Tuesday, July 28, 2015

மறைந்த பாரத ரத்னா A.P.J.அப்துல் கலாம் நினைவாக ஒரு கண்ணீர் கவிதை அஞ்சலி. தெய்வப்புலவர் திருவள்ளுவர் உலக நிலையாமை பற்றி அன்றே சொன்னது !!



பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!




நேற்று நம்மிடையே இருந்த பாரத ரத்னா 

அப்துல் கலாம் இன்று இல்லை. இதுதான் 

யதார்த்தம். இயற்கை.உலகத்து  வழக்கம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை படைத்து  இவ்வுலகு............(குறள்)



ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தெய்வப்புலவர் 

திருவள்ளுவர் இந்த உண்மையை உலகிற்கு 

சொல்லிச் சென்றுள்ளார் என்பதே தெளிவு.


மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனீபா மனித 

நிலையாமையைப் பற்றிபாடியுள்ளஒருபாடலை 

நினைவுக் கவிதை கண்ணீர் அஞ்சலியாக நான் 

இங்கே உங்கள் அனைவரின் சார்பாக தருவதில் 

ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.



மவுத்தையே* நீ மறந்து வாழலாகுமா !!

மாறிடும் பூமியில் நீந்துதல் லாபமா !!


                                                       ( மவுத்தையே )

மன்னாதி மன்னர் எல்லாம் நிரந்தரமாய் 

                                                  இருந்ததில்லை !!

மகத்தான முறையில் வாழ்ந்த மனிதர் 

                        எல்லாம் நிலைத்ததில்லை !!

பொன்னான செல்வந்தரும் பூவுலகில் 

                                                  இருந்ததில்லை !!


பூவுலகின் இந்நிலையை  புரிந்திடாமல் 

                                     ஏனோ பிதற்றுகிறாய் !!


                                                         ( மவுத்தையே )


நிச்சயம் மரணம் வரும் !!

நீ ஒரு நாள் இறந்திடுவாய் !!

நேசரெல்லாம் அழுதபின்னே !!

நீ செந்தூக்கில்* ஏறிடுவாய் !!

அச்சான கபர்ஸ்தானில்* நீ !!

அடங்கி மண்ணாவாய் !!

அந்நாளை நினைத்திடாமல் !!

நீயும் ஏனோ பிதற்றுகிறாய் !!


                                         ( மவுத்தையே )


கண்ணீர் கவிதை அஞ்சலி இத்துடன் 

நிறைவு பெறுகிறது. அன்னாரின் ஆன்மா 



இறைவன் திருவடியில் இளைப்பாற 


நாம் அனைவரும் துஆ செய்திடுவோம்.


அஸ்ஸலாமு அலேக்கும் !!

கண்ணீருடன்.

திருமலை T.R. பாலு.                                                               




மவுத்தையே = மரணத்தையே                                         செந்தூக்கில்= சவப்பெட்டி                                               கபர்ஸ்தான் =  சவக்குழி 

No comments:

Post a Comment