Monday, October 31, 2016

நோயால் உயிருக்கு எந்நாளும் துன்பம் இல்லை !! திருவள்ளுவர் கருத்து இது !!




நோயால் உயிருக்குஎந்நாளும் துன்பம்இல்லை !!



தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மருந்து.

குறள் எண் :-  945.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு ... ... ...

பொருள்  :-  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினை மறுத்து,ஒத்துக்கொள்ளும் உணவினையே உண்டு வாழ்ந்தால், உயிருக்கு துன்பம் இல்லை. வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

புனிதா :- என்ன லலிதா அக்கா, உங்க அம்மாவை ஆஸ்பத்திரிலே சேத்து இன்னைக்கு கிட்டத்தட்ட நாப்பது நாளைக்கு மேலே இருக்குமுல்ல. இப்ப என்ன சொல்றாங்க ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற தங்கச்சி
புனிதா :- சொல்லுங்க அக்கா. சொன்னாதானே எங்களுக்கு தெரியும் ?
லலிதா :- உனக்குத்தான் தெரியுமேஎன்னப்பெத்த 
எங்க அம்மா வேதவல்லி, எப்படி பணம் சம்பாதிச்சாங்க, எப்படி எல்லாம் ஆட்டம் போட்டாங்க ? யார் யார் கூட எல்லாம் சேரக்கூடாதோ அவங்களோட சேந்து கிட்டு 
எங்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டி அடிச்ச கதை.
புனிதா :-  ஆமா அக்கா அது நம்ம தெருவே தெரிஞ்ச கதை தானே. இப்ப உங்க அம்மா எப்டி இருக்காங்க ?
லலிதா :- அட..அதைத்தாண்டி சொல்ல வாறன் அறிவு கெட்டவளே. எங்கள யாரையும் உள்ள போய் பாக்க வுட மாட்டேங்குறா அந்தக் கூடவே இருக்குல்ல ஒரு சனியன்.
புனிதா :-யாருஅந்தபுஷ்கலாவைசொல்றீங்களா ?
லலிதா :- அந்தப் பொட்டுக்கெடுத்தவதான் அவ என்னப்பெத்த எங்க ஆத்தா சம்பாரிச்ச அம்புட்டு சொத்தையும் அவ மட்டுமே ஆட்டைய போடப் பாக்குறாடி. ஆட்டைய போடப் பாக்குறா ? இந்த அநியாயத்தை யார்ட்ட போய்சொல்ல ?
புனிதா :- ஏன்க்கா, கேக்குறேன்னு தப்பா எடுக்கலன்னா நான் ஒன்னு கேக்குறேன்.
லலிதா :- சும்மா கேளுரி தங்கச்சி. எனக்கு உன்ன விட்டா வேற யாருடி இருக்கா ? கேளு..கேளு..
புனிதா :-  உங்கள பெத்த அம்மாவுக்கும் அந்த புஷ்கலாவுக்கும் எப்டிக்கா நட்பு வந்துச்சு ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற. எங்க அப்பா ராமச்சந்திரன் பிள்ளை செத்துப்போன பொறவு இந்த இழவெடுத்தவ ஒரு சேலக்கடை வச்சிருந்தா. அங்க அடிக்கடி எங்க அம்மா போவாங்க.அப்ப இந்த செருக்கி எங்கம்மாட்ட ஏகப்பட்ட பணம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு எங்கம்மாவ வசப்படுத்திக்கிட்டாடி. அவ எங்க 
அம்மாக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ 
தெரில, எங்கள அல்லாம் சுத்தமா வெறுத்து ஒதுக்கிட்டு வீட்ட விட்டு விரட்டிட்டு, அந்த பாழாப்போறவளோட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எங்க அப்பா ஆச ஆசயா 
கட்டுன தாமஸ் கார்டன் வூட்டுல கொண்டாந்து வச்சுக்கிட்டாங்க. யார் கேக்குறது இந்த அநியாயத்த ?
புனிதா :- சரி.அதல்லாம் விடுங்க அக்கா. இப்ப உங்கம்மா உடம்புக்கு ஏன் இம்புட்டு வியாதி வந்துச்சு ? அத்த கொஞ்சம் சொல்லுங்க.
லலிதா :- எல்லாம் அந்தக் கழுதையோட சேந்துகிட்டு எப்பப்பாத்தாலும் குடிச்சுக்கிட்டு, கண்ட கண்ட கருமாந்திரத்தயும் துன்னுக்கிட்டு இருந்தா ? வியாதி வராதா ? எங்க அம்மாக்கு இல்லாத வியாதியேகிடையாதே.ரத்தக்கொதிப்பு, சக்கரை நோய் இன்னும் உலகத்துல உள்ள அம்புட்டு வியாதியும் இப்ப ஒன்னு சேந்துகிட்டு, எங்க ஆத்தாள படுத்த படுத்த படுக்கையா  
போட்டுருச்சு தங்கச்சி.
புனிதா :-  அக்கா இன்னைக்கு நம்ம மதுரை பாலு சார்எழுதியிருக்குற " தினம் ஒரு திருக்குறள் " வலைத்தளப் பதிவு அத்த படிச்சுட்டுத்தான் வந்தேன்.
லலிதா :- என்னடி சொல்லிருக்காரு அந்த மனுசன் ?
புனிதா :-  அக்கா, நம்ம உடம்பு எந்த உணவ யேத்துக்கிடுதோஅத்த மட்டும்தான் நாம சாப்பிடனுமாம். ஏத்துக்காத உணவ எல்லாம் நாம சாப்பிடாம இருந்தா உயிருக்கு 
எப்பவுமே ஆபத்து இல்லையாம்  அடிப்டின்னு திருவள்ளுவர் சொல்லிருக்காராம்.
லலிதா :- என்னை பெத்த ஆத்தா அப்டி எல்லாம் வாழவே இல்லையேடி தங்கச்சி. அந்த கேடுகேட்டவளோட சேந்து தினமும் குடிச்சு, ஐஸ் கிரீம் சாப்புட்டு சக்கரைவியாதிய வளத்து இன்னைக்கு இந்தக் கதிக்கு ஆளாகி படுத்துக் 
கிடக்காங்க. என்ன செய்ய ?
புனிதா :-  சரிக்கா எனக்கு நேரம் ஆச்சு. என் வூட்டுக்காரர் வேல முடிச்சு வர நேரமாச்சு. பாத்துக்குங்க அம்மாவ.என்ன ஆனாலும் சொல்லி அனுப்புங்க. நான் ஓடோடி 
வந்துறேன். வரட்டா அக்கா .
லலிதா :- சரிடி தங்கச்சி. பாத்து கோளாறா போயிட்டு வா.

***************************************************************

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.

No comments:

Post a Comment