Friday, January 1, 2016

நன்றி மறந்தவருக்கு என்றுமே அந்தப் பாவத்திலிருந்து மீள்வதற்கு வழியே கிடையாது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் 
என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எனது 
               " தினம் ஒரு திருக்குறள் " எனும் வலைதளத்தினில்நான் பல்வேறு பால்களில் அமைந்துள்ள திருக்குறள்களுக்கு பொருளும் 
பின்பு அது சம்பந்தப்பட்ட விளக்கத்தை, நாட்டு 
நடப்பு விளக்கம் எனும் பெயரில் நேயர்களுக்கு 
வழங்கி வருகின்றேன். அதை உங்களில் எத்தனை நபர்கள் படித்து அதன் பொருள் உணர்ந்து தங்கள் வாழ்க்கை வழிமுறைகளில் மாற்றம் செய்துள்ளனரோநான் அறிந்திலேன். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய இந்த அரும்பெரும் வாழ்க்கை 
தத்துவ நூல் இல்லாத குறைதனை, எனது வலைத்தளம் ஓரளவிற்கு சரிசெய்கின்றது என்பது எனது மனதிற்கு நானே செய்து கொள்ளும் ஒரு சமரசம். உலகப்பொது 
மறை நமது திருக்குறள். அது தமிழ் மொழிக்கு, செய்துள்ள பெரும் பெருமையை வெறும் வார்த்தையினால் சொல்ல முடியாது. அதனை நமக்கு வடிவமைத்து தந்த அய்யன் 
திருவள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் மாபெரும் அதாவது 133 அடி உயரத்தில் ( நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களை உணர்த்தும் விதமாக) ஒரு எழில்மிகுந்த சிலைதனை வடிவமைத்திடவைத்து அதனை நிறுவிய 
பெருமை, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை மட்டுமே சாரும். ( அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தால் அந்த சிலை சரிவர பராமரிக்கப்படவில்லை)  அந்த சிலைதனை தலைவர் கலைஞர் அவர்கள்  நிறுவி அதனை திறந்து வைத்ததன் பதினாறாம் ஆண்டு நாள் இந்த நாள். இந்த ஒருசெயல் செய்தமைக்காகவே தலைவர் கலைஞர் அவர்கள் , இந்த உலகம் 
உள்ளவரை, தமிழ் இனம் இந்த புவியில் உள்ளவரை போற்றப்படுவார். பாராட்டப்படுவார். இதில் எள்ளின் முனை அளவுகூட தமிழ் 
மொழியின் ஆர்வலர்களுக்கு சந்தேகம் இல்லை என்று சொல்லி இப்போது நமது " தினம் ஒரு திருக்குறள் " எனும் வலைதலத்தினுள் 
செல்வோமா ? நேயர்களே !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  செய்ந்நன்றி அறிதல்.

குறள் எண் :-  110.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்                                                                                                  உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு... ... ...

பொருள்  :-  எத்தகைய நற்செயலை அழித்தவர்க்கும் அதனை மறந்தவர்க்கும் வாழ்வினில் அத்தகைய பாவத்திலிருந்து மீள்வதற்கு வலி உண்டு.  ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவற்கு மட்டும் அதில் 
இருந்து மீள வழியே இல்லை. இது வான்புகழ் அய்யன் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-                                                     


பிரபாகரு :-  வாங்க தம்பி திவாகரு !! இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.                         திவாகரு :-  அட..போங்க....அண்ணே !! நாம எல்லாம் தமிழர்கள் அப்டி இப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிட்டு இப்படி ஆங்கிலப் புத்தாண்டுக்குப் போயி வாழ்த்து சொல்றீங்களே அண்ணே இது என்ன நியாயம் ? இல்ல.. நான் தெரியாமத்தான் கேக்குறேன். 

பிரபா:- டே..டே..என்னடா தம்பி இப்டி மூக்கு முன்னாடி கோவத்தை வச்சுகிட்டு இருக்கே. அமைதி.அமைதி.                                                                தீவாக:- சரிண்ணே. அமைதியாயிட்டேன். இப்ப என்ன சொல்றீங்க.                                                               பிரபா:- தம்பி..நாட்டுலே நடக்குற கூத்து பாத்தியா?                                                                                      திவா:- என்ன கூத்து அண்ணே.                                          பிரபா:- அதுதாண்டா தம்பி.இந்த விஜயகாந்த்-ஜெயலலிதா  விவகாரத்தை சொல்றேன்.   இந்த பொம்பள இன்னைக்கு முதலமைச்சரா இருக்குன்னு சொன்னா, அதுக்கு நம்ம விஜயகாந்த் ஓட்டுக்கள்தான் முக்கியமான காரணம் அப்டீன்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா அத்த எல்லாம் இந்த பொம்பள மறந்துட்டு, ஏத்திவிட்ட ஏணியயையே எப்டி எட்டி உதைக்குது பாத்தியாடா தம்பி.                           திவா:- அண்ணே அதான் உலகம். எல்லாம் காரியம் முடியுறவரை அண்ணே !!முடிஞ்சா பிறவாட்டி போடா வெண்ணே !!. இது தெரிஞ்ச விஷயம் தானே அண்ணே.                                                பிரபா:-  தம்பி. தப்பு..தப்பு..அப்டி எல்லாம் அந்த பொம்பள பேசலாம்டா. நீ என்னோட தம்பி. நீயும் அந்த ஜெயலலிதா மாதிரி நன்றி மறந்து பேசாதேடா. அப்புறம் நீயும் அழிஞ்சு போயிருவே. திவா:- அண்ணே..என்ன..சொல்றீங்க.நான் அழிஞ்சு போயிருவேனா?                                                பிரபா:- இல்லடா தம்பி..ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம்ம வள்ளுவர் நன்றி மறந்தா என்ன நடக்கும் அப்டீன்னு நம்ம பாலு சார் எடுத்து போட்டிருக்குற குறளை நீயே படிச்சுப் பாருடா தம்பி. உனக்கு உண்மை புரியும். என்ன நான் வரட்டா ?



நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு..



No comments:

Post a Comment