Thursday, June 23, 2016

எவ்வளவு செல்வங்கள் இருந்தென்ன பயன் !! ஆற்றல், அறிவு மிகுந்த பெரியோர்களின் சினத்திற்கு ஆளாகும்போது !! வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பெரியாரைப் பிழையாமை.

குறள் எண்:-  897.



வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்                                                                                        என்னாம் 

தகைமாண்ட தக்கார் செறின்... ... ... 


பொருள்  :-  ஆற்றல் மிகுந்த பெரியோர்களின் 
சினத்திற்கு ஆளாகினால் சிறப்பிற்கு உரிய 
அரச வாழ்வும், தேடிய உயர் செல்வங்களும் 
எதற்குப் பயன்படும் ?  இது வான்புகழ் அய்யன் 
திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற நல்ல 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

கண்ணுச்சாமி :-  வாங்க தம்பி சின்னச்சாமி.
என்ன நலம்தானா ? ஒரு வழியா உங்களோட 
டுபாக்கூர் சபை நிகழ்ச்சி நேத்தோட ஒரு 
முடிவுக்கு வந்துருச்சு போல.

சின்னச்சாமி :- புரியலையே..அண்ணே..நீங்க 
சொல்றது !!

கண்ணு :- அட..என்ன தம்பி..உங்க சட்டமன்ற 
நிகழ்ச்சியைத்தான் சொல்லுதேன்.

சின்ன :- ஒ !! அதுவா !! ஆமாண்ணே. எங்க 
தலைவி மிகவும் சிறப்பா நடத்தி முடிச்சாங்க.

கண்ணு :- என்னது ? சிறப்பா ? அதுவும்உங்க தலைவி ? உம்..நீ தாண்டா மெச்சிக்கணும் அதை. தம்பி இன்னைக்கு நம்ம மதுரை TR.பாலு இருக்காரே !!

சின்ன :- யாரு. இந்தப் பொழுது போகாம முக 
நூல் பிளாகர் பதிவில தினம் ஒரு திருக்குறள் 
அப்டி இப்டின்னு என்னத்தையாச்சும் எழுதி 
எழுதி தள்ளிட்டே இருப்பாரே அவரைப்பத்தி
சொல்லுதீயளா ?

கண்ணு :- அவரேதான். அவரு இன்னைக்கு 
உங்க தலைவிக்குன்னு ஒரு திருக்குறளை 
எடுத்துப் போட்ருக்காரு பாருடா தம்பி !! ச்சே உண்மையிலேயே ரொம்ப அருமைடா.

சின்ன :- உக்கும்..அப்டி என்ன பெருசா அவரு 
எடுத்துப்போட்டு கிழிச்சிருக்காரு ?

கண்ணு :-  டேய்..டேய்..பாத்தியா !! நீயும் உங்க தலைவி மாதிரியேதானேடா இருக்கே. பெரியவங்களை அப்டியெல்லாம் பேசப்படாது. அவரு இன்னைக்கு என்ன எடுத்து எழுதியிருக்காருன்னு கேட்டா என்னதான் உயர்ந்த அரச பதவி இருந்தாலும்,
எம்புட்டுத்தான் பணம் கோடிகோடியாக்கொட்டி 
கிடந்தாலும், வயதிலே, அறிவிலே,தன்னுடைய 
சீரான ஆழ்ந்த அனுபவத்துலே, பெரியவங்களை 
அதாவது எங்க தல கலைஞர் மாதிரிஉள்ளஅறிவு ஜீவிகளை பகைத்து அவர்களதுகோபதாபத்துக்கு ஆளாகினா, அந்தப் பதவி, பணத்தாலே என்ன பயன் ? அப்டீன்னு எழுதி இருக்காருடா அவரு. முடிஞ்சா உன்னோட தலைவிகிட்டே அத்த படிச்சுக்காட்டு. அப்பனாச்சும் அவுகளுக்கு 
அறிவு வருதான்னு பாப்போம். வரட்டாடா தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment