Sunday, April 24, 2016

விதி எண் 110 ன் கீழ் அறிவித்த திட்டங்கள் !! இதற்கு உண்டான திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வினைத்திட்பம்.

குறள் எண் :-  664.




சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 

சொல்லிய வண்ணம் செயல்... ... ... 

பொருள்  :-  இந்த செயலை, இந்த வகையில் 
செய்து முடிப்பேன், என்று வாயால் சொல்வது 
எல்லோருக்கும் எளிய செயல். சொல்லியவாறு 
செய்து முடிப்பது அரிய செயல். இது வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன்பொருளும் 
ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜபாரு :-  என்னடா தம்பி மன்னாரு, என்னா தேர்தல் அறிவிச்சாலும் அறிவிச்சாங்க தம்பி காட்டுலே நல்ல மழைதான் போல. ஆளும் கட்சி தொண்டன்னா இன்னா சும்மாவா. தம்பி அண்ணன் நான் ஒருத்தன் இருக்கேண்டா மறந்துராதே. என்ன..நான்..சொல்றது..சரிதானே.

மன்னாரு :- அண்ணே என்னான்னே இப்டி கேட்டுப்புடீங்க.அண்ணே மெய்யாலுமே சொல்றேன்!!நீங்க இல்ல!! நான் இல்ல !!.. என்னைக்குமே இத்த நான் மறக்கவே மாட்டேன்.
அந்தக் காலத்துலே என்கு நீங்க எம்புட்டு உதவி செஞ்சு இருக்கீங்க. அத்த எல்லாம் மறந்தா இந்தக்கட்டை வேகாதுன்னே. உக்கும்..

ஜபாரு :- சரிடா..சரிடா..தம்பி..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வுடாதே. அப்பாலே நானும் அழுதுருவேன். ஆமா ஏண்டா தம்பி, அஞ்சு வருசத்துலே அந்த பொம்பளே சொன்ன 
எதுவுமே செய்யலே. அப்பாலே என்ன சொல்லி ஒட்டு கேப்படா தம்பி. இல்ல..கேக்குறேன்.

மன்னாரு :- அண்ணே.. என்ன ஒன்னும் புரியாத மாதிரி பேசுறீங்க. கொள்கை பேசி ஒட்டு கேட்டது அந்தக்காலம்.

ஜபாரு :- உம்..பாருடா..பிறவு..என்னாது இந்தக்காலம் ?

மன்னாரு :-  கொள்ளையடிச்சு சேத்துவச்ச பணத்தை கொஞ்சம் வீசி எறிஞ்சு ஒட்டு கேக்குறது இந்தக்காலம்.இதாண்ணே எங்க கொள்கை. பணத்தை பாத்தா பொணம்
கூட வாய் திறக்கும்..உக்கும்..

ஜபாரு :- தம்பி..நீ சொல்றது சரிதான். ஆனா இப்ப நிலைமை அப்டி இல்லைடா தம்பி. அந்த பொம்பளே மேலே ஜனங்க ரொம்ப கோவமா கீராங்கடா. ஏன்னா சட்டசபை விதி எண்
110 ஐ வச்சுகிட்டு கடந்த அஞ்சு வருசமா நல்லா அல்வா கிண்டிக்கினே இருந்தாங்க. ஒரு விசயம்கூட செய்யலே.அப்பாலே எப்டிரா தம்பி ஜனம் ஒட்டு போடும் ? நீயே சொல்லுதம்பி. நம்ம மதுரை TR. பாலு சார் இருக்காரே....

மன்னாரு :- யாரு... இந்த பேஸ்-புக்ல நீதி, நியாயம், நேர்மை அரசியல், திருக்குறள் இத்த பத்தி எழுதிக்கினே இருப்பாரே அவுரா ? அவருக்கென்ன அண்ணே ?

ஜபாரு :- கரீட்டா புடிச்சுட்டியே. அவரேதான். அவரு இன்னைக்கு இன்னா குறள் எடுத்து எழுதி விளக்கம் சொல்லிருக்காருன்னா சொல்றது அல்லார்க்கும் ஈசி. ஆனாக்கா சொன்ன மாதிரி 
செய்யறது படு கஷ்டம்டா சாமி அப்படீன்னு வள்ளுவர் சொல்லிகீறாரு. அத்த நீயும் படி. முடிஞ்சா உங்க தலைவி கிட்டேயும் போயி சொல்லு.இந்தத்தேர்தல்லேஅந்த அம்மாவுக்கு "கோவிந்தா-கோவிந்தா " தாண்டா தம்பி. நான் வாறன் கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு பாப்போம்டா தம்பி.

மன்னாரு :- சரிங்க அண்ணே.அப்பாலே நாளைக்கு சிந்திப்போம் அண்ணே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.  மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment