Monday, March 28, 2016

இவரது நட்பு இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? வள்ளுவர் தந்த விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  தீ நட்பு.

குறள் எண் :- 812.


உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்... ... ... 

பொருள் :-  தேவைப்படும்போது மட்டும் பழகி,
தேவை அற்றபோது விட்டு நீங்குகின்ற பொருத்தம் இல்லாத நட்பு, இருந்தால் என்ன ? இழந்தால் என்ன ?இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கண்ணம்மா :- வாங்க பொன்னம்மா அக்கா. என்ன உங்க சேரியிலே அரசியல் நிலவரம் எப்படி அக்கா இருக்கு ?
பொன்னம்மா :- எல்லோரும் எப்ப தேர்தல் வரும் 
உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுவோம் இரட்டை 
இலைய ஓட்டி விரட்டுவோம்னுதான்டி அங்கே   காத்துக்கிட்டு இருக்கோம்.

கண் :-  அது சரி அக்கா. இந்த வைகோ ஏன் இப்படி வால் அறுந்த நாய் போல வாள் வாள்னு கத்திட்டே கிடக்காரு ?

பொன் :- அவரு கிடக்காரு நன்றி கெட்ட நாமிருதாப்பய.அவருக்கு அரசியல்லே அறிமுகம் செஞ்சு வச்சது நம்ம தல கலைஞர். மூன்று முறை மாநிலங்களவையில் உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்ததும் கலைஞரே.
அதனால அவரு பல்லாயிரம் கோடிகளை பற்பல 
வணிக நிறுவனங்களை தொடங்கி சம்பாறிச்சதும்கலைஞர் ஒருத்தராலேதான். தனக்கு பலன் கிடைச்ச போது திமுக விலே இருந்ததும், இப்ப திமுக  பதவியிலே இல்லங்கிறதாலே எதிர்த்து நன்றி 
மறந்து பேசுறதும் நல்லா இல்ல. அவரு குடும்பம் 
புள்ளை குட்டி விளங்கவா போகுது.

கண் :- அக்கா. சரியாச் சொன்னீங்க. இதே கருத்தைத்தான் இன்னைக்கு நம்ம மதுரை TR. பாலு சார் எடுத்துப்போட்டிருக்கிற " தினம் ஒரு திருக்குறள் " பகுதியிலே நம்ம வான்புகழ் திருவள்ளுவர் கூட ஒரு குறளில்
இந்தக் கருத்தை சிறப்பாக எழுதியிருந்ததை எடுத்துப் போட்டிருக்காரு அக்கா. அவசியம் படிங்க. அப்புறம் எனக்கு கொஞ்சம் வீட்டு வேலை இருக்கு அக்கா.நாம நாளைக்கு சந்திப்போம் அக்கா. வாறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment