Thursday, January 28, 2016

நாட்டின் மன்னன்/ஆளும் தலைமை எப்போது அழிந்துபோகும் ? வள்ளுவர் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- பெரியாரைத் துணைக்கோடல்.

குறள் எண் :-448.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்... ... ... 

பொருள் :-  தான் செய்கின்ற தவறை எடுத்துச் 
சொல்லித் திருத்திடும் பெரியோர்களை/
அறிஞர்களைப் பெற்றிடாத மன்னன்/ஆளும் 
தலைமை, அழிப்பவர்கள் எவருமே இன்றி 
அழிந்துபோவார்கள். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :- 

அருணகிரி :வாடாதம்பிசோணகிரி.உம்..அப்புறம் 
நேத்து என்ன விசேசம்.
சோணகிரி :- ஏண்ணே !! உனக்கு ஒரு விசயமும் 
நிசம்மா தெரியாதா ? இல்லாங்காட்டி நடிக்கிறியா தெரியாத மாதிரி. இல்ல கேக்கேன்.
அரு:- என்னடா..இது நீ பீடிகை போடுறத பாத்தா 
என்னமோ பெருசா நடந்திருக்கும்போல கீதே.
கொஞ்சம் சொல்றா தம்பி. நானும் அப்பால தெரிஞ்சுக்கிறேன்.
சோணகி:-  அண்ணே துறைமுகம் சட்டமன்ற 
உறுப்பினர் திரு.பழ.கருப்பையா அவுக இருக்காகளே 
அரு :- யாரு பல கட்சிகளுக்கு விஜயம் செஞ்ச அவரா ?சரி. அவருக்கென்ன இப்ப ?
சோண :- அவருக்கு என்னவா ? அண்ணே நேத்து அவரு சும்மா நாட்டையே கலக்கிப்புட்டாருல்ல.
அரு :- என்னடா கலக்கினாரு.
சோணகி:-  அண்ணே. அவரு காரைக்குடிக்காரர்.
நல்ல பாரம்பரியம் மிகுந்த குடும்பம் அவரது.
உழைச்சு பணக்காரர் ஆன பரம்பரை அவருக்கு.
இந்த ஆட்சியிலே நடக்குற அவலங்களை தலைமைய சந்திச்சு சொல்ல எம்புட்டோ முயற்சி செஞ்சு பாத்திருக்காரு.கடுதாசி கொடுத்திருக்காரு.ஊஹூம்..ஒன்னும்..
நடக்கலை. அதாலே ஆட்சியின் தவறுகளை அவரு வீதிக்கு வந்து மக்கள் கிட்டே தனக்கு வாக்களித்த மக்கள்கிட்டே எடுத்துச் சொல்லிட்டாரு. இதப்போயி தப்புன்னு எடுத்துக்கிட்டு அந்த பொம்பள இவரைக் 
கட்சியிலிருந்து நீக்க, உடனே இவரு பத்திரிக்கையாளர் கூட்டத்திலே நேத்து நடந்த அல்லாத்தையும் சும்மா சிதறுகாய் உடைச்ச மாதிரி புட்டு புட்டு வச்சுட்டார் அண்ணே. அந்தம்மா இப்ப முழியா முழிக்குது.
இதுதான் அண்ணே விஷயம்.
அரு:- சபாசுடா தம்பி. அப்டியா விசயம். தம்பி ஒரு நாட்டின் தலைமைக்கு/ ஆளும் பொறுப்பில் உள்ள அல்லாத்துக்கும்தான் சொல்றேன். அவுக செய்ற/அவுக ஆட்சியிலே நடக்குற தவறுகளை சுட்டிக்காட்டுற அறிஞர்கள், நம்ம பழ. கருப்பையா போன்றவர்கள் இல்லன்னு சொன்னா அழிக்கிரவங்கன்னு யாருமே 
இல்லாமலேயே அழிஞ்சு போயிருவாங்களாம் அவுக.இத நான் சொல்லல தம்பி.வள்ளுவர் சொல்லியிருக்காரு.அதைத்தான் நம்ம பாலு ஐயா மேலே எடுத்துப் போட்டிருக்கார்.
படிச்சுத் தெரிஞ்சுக்க எனக்கு நிறையவேலை கிடக்கு நான் வரேன் தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment