Tuesday, January 19, 2016

இப்படிப்பட்ட ஆண்களை விட பெண்களே பெருமை உடையவர்கள் !! வள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- பெண்வழிச் சேறல்.


குறள் எண் :-  907.



பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்                                                                                        நாணுடைய 
பெண்ணே பெருமை உடைத்து... ... ... 


பொருள் :-  மனைவி இடுகின்ற கட்டளைகளுக்கு 
அஞ்சிநடக்கின்றஆண்களைவிடவும்இயல்பாக 
நாணத்துடன் வாழ்ந்திடும் பெண்ணே பெருமை உடையவள்.இது வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :  வணக்கம் தம்பி கடம்பா. என்ன ஒருவழியா பொங்கலை எல்லாம் வழியனுப்பி வச்சாச்சுட்டியாடா தம்பி.
கடம்பன் :- ஆமா அண்ணே. என்னத்தை வழி அனுப்பி வைக்க. வயித்தெரிச்சல். ஏன்னா 
பொங்கல் இலவசப்பொருள்கூட எங்களுக்கு நொள்ளைன்னு சொல்லிட்டாங்க. 
கந்த :-  சரி..சரி..விடுறா தம்பி. இந்த ஆட்சியிலே எதுதான் ஒழுங்கா நடந்திருக்கு சொல்லு பார்ப்போம். நான் இப்ப உன்கிட்டே வந்தது வேற ஒரு விஷயத்திற்கு.
கடம்:-  என்ன விஷயம் அண்ணே. சொல்லுங்க எனக்குத்தெரிஞ்சா சொல்றேன்.
கந்த :-  நம்ம பன்னீர் செல்வம் இருக்கானே.     கடம் :-  யாருன்னே நம்ம விஸ்வநாதன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுலே இருக்கானே அவனா ?

கந்த:- அவனேதான். கரெக்டா சொல்லிட்டியே. அவன் ஏண்டா எப்ப பாத்தாலும் உம்முன்னு இருக்கான். போதாக்குறைக்கு தாடிய வேற வளத்துகிட்டு பாக்கவே கண்ட்றாவியா இருக்கானே ஏனாம் ?
கடம் :-  அண்ணே உனக்கு விசயமே தெரியாதா ?
கந்த :- அட..தெரியாததாலேதானேடா உன்ட்ட கேக்குறேன்.
கடம் :- கிட்ட வாங்க அண்ணே இது ரொம்ப ரகசியமான விசயமுல்ல.
கந்:-  உம்..சொல்லு..சொல்லுறா..என் தம்பி...
கடம் :- அண்ணே அவன் பொண்டாட்டி இருக்காளே அதுதான் விஜயலலிதா பெரிய திமிர் பிடிச்சவ. அவ இவனை மதிக்கிறதே இல்லைல்ல. அது மட்டும் இல்ல அவ எந்த ஆம்பிளையையும் மதிக்கவே மாட்டாண்ணே.
கந்த :- சரி..சரி..விசயத்துக்கு வாடா தம்பி.
கடம் :-  அதாலே வீட்டுலே என்ன நடக்குதுன்னா இந்தப் பய பன்னீர்செல்வம் இருக்கானே அவன் அவளுக்குப் பயந்துகிட்டு  அவ என்ன வேலை சொன்னாலும்..என்ன வேலை சொன்னாலும் அத்த செஞ்சுகிட்டு வயுத்த கழுவி வாழ்ந்துகிட்டு 
கிடக்கான். ரொம்ப மானங்கெட்ட பொழைப்புத்தான்.இவனுக்கும் வேற கதியும் இல்லை. வழியும் இல்ல.இதுதான் அண்ணே விஷயம்.
கந்த :-  ச்சே !! கேக்கவே ரொம்ப கொடுமையா இருக்கே உம்.. இந்த பொழைப்பு பொழைக்கிறதுக்கு பேசாம நடுத்தெருவுலே 
நாலு பேருக்கு ....எனக்கு என்னமாத்தான் வருது வாயிலே.
கடம் :- ஆமா அண்ணே. எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்ய ? ஆட்சி,அதிகாரம் அவன் மனைவி 
விஜயலலிதா கிட்டே இல்ல இருக்கு.
கந்த :- தம்பி இந்த மாதிரி எதிர்காலத்துலே மனுசங்க இருப்பானுங்க என்று எண்ணித்தான் நம்ம திருவள்ளுவர் ஒரு திருக்குறள் எழுதி இருக்கார். அத்த நம்ம மதுரை TR.பாலு ஐயா எடுத்துப் போட்டிருக்காருடா தம்பி. ஏவல் 
செய்திடும் பெண்களிடம்அதாவதுமனைவியிடம் இருந்து அதன்படி செய்து இங்கே வாழ்ந்து வருகின்ற ஆம்பிளைகளை விடவும் பொம்பளைகளே மேல் என்று. முடிஞ்சா நீ படிறா 
தம்பி. நான் வாறன்.

நன்றி.வணக்கம்.
அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment