Monday, September 21, 2015

விலைமாதர்களோடு தொடர்பினை விலக்கியே வாழவேண்டும் !! வள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.

குறள் என்ன :- 912.



பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 

நயன்தூக்கி நள்ளா விடல்...  ... ... ... 

விளக்கம் :-  வருவாயை மட்டுமே கருதி 

பண்புடையவர் போல பேசும் பண்பற்ற 

பெண்களுடன் ( விலைமாதர்களுடன் ) உள்ள 

தொடர்பை ஆராய்ந்து விட்டொழிக்க வேண்டும்.

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு உரைத்த 

குறளும் அதன் விளக்கமும் ஆகும்.                           


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


மனோகரா :- என்னடா தம்பி சிவநேசா நலமா. 

மேலே நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் 

கூறிய குறளைப்படித்தாயாடா சிஷ்யா.


விலைமாதரோடு தொடர்பு இருப்பின் அதனை 

ஆராய்ந்து விட்டு ஒழிக்க வேண்டும் என்று அவர் 

கூறிய நிலையில்அப்படிப்பட்ட நடத்தை உள்ள 

ஒருத்தியை மாநிலத்தின் தலைமை பதவியில் 

அமர்த்தினால் அந்த மாநிலத்தின் நிலை 

என்னவாகும் என்று நீயே மக்களுக்கு பகர்ந்திடு.


சிவநேசா :- மழை பொய்க்கும். 

வறுமை தாண்டவமாடும்.

ஏழைகள் கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்துவார். 

அராஜகம் ஆட்சி புரியும். 

வலியோன் கை ஓங்கும். 

எளியோன் ஏமாற்றப்படுவான். 

தேவடியாக்கள் சிரித்துக்கொண்டே 

செல்வங்களைச்  சேர்த்துக்கொண்டு கும்மாளம் 

செய்வர்.

காவல்துறை ஏவல்துறையாக மாறிவிடும். 

அநீதியும் அக்கிரமும் அரசாங்கமாக மாறிடும். 

இதுதான் நடக்கும் குருதேவா.

மனோ:- சபாஷ். சிஷ்யா. சபாஷ். சரியாக, 

மிகச்சரியாக உரைத்தாய். பாவம் மக்கள். 

அவர்கள்தானே ஆளும் தலைமையை 

அவளைத் தேர்ந்தெடுத்தார்கள். அல்லல் 

பட்டு தெளியட்டும். காலம் வரும் அதுகாறும் 

நாம் அனைவரும் பொறுத்திருப்போம். 

நிலைமை மாறும்.

( கருத்தும் விளக்கமும் தந்தவர். திரு எமதர்மன் 

அவர்கள் மே/பா.திருசிவபெருமான். எமலோகம்) 

Monday, September 14, 2015

விலைமாதர்களின் தோள்கள் யார் குடியிருக்கும் இடம் ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  வரைவின் மகளிர்.


குறள் எண் :-  919.




வரைவிலா மாணிழையார் மென்தோள்                                                                                                     புரையிலாப் 

பூரியர்கள் ஆழம் அளறு... ... ... ...



விளக்கம் :-  அளவுகடந்த அணிகலன்கள்உடைய 

விலைமகளிரின் இனியதோள்கள்,அறிவில்லாத 

கீழ்மக்கள் அழுந்துகின்ற நரகமே ஆகும்.  இது 

வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-


கந்தன் :-  ஏண்டா கிந்தா என்னடா பத்துநாளா 

உன்னைய நம்ம பேட்டை பக்கமே காணோம்.

எங்கே போயித் தொலைஞ்சே ?

கிந்தன் :- இல்ல அண்ணே எனக்கு கேரளா 

லாட்டரியிலே 65 லட்ச ரூபா கிடைச்சது.

கந்தன் :- இங்க பாரடா இதுல்லே யோகம்ன்னு 

சொல்றது. உம்..அப்புறம். சொல்லுங்க தம்பி.

அந்தப் பணத்தை வாங்கிட்டு எங்கே போனீங்க?

கிந்தன் :- நேரே பாம்பே போயி பத்து நாள் நல்லா 

மனங்குளிர இன்பங்களை எல்லாம் ஆடி 

அனுபவிச்சுட்டு  நேத்துத்தான் ஊர் வந்து 

சேர்ந்தேன்.

கந்தன் :- எத்தனை ஜாரிய பாத்தீங்க.

கிந்தன் :- அது ஒரு இருபதுக்கு மேலே இருக்கும்.

கந்தன் :- ஒ...அப்படியா. சரி அவளுக எல்லாம் 

ஏகப்பட்ட நகை, நெக்லஸ்மாதிரிஅயிட்டங்களை 

தோள்களில் கழுத்துகளில் தொங்க விட்டு 

இருந்திருப்பாங்களே.

கிந்தன் :- ஆமா. அது எப்படி உங்களுக்குத் 

தெரியும் ?நீங்கதான் ஏக பத்தினி விரதன் ஆச்சே.

கந்தன் :- ஏக பத்தினி விரதன் நான், ஆனால் 

நீயோ ஏகப்பட்ட பத்தினி விரதன் 

ஏண்டா தம்பி பாம்பு கடிச்சா 

சாவோம் அப்படீங்கிறதை பாம்புகிட்டே 

கடிவாங்கியாடா சொல்றோம் ? இல்லையே. 

அது மாதிரித்தாண்டா இதுவும்.

அவளுக கழுத்து நரகங்களின் இருப்பிடம் 

அப்படீன்னு நான் சொல்லலடா. நம்ம 

திருவள்ளுவர் சொல்லியிருக்காரு.

அதாலே இதுவரை நீ செஞ்ச பாவம் எல்லாம் 

போதும் இனியாகிலும் இந்த மாதிரி 

விலைமாதர்கிட்டே போகிற 

பாவம் வேணாம்டா தம்பி உனக்கு. திருந்துடா.

கிந்தன் :- அண்ணே இனிமே செத்தாலும் அந்தத் 

தே,,,,,,,,,,யாளுக அந்த தட்டு கெட்டசெருக்கிகள் 

இருக்கிற திசைப்பக்கம் தலைவச்சு கூட 

படுக்க மாட்டான் உங்க தம்பி. இது சத்தியம்.

நான் வாறன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.