Wednesday, September 24, 2014

செல்வம் வந்தபோது எப்படி இருக்க வேண்டும் ? வள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  மானம்.



குறள் எண் :-  963.



பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய


சுருக்கத்து வேண்டும் உயர்வு... ... ... ... ...



விளக்கம் :-  செல்வம் பெருகிய காலத்தில் 


ஒருவன் பணிவுடன் நடக்க வேண்டும். 


செல்வம் சுருங்கிய காலத்தில் பெருமிதம் 


கொண்டு நடந்திட வேண்டும். வான்புகழ் 


வள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.

Monday, September 15, 2014

கீழ்மக்கள் அழுந்திடும் நரகம் எது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :-  919.




வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்


பூரியர்கள் ஆழம் அன்று... ... ... 



விளக்கம் :-அளவுக்கதிகமான அணிகலன்களை


அணிந்துள்ள விலைமகளிரின் இனிய தோள்கள், 


அறிவில்லாத கீழ்மக்கள் அழுந்துகின்ற நரகம் 


ஆகும்.   இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


இன்றைய தினம் அவசரகதியில் சுழன்றுவரும் 


உலகினில், சென்னை போன்ற பெருநகரங்களில் 


எங்கு பார்த்தாலும் விலைமாதர்கள் 


உலாவருதல் அங்கிங்கெனாதபடி எங்கும் 


நடக்கும் ஒரு தினசரி நிகழ்வாகவே 


காணப்படுகிறது.  இதில் நாம் மிகவும் 


முக்கியமாக கவனிக்கவேண்டிய அம்சம் என்ன 


என்று கேட்டால், திருமணமாகி மனைவி,மக்கள் 


இவர்களோடு வாழ்ந்துவரும் பலரும் 


இதுபோன்ற விலைமாதர்களை நாடிச் 


செல்லுதல் என்பது நாளுக்குநாள் 


அதிகரித்துக்கொண்டு வருவதாகவே புள்ளி 


விபரங்கள் நமக்கு எடுத்துரைப்பதுஉண்மையில் 


வேதனைக்கு உரிய விஷயமாகவே நாம் 


உணர்கின்றோம். இதை எவ்வாறு தவிர்ப்பது 


என்று அந்த விலைமாதினை 


நாடிச்செல்வோர்களின் மனைவிமார்கள் 


கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.சனியன், 


எங்கையாவது தொலைந்துபோகட்டும் என்றே 


அவர்கள் இதை சர்வசாதாரணமான ஒரு 


நிகழ்வாகவே இதனை அணுகுவது 


இச்செயலுக்கு மேலும் எரிபொருளை 


ஊற்றுவதுபோலவே நாம் உணர்கின்றோம். ஏன் 


நம் வீட்டுக்காரர் வெளியில் பிற பெண்களை 


நாடிச் செல்கிறார் ? நம்மிடம் இல்லாத எது அந்த 


மாதர்களிடம் உள்ளது என்று சற்றுசிந்தித்துத்துப் 


பார்த்து, இவர்களும் (மனைவிகள்) தங்களது 


அணுகுமுறையை தத்தமது கணவர்களிடம் 


மாற்றி அமைத்துக்கொண்டால், இதற்கு ஒரு 


விடிவு ஏற்படும் வாய்ப்பு மலரலாம். எல்லாம் 


கலிகாலத்தின் சிறப்பு அம்சங்களாகவே நாம் 


காண்கின்றோம். எல்லாம் அவன் செயல். 


நடப்பதெல்லாம் நாராயணன் சித்தம்.                           


ஆணாதிக்கம் ஆட்சி செய்கிறது. நான் ஒரே ஒரு 


கேள்வி கேட்க விரும்புகின்றேன் இந்த 


விலைமாதர்களை நாடிச் சென்றிடும் 


ஆடவர்களைப்பார்த்து. நீங்கள் சென்றிடும் இதே 


வழியை உங்களது மனைவிமார்களும் 


தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் 


சிந்தித்துப் பாருங்கள் நேயர்களே. கற்பு என்பது 


பெண்களுக்கு மட்டும் உள்ள அணிகலன் அல்ல. 


அது ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவான, 


பொருந்துகிற ஒரு அம்சம்தான் என்பதனை 


என்று இந்த ஆண்கள் சமுதாயம் 


உணர்கின்றார்களோ அன்றுதான் 


விலைமாதர்களின் எண்ணிக்கை கொஞ்சம் 


கொஞ்சமாக குறைந்திட ஆரம்பிக்கும். இந்த 


செயல் நடைபெறுவதும் நடக்காது இருப்பதும் 


ஆடவர்களே, உங்களின் கரங்களில்தான் 


உள்ளது. 



சிந்திப்பீர் !! செயல்படுவீர் !!                             



நன்றி!! வணக்கம்!!                                                               



அன்புடன். மதுரை T.R. பாலு.

Sunday, September 7, 2014

துறவு வாழ்க்கையைவிடவும் மேன்மையான வாழ்க்கை ஒன்று உண்டு !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  இல்வாழ்க்கை.



குறள் எண் :- 48.




ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 


நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ... 



விளக்கம் :-  தானும் அறநெறியில் பிறளாது 


வாழ்ந்து, தன்னைச் சேர்ந்தோரையும் அதில் 


ஈடுபடுத்தும் ஒருவரது இல்வாழ்க்கை, தவசிகள் 


வாழ்ந்துவரும் துறவு வாழ்க்கையைவிடவும் 


மிக மேன்மையானது. இது வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.