Monday, January 18, 2016

மிகப்பெரிய குற்றம் என்பது எது ? திருவள்ளுவர் சொன்னது !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  குற்றம் கடிதல்.

குறள் எண் :- 438.


பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 

எண்ணப் படுவதொன் நன்று... ... ... 


பொருள் :-  பொருளிடத்தில் பற்றுக்கொள்ளும் 
பொருளாசை என்னும்ஈயாத்தன்மை,குற்றங்கள் 
என்று சொல்லப்படும் அனைத்திலும் தனித்தன்மை கொண்ட ஒரு மிகப்பெரிய குற்றமாகும். வான்புகழ்
திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

மன்னாரு :-  என்னங்க தம்பி சுதாகரு நல்லா இருக்கியா.உனக்கென்ன ஆளும்கட்சிக்காரன் நீ. உன்ட்ட போயி நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன் பாரு. என் புத்திய செருப்ப கழட்டிதாண்டா அடிக்கணும்.

சுதாகரு :-  அட..என்ன..அண்ணே..நீங்க ஒன்னு. இதுக்குப்போயி செருப்பு கிருப்புன்னு சொல்லிட்டு. விடுங்க அண்ணே.

மன்னாரு :- ஏண்டா தம்பி கடந்த நான்கரை ஆண்டுகளா எத்தனை லட்சம்டா சம்பாதிச்சு இருப்ப?

சுதா :- அட..போங்க அண்ணே..நீங்க.. என்ன சுத்த விவரம் இல்லாம கேட்டுகிட்டு இருக்கீங்க ? அதெல்லாம் அந்தக் காலம் அண்ணே . எத்தனை கோடி சம்பாதிச்சு இருக்கே ? அப்படி கேளு 
அண்ணே. என்ன நான் சொல்றது.

மன்ன:- தம்பி எனக்கு தலையே சுத்துதுடா. என்ன கோடியா?

சுதா :-  அண்ணே இதெல்லாம் இப்ப ரொம்பவும் சர்வ சாதாரணம்தான்.

மன்:-  ஏண்டா தம்பி இது இப்டி சம்பாதிக்கிறது தப்புன்னு உனக்கு தெரியலையாடா ?

சுதா :- அண்ணே நீங்க பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க.இதுதான் இப்ப உள்ள லேட்டஸ்ட் பாலிடிக்ஸ்.பணம் கொள்ளையடிக்கிறதுக்கு மட்டும்தான் நாங்க அரசியலுக்கே வறோம் அண்ணே.நீங்க பாட்டுக்கு...சும்மா கிடங்க அண்ணே.

மன்:- அப்டியாடா தம்பி. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்காருன்னு சொன்னா இந்த மாதிரி பொருளாசைதான்  இருக்கிற குற்றங்களிலேயே பெரிய குற்றம்னு இல்ல சொல்லியிருக்காரு ?

சுதா :- அப்டியா. அவரு சொல்லிட்டுபோயிட்டாரு 
அண்ணே. பொழைக்கிற வழியப் பாருண்ணே அதுதான் உனக்கு நல்லது.

மன் :- வேணாண்டா தம்பி. அப்படிப்பட்ட வழி உன்கிட்டே மட்டும் இருக்கட்டும். நான் வரட்டா.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.


No comments:

Post a Comment