Monday, January 12, 2015

கொடுங்கோன்மை செய்த அரசர்/அரசி யாரைவிடவும் மோசமானவர்கள் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  551.


கொலைமேற் கொண்டாரிற் கொடிதே                                                                                    அலைமேற்கொண்டு 

அல்லவை செய்தொழுகும் வேந்து... ... ... 



விளக்கம் :-  பொருளாசையால் குடிமக்களுக்கு/


தனக்கு வாக்குகளை அள்ளித்தந்த மக்களுக்கு,


துன்பத்தைத் தரும் அரசர்/முதல்வர், 


பொருளாசைக்குகொலைசெய்து அபகரிக்கும் 


கொலைகாரனை/கொலைகாரியை விடவும் 


மிகக்கொடியவர்களே !! இது திருவள்ளுவர் 


நமக்கு வான்புகழ் வள்ளுவர் அருளிச்சென்ற 


குறளும்அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



புஷ்பவனம் :-  என்னடா தம்பி நந்தவனம், என்ன 


நீங்க எல்லாம் பாத்து பாத்து ஒட்டு 


போட்டீங்களே அந்தப் பொம்பளைக்கு, என்னா 


ஆச்சு இன்னைக்கு நிலைமை பாத்தியாலே. 


எப்படி எல்லாம் தான் மட்டுமே பணம் 


சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டு, இன்னைக்கு 


குற்றவாளி அப்படீன்னு தீர்ப்பளிக்கப் பட்டு, 


சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலே 21 நாள் 


வனவாசத்தைவிடவும் மிகவும் கொடுமையான 


சிறைவாசத்தை அனுபவிச்சுட்டு,இன்னைக்கு 


துட்டைக் கொடுத்து உச்ச நீதி மன்றத்திலே 


ஜாமீன் வாங்கிக்கிட்டு தோட்டத்திலே முக்காடு 


போட்டுகிட்டு குந்திக்கினு இருக்கே, இதுக்கு 


பேசாம மூணு முழக்கயிரிலே புளியமரத்துலே 


தொங்கிரலாம்டா. இவங்களைப்போல 


அரசியல்வாதிங்க அல்லாருமேபகல் 


கொலைகாரங்களை விடவும் கொடுமையான 


பேர்வழிகள்டா !! இப்படீன்னு நான் சொல்லலை. 


நம்ம திருவள்ளுவர் சொல்லிருக்காருலே.


பாத்துக்க. இனிமேலாச்சும் மனசுலே தேர்தல் 


வர்ற நேரத்துலே காலையிலே உதிக்கிற 


உதயசூரியனை வணங்கிட்டு, மக்களுக்குசேவை 


செய்றவங்களா பாத்து ஓட்டுப் போடுடா. 


அவங்கள நான் ஒன்னும் சுத்தமானவங்கன்னு 


சொல்லலே. ஏதோ அவுங்களும் கொஞ்சம் 


சில்றைஅடிச்சுகிட்டு, ஜனங்களுக்கும் நிறைய 


கடந்த காலங்கள்லே நிறைய செஞ்சுருக்காக 


அதாலே சொல்றேன். 


சரி தம்பி நான் வாறன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை TR. பாலு )



No comments:

Post a Comment