:நீங்க..அதாவதுஉங்ககூட்டம்இங்கே எம்புட்டுத்தான் கூட்டு சேந்து கொள்ளைஅடிச்சாலும், எத எத நீங்க அனுபவிக்கனும்னு விதி இருக்கோ, அத்த மட்டும்தாண்டா தம்பி அனுபவிக்க முடியும். மிச்ச மீதி எல்லாம் விதியாலே பறிமுதல் செய்யப்பட்டு அரசு வசம் ஒப்படைக்கப்படும். அத்த மட்டும் நீ மறந்துராதே. மேலே நம்ம தினம் ஒரு குறள்விளக்கம் என்ன எழுதிருக்கு அப்டீன்னு நீ படிச்சுப் பாத்துட்டு போடா தம்பி..முடிஞ்சா அவங்ககிட்டே சொல்லு..உம்..நீ எங்கஅத்த சொல்லப்போறே..சொல்ல முடியும் சொன்னா..உங்கதையும் பொறவு கந்தல்தான். சரிடா..சரிடா..போயிட்டு வாடா..தம்பி..



நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.