Monday, January 12, 2015

கொடுங்கோன்மை செய்த அரசர்/அரசி யாரைவிடவும் மோசமானவர்கள் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  551.


கொலைமேற் கொண்டாரிற் கொடிதே                                                                                    அலைமேற்கொண்டு 

அல்லவை செய்தொழுகும் வேந்து... ... ... 



விளக்கம் :-  பொருளாசையால் குடிமக்களுக்கு/


தனக்கு வாக்குகளை அள்ளித்தந்த மக்களுக்கு,


துன்பத்தைத் தரும் அரசர்/முதல்வர், 


பொருளாசைக்குகொலைசெய்து அபகரிக்கும் 


கொலைகாரனை/கொலைகாரியை விடவும் 


மிகக்கொடியவர்களே !! இது திருவள்ளுவர் 


நமக்கு வான்புகழ் வள்ளுவர் அருளிச்சென்ற 


குறளும்அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



புஷ்பவனம் :-  என்னடா தம்பி நந்தவனம், என்ன 


நீங்க எல்லாம் பாத்து பாத்து ஒட்டு 


போட்டீங்களே அந்தப் பொம்பளைக்கு, என்னா 


ஆச்சு இன்னைக்கு நிலைமை பாத்தியாலே. 


எப்படி எல்லாம் தான் மட்டுமே பணம் 


சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டு, இன்னைக்கு 


குற்றவாளி அப்படீன்னு தீர்ப்பளிக்கப் பட்டு, 


சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலே 21 நாள் 


வனவாசத்தைவிடவும் மிகவும் கொடுமையான 


சிறைவாசத்தை அனுபவிச்சுட்டு,இன்னைக்கு 


துட்டைக் கொடுத்து உச்ச நீதி மன்றத்திலே 


ஜாமீன் வாங்கிக்கிட்டு தோட்டத்திலே முக்காடு 


போட்டுகிட்டு குந்திக்கினு இருக்கே, இதுக்கு 


பேசாம மூணு முழக்கயிரிலே புளியமரத்துலே 


தொங்கிரலாம்டா. இவங்களைப்போல 


அரசியல்வாதிங்க அல்லாருமேபகல் 


கொலைகாரங்களை விடவும் கொடுமையான 


பேர்வழிகள்டா !! இப்படீன்னு நான் சொல்லலை. 


நம்ம திருவள்ளுவர் சொல்லிருக்காருலே.


பாத்துக்க. இனிமேலாச்சும் மனசுலே தேர்தல் 


வர்ற நேரத்துலே காலையிலே உதிக்கிற 


உதயசூரியனை வணங்கிட்டு, மக்களுக்குசேவை 


செய்றவங்களா பாத்து ஓட்டுப் போடுடா. 


அவங்கள நான் ஒன்னும் சுத்தமானவங்கன்னு 


சொல்லலே. ஏதோ அவுங்களும் கொஞ்சம் 


சில்றைஅடிச்சுகிட்டு, ஜனங்களுக்கும் நிறைய 


கடந்த காலங்கள்லே நிறைய செஞ்சுருக்காக 


அதாலே சொல்றேன். 


சரி தம்பி நான் வாறன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை TR. பாலு )



Friday, January 2, 2015

முற்பகல் நீங்க செஞ்சீங்கன்னா அது பிற்பகல் உங்களைத் தானாக தேடி வரும் !! வள்ளுவர் வாக்கு!!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.



குறள் எண் :-  319.




பிறர்க்கு இன்னாமுற்பகல் செய்யின்                                                                                                       தமக்குஇன்னா 

பிற்பகல் தாமே வரும்... ... ... 



விளக்கம் :-  பிறர்க்கு காலையில் நாம் ஒரு 


கெடுதல்/துன்பம் செய்தால், நமக்கு கெடுதல் 


துன்பம், மாலையில் தானே th தேடிவரும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ரங்கசாமி :- என்னடா தம்பி குப்புச்சாமி ..உம்..


சவுக்கியமா இருக்கியாடா ?


குப்புசாமி :-  என்னண்ணே !!நீங்க இருக்கிறப்போ 


எங்களுக்கு இன்னா குறைச்சல். சும்மா ராஜா !!


ராஜாவாட்டம் ஜம்னு கீறோம்.


ரங்கா :-அப்டிபோடுறாஅருவாளை.\உம்..அப்புறம் 


என்னடா விசேஷம்.


குப்பு :- அண்ணே இன்னைக்கு நம்ம மதுரை 


பாலு ஐயா நமக்கு எழுதின திருக்குறள் 


படிச்சேன். அது எனக்கு ஒன்னும் புரியலையே.


ரங்க:- உன்னைய மாதிரி மரமண்டைகளுக்கு 


எல்லாம் எப்படிடா புரியும். தம்பிஅதுக்கெல்லாம் 


கொஞ்சம் ஞானம்வேணும்...ஞானம்வேணும்...


சொய்யா.......ஏன்டு கேட்டுக்கிட்டீண்டா நீங்க 


எல்லாம் இலைக்கு போடுறவுணுக தானடா.


அதாலே உங்களுக்கு எல்லாம் புரியாதுடா.

குப்பு :- அண்ணே கிண்டல் பண்ணாம புரியும்படி 


சொல்லுண்ணே !!


ரங்க:-  தம்பி உனக்கு 14 வருசத்துக்கு முந்தி நம்ம 


நாட்டுலேநடந்ததுதெரியுமா.தெரியாது.


சொல்றேன் கேட்டுக்க. நம்ம நாட்டின் மிக மூத்த 


வயதுள்ள ஒரு ஒப்பற்ற தலை 5 வருஷம் ஆண்டு 


(1996-2௦௦1) நகரத்துலே உள்ள போக்குவரத்து 


நெரிசலை குறைக்க வேண்டி 14 நகர் 


மேம்பாலங்கள் கட்டினார். அப்போ அவரோட 


மகன் மேயர். ஆச்சா. அந்த வருஷம் 2௦௦1

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருசோட 


கட்சி தோத்துப்போச்சு. அடுத்து ஆட்சிக்கு வந்த 


ஒரு  பேய் இன்னா செஞ்சுச்சுன்னா உடனே 


தலைய ராவோட ராவா அவரோட வீட்டை 


உடைச்சுக் கைது செஞ்சு கொண்டுபோய் 


காராக்கிரகத்துலே (ஜெயிலில்) 


அடைச்சுப் புடுச்சு. எல்லாம் அந்தக் கேரளாக்கார 


ஜோசியன் சொன்னானாம். இந்தப் பேய் 


செஞ்சதாம்.ஆச்சா. இப்ப இன்னா ஆச்சு.தலைக்கு 


செஞ்ச கெடுதல் இப்ப பதிநாலு வருஷம் கழிச்சு 


இந்தப்பேய்க்கே திரும்ப கிடைச்சுருச்சுல்லே. 


என்ன நான்சொல்றது. அதனால நான் இன்னா 


சொல்றேன்னா நாம முடிஞ்சா நாலு பேருக்கு 


நல்லது செய்யணும்.இல்லாங்கட்டி கம்னு 


கிடந்துரனும். மனசார நாம ஒருத்தருக்கு 


காலையிலே கெடுதல் செஞ்சோம்னா அது 


வட்டி,குட்டி போட்டு நமக்கே மாலையிலே 


திரும்ப வந்து நம்மை அழிக்கும்.


இதைத்தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு.


நம்ம மதுரை பாலு ஐயாவும் அதை விளக்கமா 


நமக்கு திரும்பச் சொல்லி இருக்காரு. என்னடா 


எங்கக்கா மவனே இப்ப புரிஞ்சுதாடா தம்பி குப்பு.


குப்பு:-  ஆமா அண்ணே இப்ப இந்த மர 


மண்டைக்கு எல்லாமே புரிஞ்சுச்சு. நன்றி 


அண்ணே. நான் இப்ப போயிட்டு வாறேன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா.பாலு.



(மதுரை TR.பாலு )