Wednesday, February 3, 2016

எல்லாமே விதியின் வழியே செயல்படும் !! வள்ளுவர் வகுத்த வாழ்வின் நெறிமுறை !!






தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  ஊழ்.

குறள் எண் :-  377.



வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது... ... ... ...


பொருள்  :-  கோடி கோடியாய் செல்வம் 
இருந்தாலும்/சேர்த்தாலும் ஊழ் ( விதி )
வகுத்திருக்கும் வகையால் அன்றித் தாம் 
விரும்பியபடி அதனை அனுபவித்திட இயலாது.
இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜபாரு :-  என்ன தம்பி மன்னாரு ஆளைப் 
பாத்து ரெண்டு மூணு மாசத்துக்கு மேலே 
ஆகும்போல இருக்கு. எங்கடா  போன தம்பி.
மன்னாரு :- இல்ல..அண்ணே..தேர்தல் 
வருதில்ல.
ஜபா:-  ஆமா...வருது..அதுக்கு என்ன இப்ப?
மன்:-  அதாலே சின்னம்மா கூப்பிட்டு 
இருந்தாங்க. மக்களுக்கு சந்தேகம் வராம 
இருக்கணும் நாம கொள்ளையடிச்சு சேத்த
லட்சக்கனன்க்கான கோடிகள் மதிப்பு 
சொத்துக்களைப் பற்றிய கணக்கீடு ஒன்னு 
தோட்டத்துலே நடந்துச்சு. உங்களுக்குத்தான் 
தெரியுமே நான் அவங்க கணக்குத்தணிக்கை
நிறுவனத்துலேதான் வேலை செய்றேன்னு.
அதான் வேலை ரொம்ப கெடுபிடி..அதான்..
இந்தப் பக்கம் வரவே முடியல்லே..வேற 
ஒன்னும் இல்ல..அண்ணே..இதோ..இப்பகூட 
அங்கேதான் போயிக்கினு இருக்கேன்.
ஜபா:- ஓகோ ..அப்டியா சங்கதி...ஆனா ஒன்னு 
தம்பி.
மன்:- என்ன சொல்லுங்க அண்ணே.                 ஜபா:நீங்க..அதாவதுஉங்ககூட்டம்இங்கே எம்புட்டுத்தான் கூட்டு சேந்து கொள்ளைஅடிச்சாலும், எத எத நீங்க அனுபவிக்கனும்னு விதி இருக்கோ, அத்த மட்டும்தாண்டா தம்பி அனுபவிக்க முடியும். மிச்ச மீதி எல்லாம் விதியாலே பறிமுதல் செய்யப்பட்டு அரசு வசம் ஒப்படைக்கப்படும். அத்த மட்டும் நீ மறந்துராதே. மேலே நம்ம தினம் ஒரு குறள்விளக்கம் என்ன எழுதிருக்கு அப்டீன்னு நீ படிச்சுப் பாத்துட்டு போடா தம்பி..முடிஞ்சா அவங்ககிட்டே சொல்லு..உம்..நீ எங்கஅத்த சொல்லப்போறே..சொல்ல முடியும் சொன்னா..உங்கதையும் பொறவு கந்தல்தான். சரிடா..சரிடா..போயிட்டு வாடா..தம்பி..



நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.




No comments:

Post a Comment