Wednesday, February 24, 2016

நல்ல அரசன் என்பவர் யார் ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம:-  வெருவந்த செய்யாமை.

குறள் எண் :-  561.



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து... ... ... 


பொருள்:-  தகுந்த முறையில் ஆராய்ந்து குற்றம் 
செய்தவன், மேலும் குற்றம் செய்யாமல் இருக்க,
ஏற்றவகையில் தண்டனையை அளிப்பவனே 
நல்ல அரசன்/நீதிபதி  ஆவான்.  இது வான்புகழ்
திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கன்னையா :-  வாங்க தம்பி  பொன்னையா. 
நல்லா இருக்கீகளா ? உம்..அப்புறம்..வேற..
என்னலே தம்பி விசேசம். சொல்லுங்க தம்பி.

பொன்னையா :-  அண்ணே என்னண்ணே
காலங்காத்துலே என்னையப்போயி நீங்க 
இம்புட்டு உடைசல் பண்ணுதீக.

கன்:- இதென்னடா கொடுமையா போச்சு.
ஏலே நல்லா இருக்கியான்னு கேட்டது 
தப்பாடா சாமி. இனிமே கேக்கல சாமி.

பொன்:- அட..அதுக்கில்லைண்ணே. நீங்க இம்புட்டு விசாரிக்கியளே அதான் கேட்டேன். சரி 
அண்ணே  அத விடுங்க. ஒரு வழியா நம்ம 
அம்மையாரோட சொத்துக்குவிப்பு வழக்கு 
உச்ச நீதி மன்றத்துலே விசாரணைக்கு 
வந்துருச்சு போல. என்ன ஆகும் அண்ணே 
முடிவு.

கன் :- ஏலே !! உனக்கு அதுக்குள்ளே என்னலே
அம்புட்டு அவசரம். பொறுமையா என்ன நடக்குன்னு பாத்துக்கிட்டு கிடலே. இன்னும் எம்புட்டோ படிகள் தாண்டிப் போகனும்லே வழக்கு.

பொன் :- இருக்கட்டும் அண்ணே. கடோசியிலே
நீதிதானே ஜெயிக்கும். என்ன நான் சொல்றது ?

கன்: அடடா..உனக்குஎப்டிபுரியவைக்கிறதுன்னு 
எனக்கு தெரியலே தம்பி. இந்த நீதி,நேர்மை,
உண்மை, ஞாயம், சத்தியம், இது எல்லாம் தம்பி
வைட்டமின் "ப" வுக்கு புறவு தான்லே. சொன்னா 
புரிஞ்சிக்கலே.

பொன் :- வைட்டமின் ப  வா. அப்டின்னா என்னண்ணே ?

கன்:- தம்பி வைட்டமின் ப  அப்படீன்னு சொன்னா 
எல்லாம் துட்டுத்தாண்டா தம்பி. ஆனாஒன்னுடா 
தம்பி. இந்த நாட்டுலே நான் சொன்ன அந்த நாலும்நீதி,நேர்மை,உண்மை,ஞாயம்,சத்தியம் இதெல்லாம் கடுகு அளவாவது இருந்த்துச்சுன்னு சொன்னா அந்த பொம்பள, நிச்சயம் உள்ளேதான் போகணும்.ஆண்டவன்எப்டிஎழுதிவச்சிருக்கானோ? யாருக்குலேதெரியும் அவன் போட்ட கணக்கு.

பொன் :- அண்ணே நீங்க சொல்றதைப்பாத்தா, அந்த அம்மையார் வெளியே வந்துருவாகளா ? சொல்லுண்ணே.

கன் :-  அடே தம்பி. நான் அப்டி சொல்லலே. நிச்சயம் குற்றம் செஞ்சது அது யாரா இருந்தாலும் தண்டனை பெற்றுத்தான் தீரனும். அது மட்டும் இல்ல. அதே குற்றத்தை அந்தாளு மறுபடியும் செய்யாதபடி அந்த தண்டனை 
வழங்குகிறவனே நல்ல அரசன் அதாவது இந்தக் 
காலத்துலே சொல்றதுன்னா நீதிபதி. என்னாலே சொல்றது உனக்கு இப்பனாச்சும் புரியுதாலே. பாப்போம்என்னதான்இங்கன நடக்கப்போவுதுன்னு. சரிலே. நான் போயிட்டு வாறன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.

No comments:

Post a Comment