Wednesday, July 15, 2015

நாட்டின் மன்னவனை எந்த விஷயம் காப்பாற்றுகிறது ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் இது !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  செங்கோன்மை.


குறள் எண் :- 547.



இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை 

முறைகாக்கும் முட்டாச் செயின்.......


விளக்கம் :-  நாடு முழுவதும் மன்னன் 

காப்பாற்றுகிறான்.அவனை நெறிமுறை 

தவறாத அவனது ஆட்சி காப்பாற்றுகிறது. 

இது வள்ளுவர்  நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ராமையா : என்னடா தம்பி சோமையா. 

உன்னைய ரெண்டு மூணு வாரமா இந்தப் 

பக்கமே பார்க்க முடியலியே. எங்கே போயித் 

தொலைஞ்சே ?

சோமையா :-  இல்ல அண்ணே நம்ம 

தொகுதியிலே இடைத்தேர்தல் நடத்துச்சு இல்ல.

ராமை:-  ஆமா நடந்துச்சு. ஓட்டுக்கு ஒன்னுக்கு 

5,௦௦௦ ரூபாய் இல்லடா கொடுத்தானுக வக்காலி.

ஏன்னா அம்மா இல்ல நிக்குத்து. சரி விசயத்தைச் 

சொல்லுறா மூதேவி.

சோமை:- அதான் புள்ளைக, பொண்டாட்டியோட 

திருப்பதி போயி சாமி கும்பிட்டு வந்தேண்ணே.

ராமை :- அந்த அம்மா கொடுத்த அந்த லஞ்சப் 

பணத்தைஎடுத்துகினுஉன்னோடசாமியைபோய் 

கும்பிட்டு வந்திருக்கே அப்படித்தானே. பாவம்டா 

அந்த சாமி.

சோமை:- இல்லண்ணே. கையிலே வச்சிருந்தா 

கொஞ்சம் கொஞ்சமா செலவாயிரும். அதாலே...

ராமை:-  ஏண்டாஉனக்குமானம்,ரோசம்,வெட்கம்,

சூடு, சொரணை, எதுனாச்சும் இருக்கடா. 

இருந்தாஅந்தபாவப்பணத்தை வாங்கியிருப்பியா. 

சரி எக்கேடும் கேட்டுப் போ.

சோமை :- என்னன்னே இதுக்குப்போயி 

என்னைய திட்டுறே. நாம் மட்டுமா வாங்கினேன். 

ஊரே தானே வாங்குச்சு.

ராமை:- ஆமாடா ஊரே ஒரு குட்டையிலே 

ஊறின மட்டைங்கதானேடா. சரி. அது 

கிடக்கட்டும். இப்ப ஊரிலே பூரா அந்த அம்மா 

உடல்நிலையைப் பத்தித் தானே ஒரே பேச்சு. 

என்னவாம் அந்த பொம்பளை உடம்புக்கு ?

சோமை:-  ரொம்ப முடியாமத்தான் கிடக்குதான் 

அம்மா. பத்து நிமிசத்துக்கு மேலே நிக்க 

முடியலே உடம்பு வேறு கனத்துக்கிட்டே 

போகுது. போதாக்குறைக்கு சக்கரை வியாதி, 

ரத்தக் கொதிப்பு, உப்பு வியாதி இத்தியாதி 

இத்தியாதின்னு ஏகப்பட்ட சீக்கு இருக்குதுன்னு 

ஊருலே முழுசும் பேசுறாங்க.


ராமை :- வராது பின்னே. ஊரை அடிச்சு 

உலையிலேபோட்டு கோடி கோடியா கொள்ளை 

அடிச்சா. அவங்க அடிக்கிற கொள்ளையிலே 

சப்பிபோட்ட எலும்புத்துண்டுகளுக்கு 

உங்களைப்போல ஆசாமிகள் காத்துட்டு 

இருக்காங்காங்க. அப்புறம் என்ன செய்ய.

பாத்தியாடா எங்க தலைய. இந்த 92 வயசிலேயும் 

சும்மா ராஜா மாதிரி நாற்காலியிலே வலம் 

வருகிறார்.அதுதாண்டா உண்மை, உழைப்புக்கு 

இறைவன் தரும் பரிசு. தம்பி நான் உனக்கு 

ஒண்ணு சொல்லறேன் நல்லா கேட்டுக்க. நெறி 

தவறாம ஆட்சி நடத்தினா இறைவனே 

மன்னனைக் காப்பாத்துவார். இல்லன்னு 

வச்சுக்க. இப்படித்தான் எல்லா வியாதியும் வந்து 

ஆளை சாவடிச்சுடும். சரி நேரமாச்சு. நான் 

வாறன். அப்பாலே சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.  

No comments:

Post a Comment