Sunday, June 12, 2016

வயதில் மூத்தவர்களை மதித்து நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெரியாரைப் பிழையாமை.

குறள் எண் :-  892.


பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 

பேரா இடும்பைத் தரும்... ... ...


பொருள் :-  வயதில் பெரியவர்களை மதிக்காமல் 
நடந்தால், அவர்களால் நீங்காத துன்பங்கள் 
உண்டாகும்.  இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 
அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் 
ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தையா :-  வாங்க..தம்பி..சுப்பையா. நலமா ?
தேர்தல் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் 
ஆவப்போவுது. தம்பிய இப்பத் தான் பாக்க 
முடியுது. நீங்க நினைச்ச மாதிரியே உங்க 
கட்சி பலவிதமான கோக்குமாக்கு வேலைகள் 
செஞ்சு அரியணைய புடிச்சுட்டீகளே தம்பி.
நல்லா இருங்க..

சுப்பையா :-  அண்ணே !! ரொம்ப புகழாதீங்க.
எல்லாம் மக்கள் விரும்பினாங்க. ஜெவிச்சோம்.
அதுக்கு இப்படி புகழாதீங்க அண்ணே.

கந்தையா :-  யாரு..நான்..உங்கள.. புகழ்ந்தேனா ?
சரி. அப்டியே வச்சுக்குங்க தம்பி. ஆமா ஏன் 
உங்க தலைவி, உறுப்பினர்கள் பதவி ஏற்கும்
விழாவில், தலைவர் கலைஞர் வரும்போது 
படக்குன்னுவெளியேருச்சுஎன்ன..மனசாட்சியின் 
உறுத்தலா ? இல்ல..முகத்துலே முழிக்க வெக்கமா ?சொல்றா தம்பி பதிலை ?

சுப்பையா :- அண்ணே..அதெல்லாம் ஒன்னும் இல்லை.ஏதோ எங்க தலைவிக்கு அவசர வேலை இருக்கலாம்.அதுக்கு இப்படி பழிச்சு பேசாதீங்க அண்ணே.

கந்தையா :-  தம்பி.. வயசுலே .. அனுபவத்துலே 
மூத்தவங்க..பெரியவங்க..இவங்களை மதிக்காமல் திமிரா நடந்தா, அவங்க விடுற சாபமே பெரிய நீங்காத தீமைகளை நமக்கு தந்திடும் அப்படீன்னு நான் சொல்லல தம்பி. நம்ம திருவள்ளுவர் சொல்லியிருக்கார் தம்பி. முடிஞ்சா உங்க தலைமைகிட்டே சொல்லுங்க. வழக்கத்தை,பழக்கத்தை, மாத்திக்க சொல்லுங்க. உம்.. நாய் வாலை என்னைக்கு நிமித்துனோம் அப்டீன்னு சொல்லுறீங்களா ? அதும் சரிதான்.. சரி தம்பி எனக்கு ஒரு சின்ன சோலி கிடக்கு. வாரேன்.

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment