Thursday, February 28, 2013

தினம் ஒரு திருக்குறள்!!

திருக்குறள்  


அனைவருக்கும் வணக்கம். இன்று உங்கள் அனைவருக்கும் நான் தரஉள்ள குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-


 அதிகாரம்:-இனியவை கூறல் 

குறள் எண்: 1௦௦ 


 இனிய உளவாக இன்னாத கூறல் 

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .. 


இனிய சொற்கள் நம்மிடையே உபயோகிப்பதற்கு  எவ்வளவோ இருக்கும்போது  அவற்றை எல்லாம் விட்டுவிட்டு கடுமையான சொற்களை கூறுதல்எப்படி இருக்கிறதென்றால்   ஒரு தட்டில் பழுத்த  பழங்கள் உண்ணும் பக்குவத்தில் இருக்கும்போது அவற்றை எல்லாம் நாம்   உண்ணாமல் மரத்தில் இருக்கும் காய்களை பறித்து  உண்ணுவதைப்  போன்றது.எனவே கடும்சொற்களை பயன்படுத்தாமல் இனிமை நிறைந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று வள்ளுவர் சொன்னபடி வாழ்வில் கடைப்பிடித்து நாம் வாழ்வோமா நேயர்களே!நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.

Wednesday, February 27, 2013

திருக்குறள் விளக்கம்.

தினம் இரு திருக்குறள்!! 


அனைவருக்கும் காலை வணக்கம்.இன்றைய தினம் நான் உங்கள் அனைவருக்கும் தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-

                                 (அதிகாரம்:-கள்ளுண்ணாமை )
                                         (குறள் எண்:- 923 )


                   ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
                   
                      சான்றோர் முகத்துக் களி .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 
  
குறள் குறள் விளக்கம்:-  நம்மை பெற்ற தாயின் முகம்கூட துன்பம் அடைந்
நம் மீது அன்பு மட்டுமே காட்டும் இயல்பு உடைய தாயின் முகமே நாம் கள் உண்டு  வந்திருக்கிறோம் என்பது தெரிந்தால் எவ்வளவு வேதனை கொள்ளும்.அப்படி என்றால் நம் மீது குற்றம் கண்டுபிடிக்கும் சான்றோர்கள் முகத்தில் இந்த கள் உண்ணும் பழக்கம் எந்த விதமான உணர்ச்சிதனை காட்டும்? எனவே இந்த கொடிய பழக்கம் தேவையா? சிந்திப்பீர்!!செயல்படுவீர்மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சிந்திப்போம்.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.!

எனவே நாம் அனைவரும் சிந்திப்போம்.எனவே மாறிடும் எப்போது நாம் கள் உண்டு வந்தோம் என்பது தாய் அறிகின்றபோது.
அப்படி நம்மீது அன்பு மட்டுமைபெற்ற தாயே நமது இந்த ஈன செயல்கண்டு துன்புருவாள் என்பரால் நம் மீது குற்றம் காண்கின்ற இயல்பு உடைய சான்றோர் முகத்தில் கள் உண்ணும் பழக்கம் என்ன உணர்ச்சிதனை காட்டும் 

திருக்குறள் விளக்கம்

தினம் ஒரு திருக்குறள்

அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் தருவதில் நான் மிகப்பெரும் 
மகிழ்ச்சி அடைகிறேன்.


                கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
                 எல்லா உயிரும் தொழும்.. .. .. .. .. ( குறள் எண் 260)
  
                      (அதிகாரம்: புலால் மறுத்தல்)


மேலே சொன்ன குறளுக்கு என்ன விளக்கம் என்று கேட்டால் எந்த ஒரு 
உயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் எவன் ஒருவன் வாழ்கின்றானோ அவனை இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனமும் கைகூப்பி வணங்கும்! இது வள்ளுவன் நமக்கு அளித்த அறிவுரை.ஏற்று கொண்டு செயல்படுவோமா  நேயர்களே!மீண்டும் நாளை மற்றும் ஒரு குறள் விளக்கத்தில் சந்திக்கிறேன்.
அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.வணக்கம்.
அன்பன் மதுரை T.R.பாலு.