Monday, April 20, 2015

விலைமாதர்களிடம் சென்று உறவுகொண்டால் நாம் எதனை இழக்க நேரிடும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண்:-  920.



இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு... ... ... 



விளக்கம் :-   இரண்டுவிதமான மனங்களைப் 


படைத்த விலைமாதர்களோடு உறவு 


கொள்பவர்கள், மது அருந்தி மனம் 


மகிழ்ந்திடுவோர், சூதாடுவதையே 


தொழிலாகக் கொண்டவர்கள், இந்த மூவரும், 


திருமகள் என்று எல்லோராலும்அழைக்கப்படும் 


லெட்சுமிதேவியின் அருள் கிட்டாமல் 


துரத்தப்படும் பட்டியலில் முதலில் 


இடம்பெறுவோர்கள் ஆவார்.


இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 


ஆகும். எனவே நாம் ஒருவேளை இதுவரை 


அப்படிப்பட்ட பாவச்செயலைச் செய்திருந்தாலும் 


இனிமேல் அதுபோல செய்திடாமல் திருந்தி 


வாழ்வோம் என்று இன்றுமுதல் சூளுரை 


மேற்கொள்வோம்.                                                               


நன்றி !! வணக்கம் !!                                                     



அன்புடன் திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment