Tuesday, May 10, 2016

காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் !! திருவள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-     காலம் அறிதல்.

குறள் எண்  :-      486.


ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ...


பொருள் :-  சண்டை செய்திடும் ஆட்டுக்கடா 
பின்வாங்கிச்செல்வதுபோல,ஊக்கம்உடையவன் தக்ககாலத்தைநோக்கிப்பொறுமையுடன் 
காத்திருபான்.  இது வான்புகழ் திருவள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

பிரேமானந்தா :-  என்ன ஸ்வாமி நித்தியானந்தா!!
தாங்கள்ஈசனருளுடன்நலமாகஇருக்கிறீர்களா ?

நித்தியானந்தா :-  ஆம் ஸ்வாமி. எல்லாம் அவன் 
செயல். அவனன்றி அணுவும் அசையாது. நான் 
நலமே. தாங்கள் ?

பிரேமா:-  தமிழகத்தில் தேர்தல் நிலவரம் எப்படி 
உள்ளது ? தாங்கள் சென்று கவனித்தீர்களா ?
விபரமாகச் சொல்லுங்கள்.

நித்தியா:-  ஆம் ஸ்வாமி. தமிழகம் முழுவதும் 
மாறுவேடத்தில் சென்று தொகுதிகள் அனைத்தும் சுற்றிப்பார்த்தேன். 

பிரேமா:- நிலவரம் எப்படி உள்ளது ?

நித்தி:-  எல்லாம் நமது கலைஞரின் திமுக விற்கே சாதகமாக உள்ளது ஸ்வாமி.

பிரேமா :- அப்படியா ? கேட்பதற்கே மிகவும் 
மன மகிழ்ச்சியாக உள்ளது. சரி கடந்த ஐந்து 
ஆண்டுகளாக மிகுந்த பொறுமையுடன் இருந்த 
தமிழ் இனத்தலைவரின் நிலையை நாம் எதனோடு நாம் ஒப்பிடலாம் ? சரியாகத் தாங்கள் விடை அளித்தால்,தாங்கள் மீண்டும் உங்கள் அன்பு சிஷ்யை ரஞ்சிதாவுடன் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுபட்டு மறுபடி 
ஈசன் பூஜையில் இருவரும் ஒன்றாகவே ஈடுபட 
நான் அருள்புரிகிறேன்.

நித்தி :- மிக மிக மன மகிழ்ச்சி அடைந்தேன் ஸ்வாமி.கலைஞரின் பொறுமை, களத்தில் சண்டை போடுகின்ற ஆட்டுக்கிடா எப்படி பின் வாங்கி பிறகு மிகுந்த பலத்துடன் எதிரில் நிற்கின்ற ஆட்டுக்கிடாவின் மீது மோதி அதனை வீழ்த்தி வெற்றி பெறுகிறதோ, அது போன்ற நிலையே கலைஞரின் நிலை. அதுபோல 
அவர் ஜெயாவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் 
அமர்ந்திடுவார். சந்தேகமே இல்லை ஸ்வாமி.

பிரேமா :- சபாஷ். மிகச் சரியாகச் சொன்னீர்கள் 
நித்தியானந்தா. தாங்கள்சென்றுஉங்கள்சிஷ்யை 
ரஞ்சிதாவோடு ஒன்றிணைந்து பூஜையில்ஈடுபட 
வாழ்த்தி மகிழ்கின்றேன்.

( அன்பர்களே நாட்டு நடப்பு விளக்கம் நிறைவடைகிறது)

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.