Tuesday, October 4, 2016

நமக்கு கெடுதல் செய்தவர்களை எப்படி தண்டித்திட முடியும் ? திருவள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.

குறள் எண் :-  314.




இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 

நன்னயம் செய்து விடல்... ... ... 

பொருள் :-  தனக்கு துன்பம் செய்தவரை 
தண்டித்தல் என்பது அவருக்கு நன்மைகளைச் 
செய்து அவர் வெட்கப்பட்டு திருந்துமாறு 
செய்தலே ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜமுனா :-  என்ன புவனா அக்கா தீபாவளிக்கு 
ஜவுளி எல்லாம் எடுத்தாச்சா என்ன ? இன்னும் 
25 நாள்தானே இருக்கு.

யமுனா :- அட போடி பைத்தியக்காரி, இங்க
இன்னும் இந்த மாச செலவுக்கே அவன் காசு 
தராம இருக்கான்.

ஜமுனா :- என்னக்கா இருந்தாலும் தொட்டுத் 
தாலி கட்டிய புருசனை இப்படி அவன் இவன் 
அப்டின்னு கொஞ்சம்கூட மருவாதி இல்லாம 
பேசுறது நல்லாவா இருக்கு ?

யமுனா :-  ஏய்..அவன் மேலே இருக்குற 
கடுப்பில உனக்குத்தான் இப்ப உதை விழப் 
போவுது. வூட்டு செலவுக்கு காசுதராம 
இருக்குற பய, ராத்திரி டாஸ்மாக் கடைலே 
மட்டுமே கொண்டு போய் கொட்டுறான். அத்த 
யார்டி கேக்குறது ?

ஜமுனா :- அதுக்கு நீதானே காரணம். நல்லவங்க 
ஆட்சிக்கு வரணும் சாராயக் கடையை இழுத்து 
மூடுவாங்கஅதாலேஅவங்களுக்குபோடுங்க உங்க ஓட்டு என்று  சொன்னேன். நீங்க கேக்கல வெறும் இருநூறுக்கும் முன்னூறுக்கும் ஒரு பிரியாணி போட்டலத்துக்கும் ஆசைப்பட்டு இவளுக்கு போட்டீங்க. இப்ப அனுபவிக்கிறீங்க. சரி. அது கிடக்கட்டும். இப்ப இந்த பொம்பள உடம்புக்கு முடியாம படுத்துக் கிடக்கு.அது நிசமோ இல்லாங்காட்டி பொய்யோ அது வேற விசயம். இருந்தாலும் , நம்ம தல, அவருக்கு எம்புட்டு கெடுதல் இது செஞ்சிருக்கு. அத்த எல்லாம் மனசுல கொஞ்சம் கூட வச்சிக்கிடாம, அது வெட்கப்படுற மாதிரி சீக்கிரம் உடல் நலமாகி வூட்டுக்கு வர வாழ்த்தி ஒரு அறிக்கை விட்டார்பாரு, அங்கதாண்டி தல நிமிந்து நிக்கிறாரு.எப்படிஅந்தபொம்பளைய தண்டிச்சார் பாத்தியாடி. ஏன்னா அவரு வள்ளுவர் காட்டிய வழியில வாழ்றவர்டி. இத்த நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு எழுதியிருக்கிற தினம் ஒரு திருக்குறள் பகுதியில போட்டிருக்கிறதை முகநூல் பதிவைப் படிச்சுட்டுத்தான் சொல்றேன். முடிஞ்சா நீயும் படிறி. எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு.உன்ன அப்பால பாக்கிறேன். வரட்டா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. TR. பாலு. 

No comments:

Post a Comment