Monday, March 7, 2016

ஆள்பவர்களின் செல்வத்தை அழித்திடும் கருவி எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.

குறள் எண் :-  555.


அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை... ... ...

பொருள் :-  குடிமக்கள் துன்பம் தாளாமல் 
விடுகின்ற கண்ணீர்தான் ஆள்பவர்களது
செல்வத்தை அழிக்கும் போர்க் கருவி ஆகும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

செல்லப்பா :-  என்ன தம்பி !! கண்ணப்பா !! 
தேர்தல் தேதி அறிவிச்சாலும் அறிவிச்சாங்க.
ஒரே பரபரப்பரப்பா திரியுற போலருக்கு.
கண்ணப்பா :-  ஆமா அண்ணே !! இதுதானே 
எங்களமாதிரி ஆளுங்களுக்கு சூப்பரா 
சம்பாதிக்குறதுக்கு நல்ல சமயம்.இத விட்டா 
இன்னும் அஞ்சு வருஷம் ஆகுமே .என்ன நான் 
சொல்றது ? சரிதானே.
செல் :-   ஆமாமா..அதெல்லாம் சரிதான். ஆனா 
இங்க வேற ஒரு விஷயம் இல்ல இடிக்குது.
கண் :-  அது ஏன்னா அண்ணே.
செல் :-  தம்பி.கடந்த அஞ்சு வருசமா உங்க ஆட்சி 
நடந்துச்சா. அதுலமக்கள்எம்புட்டுகஷ்டப்பட்டாக 
கண்ணீர் விட்டாக. அது ஒன்னே போதும்டா தம்பி.உங்க தலைமை சேர்த்து வச்ச செல்வம் எல்லாம் தவிடு பொடியா போவதற்கு. நீங்க இத்தனை நாளும்கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கப் போகுதுடா தம்பி. எல்லாம் இன்னும் ஒரு அறுபது நாள்தாண்டாஉங்க ஆட்டமெல்லாம். பாத்து மெதுவா நடந்துக்க 
இல்லன்னு சொன்னா கதை கந்தல்தாண்டா தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு. 

No comments:

Post a Comment