Friday, February 19, 2016

மிகச்சிறந்த செல்வம் என்பது எது ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  பெரியாரைத் துணைக்கோடல்.


குறள் எண் :-  443.


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 

பேணித் தமராக் கொளல்... ... ...

பொருள் :-  அறிவிற் சிறந்த பெரியோர்களைப் 
போற்றித் தனக்கு உறவினராக ஆக்கிக் கொள்ளுதலேகிடைத்தற்கரிய செல்வங்களில் சிறந்ததாகும்.இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் ;-

சேகர் :-  எண்டா தம்பி நாராயணா நம்ம கோடி வீட்டு குமரேசனை ரொம்ப நாளாவே பாக்க முடியலியே.எங்கடா தொலைஞ்சு போனான் ?

நாராயணன் :- அண்ணே. அந்தப்பயலுக்கு இழவே இல்லண்ணே.

சேகர் :- ஏண்டா அப்டி சொல்றே ?

நாரா :- அந்தா பாருங்க. அதோ வந்துக்கினே இருக்கான்.

சேகர் :- அட..ஆமா..வாடா..வாடா..குமரா. எங்கடா
தொலைஞ்சு போன?பத்துநாளாஆளக்காணோம்.

குமரேசன்:-  அண்ணே எங்க தலைவர் கேப்டன் இல்ல கேப்டன்..அவரு மீட்டிங் சம்பந்தமா பத்து நாளா ஒரே வேலை. அதான்..வரமுடியலே.

சே :-  ஆமா ..அதுக்காக பத்து நாளாவா ? என்னடா சொல்றே ? சரி. மீட்டிங் முடிஞ்சுதா. 

குமரேசன் :-  முடிஞ்சுது அண்ணே.ரொம்ப சூப்பரா இருந்துச்சுண்ணே. அப்டி கோபாவேசமா பேசுனாரு.

சே :- அவருக்கு கோபத்தை என்ன கடையிலேயா வாங்கித்தரனும். என்ன கோபமோ அரசியல்லே தம்பி இப்டி எல்லாம் ஆவேசப்படப்படாது. பொறுமையா நிதானமா அமைதியா பதில் சொல்லன்னுண்டா தம்பி. நம்ம பெருசு 
கலைஞர் மாதிரி. உங்க கேப்டன் மட்டும் நம்ம முத்தமிழ் அறிஞர் மாதிரி அறிவிலே, ஆற்றலிலே,அனுபவத்துலே பெரிய மனிசர்களோடு நட்பு பாராட்டி அவங்க சொல்ற 
அறிவுரை கேட்டு கட்சி நடத்துனார்னு வச்சுக்க, உங்க ஆளு, எங்கயோ போயிருவாரு. முடிஞ்சா இத்த பத்தி அவர்கிட்டே எடுத்துச் சொல்லு. இத்த நான் ஒன்னும் சொல்லலே தம்பி. தமிழ்த் தாத்தா திருவள்ளுவர்தான் சொல்லிருக்காரு. அத்த நம்ம பாலு ஐயா எடுத்து இன்று தினம் ஒரு திருக்குறள் விளக்கத்துலே போட்ருக்காரு.
முடிஞ்சா படிச்சுப்பாரு. வரட்டா தம்பி.

நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா. பாலு.

No comments:

Post a Comment