Friday, August 21, 2015

வெற்றி பெறினும் வேண்டாம் !! சூது விளையாட்டு !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  சூது.


குறள் எண் :- 196.



வேண்டற்க வென்றிடினும் சூதினை                                                                               வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று... ... ... 



பொருள் :-  சூதினால் வென்ற பொருள், தூண்டில் 

முள்ளை மீன் விழுங்கியதைப் போன்றது. 

ஆதலால் வெற்றியையே தந்தாலும் 

சூதாட்டத்தை மக்கள் விரும்பக்கூடாது. இதனை 

மீறி விரும்பினால், அது தாங்க முடியாத 

துன்பத்தை மட்டுமே தரக்கூடியது. இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.               

நாமும் வான்புகழ் வள்ளுவர் அறிவுரைப்படி 

வாழ்ந்திடுவோம்.                                                               


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன் திருமலை.இரா.பாலு.





Thursday, August 13, 2015

பொருளைக்கொடுத்து தன்னை மறக்கும் நிலையை கள் (மது) உண்பவரே செய்வார்கள் !! திருவள்ளுவர் சொல்லிச்சென்ற அருள் உரை !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  கள்ளுண்ணாமை.



குறள் எண்:-  925.



கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து 


மெய் யறியாமை கொளல்... ... ... 


விளக்கம் :-  பொருளைக் கொடுத்து உடல் 

மறக்கும் நிலையினைத் தேடிக்கொள்வது, தனது 

செயல் பற்றிய அறியாமையினால் உண்டாவதே 

ஆகும்.இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

பிச்சையா :-  என்ன தம்பி கருப்பையா மணி 

ஒன்பது ஆயிருச்சு. இன்னும் டாஸ்மாக் 

கடைக்குப் போயி சரக்கு வாங்கி வரல்லையா. 

நானும் உங்களுக்கு எவ்வளவோ 

சொல்லிட்டேன். நீங்களும் ஒன்னும் 

திருந்துகிற மாதிரி தெரியல்லை. தலைஎழுத்து 

என்னவோ அதுதான் நடக்கும்.

கருப்பையா :-  இல்ல அண்ணே சரக்கு உள்ளே 

போனால்தான் அண்ணே சொர்க்கம் தெரியும்.

நம்மளை நாமே மறக்க வைக்குற சக்தி இந்த 

மது ஒன்னுக்குத் தானே இருக்கு. 

அதனால்தானே நாங்களும் தினசரி இதை 

குடிக்கிறோம்.

பிச்சை :-  ஏண்டா இதை சொல்றதுக்கு உனக்கு 

வெட்கமா இல்லை. உன் காசைக்கொடுத்து 

உன்னை நீயே மறக்குறதுக்குப் பேர்தான்டா 

போதையா. நீயே சிந்தித்துப் பார். இது 

நிலையானதா இல்லையே. காலையிலே 

தெளிஞ்சிரும் அல்லவா.

அதனால்தான் அறிவுடையோர்கள் யாரும் 

இத்தை குடிக்கிறது இல்லைடா. இன்னைக்கு 

நம்ம நாடே இந்த மது அரக்கனை எதிர்த்து 

போராடுது. நீங்களும் இதை விட்டு 

விலகுங்கடா. அதுதான் நீங்க உங்களால் 


கஷ்டப்பட்டு தேடிய பணத்துக்கு நீங்க தருகின்ற 

உண்மையான மரியாதை ஆகும். இதுக்குமேலே 

நான் உங்களுக்கு புத்திமதி சொல்லமாட்டேன்.

அப்படி சொன்னா செருப்பை கழட்டி அடிங்கடா.


கருப்:-  அண்ணே என்ன அண்ணே சத்தியமா 

நாங்க சொல்றோம். இனிமே நாங்க தண்ணி 

அடிக்கவே மாட்டோம். இது எங்க தாய்மீது 

சத்தியம்.


பிச்சை:- ரொம்ப ரொம்ப நன்றிங்க தம்பிகளா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா.பாலு.