Monday, January 16, 2017

ஒருவருக்கு நல்லது செய்வதிலும் நமக்கு கெடுதல் ஏற்படக்கூடும் !! திருவள்ளுவர் அருளிய கருத்து !!



ஒருவருக்கு நல்லது செய்வதிலும் நமக்கு கெடுதல் ஏற்படக்கூடும் !! 

திருவள்ளுவர் அருளியகருத்துஇது !!


தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்   :-  தெரிந்து செயல்வகை.

குறள் எண் :-  469.


நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் 

பண்பறிந் தாற்றாக் கடை... ... ... 

பொருள் :-  அவரவர்களுடைய பண்புகள் அறிந்து,
அதற்கு ஏற்றவாறு நாம் செயல்படவில்லை என்றால்,அவருக்கு நாம் நல்லது செய்வதிலும் நமக்கு இழுக்கு ஏற்படும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

பொன்னுத்தாயி :- உம்...என்ன செல்லத்தாயிக்கா 
அந்தப் பொம்பள செத்துப்போய் நாப்பது நாளைக்கு மேல ஆயிருச்சு. எம்புட்டு அரும்பாடு பட்டு கஷ்டப்பட்டு எத்தன பேர மோசம்பண்ணி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எண்ணிக்கையே தெரியாத அளவுக்கு 
பணம்,தங்க,வைர,வைடூர்ய,பிளாட்டின இத்யாதி..இத்யாதின்னு சேர்த்து வச்சு, அசையாச் சொத்துக்கள் கணக்கிலடங்காதது என அம்புட்டும் சம்பாரிச்சு.... பாரேன் கடைசியிலே என்ன ஆச்சு ?

செல்லத்தாயி :- என்னத்தா ஆச்சு கடைசியிலே அத்தயும்நீயே சொல்லிப்புடு.... உக்கும்....

பொன்னு:-  என்ன ஆச்சா ? கூடவே ஒரு மூதேவிய தோழின்னு சேர்த்து வச்சிருந்தாங்கல்ல..

செல்ல :- ஆமா..யாரு..அந்தக் குடிகேடுத்தவ அதான்..அவபேருகூடஎனக்குமறந்துபோச்சே...ஆஇப்ப ..ஞாபகம் வந்திருச்சு..அந்த அவ..புஷ்கலாவை சொல்லுதியா ?

பொன்னு :-  அந்தப் பொட்டுக்கெடுத்த முண்டையத்தான்..என்ன செஞ்சா பாத்தியா..கடைசியிலே நல்லா 
இருந்த அந்தபொம்பளைய கீழே தள்ளிவிட்டு சாவடிச்சு அந்தால ரவுடிகள வச்சு அத்தாமொக்க ஆஸ்பத்திரி ஆளுகளையே பயமுறுத்தி, கிட்டத்தட்ட எழுபது எம்பது நாளைக்கு மேல செத்த பொணத்துக்கு இல்லடி வைத்தியம் பாக்க வச்சு, கடைசியில இப்ப என்ன ஆச்சு அம்புட்டு சொத்தையும் இந்த புஷ்கலா முண்டை 
ஆட்டையபோட்டுட்டாடி.. ஆட்டையப்போட்டுடா..
நல்ல பொம்பளயா இல்ல கெட்டவளாஅப்டின்னு 
தெரிஞ்சு சேக்காததால, கூடவே இருந்து குழியிலே தள்ளிப்புட்டால்ல. இதுக்குத்தான் அந்தக்காலத்துல சேரிடம் அறிந்து சேர் !! அப்டீன்னுபெரியவக நமக்கு சொல்லிருக்காங்க.

செல்லத்:-  இதையேதான் இன்னைக்கு நம்ம மதுரை பாலு ஐயா அவுங்க தினம் ஒரு திருக்குறள் முகநூல் பதிவுல வள்ளுவர் சொன்ன கருத்தை அழகா எடுத்துப் 
போட்டிருக்கார். நாம யாருக்கும் நல்லது செய்றதுக்கு முன்னாடி ஆளு எப்டிப்பட்ட ஆளு அத்த முதல்ல சரி பாத்துட்டு, அதுக்கு புறவுதான் அவுகள நாம கூட சேத்துக்கனும் அவுங்களுக்கு நல்லது செய்யணும்.அப்டி இல்லாங்காட்டி, அவுங்களுக்கு நாம செய்யற நல்லதே நமக்கு கெடுதலா வந்து சேரும். எப்படி நம்ம வள்ளுவர் ஐயா ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்காரு பாரு. சரிங்கக்கா கொஞ்சம் சந்தைக்கு போயி காய்கறி வாங்கணும்.
அப்பால நாளைக்கு நாம பார்க்கலாம். வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.