Sunday, February 22, 2015

நட்பு என்றால் எப்படி இருக்க முடியும் ? இருக்க வேண்டும் ?திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  நட்பு.



குறள் எண்  :-  78.



உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 

இடுக்கண் களைவதாம் நட்பு... ... ... 


விளக்கம்  :-  ஆடை நமது உடலைவிட்டு சரியும் 

போது எவ்வளவு விரைவாக நம் கை அங்கே 

செல்கிறதோ அது போல நண்பன் சிரமம் 

அடைந்திடும் பொது உடனே சென்று அங்கே 

அவனுக்குத் தேவையானதைத் தருவதே 

நல்ல நட்பின் அடையாளம் ஆகும். இது 

திருவள்ளுவன் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ராம்ராஜு :- தம்பி சோம்ராஜூ  எங்கே நம்ம 

தம்பி நட்ராஜூவை காணோம். நீ கண்டா 

பாத்தியாலே.

சோம்ராசு :-  அண்ணே உனக்கு விசயமே 

தெரியாதா அண்ணே.

ராம்ராஜு:-  சொல்லுலே சொன்னாத்தானேலே 

எனக்கு விளங்கும். என்னாலே நடந்துச்சு ?

சோம்:-  அண்ணே அவன் தங்கச்சி கல்யாணம் 

போன வருஷம் நடந்துச்சுல்லே.

ராம் :-  ஆமா. அதுக்கு என்னாலே இப்போ ?

சோம்:-  அப்போது அவன் நம்ம கந்துவட்டி 

கணேசன்கிட்டே 5 லட்சம் வீட்டை அடகு 

வச்சு வாங்கிருக்கான். அத சொன்னமாதிரி 

பயலாலே திருப்பித் தர முடியலே. அதாலே 

ராம் :- அதாலே ? என்னாலே நடந்துச்சு ?

சோம :- ஏன்னா நடந்துச்சா ? கணேசன் இவன 

கோர்ட்லே போட்டு வீட்டை ஏலத்துக்குகொண்டு 

வந்துட்டான். உடனே நம்ம நட்ராஜூ இல்ல 

அவன் பணத்தோட வந்து வட்டியும் முதலுமா 

கந்துவட்டி கணேசன் கிட்டே கொடுத்து வீட்டை 

மீட்டிருக்கான். அதான் நடராஜை காணலை.

பாத்தியா அண்ணே நட்ராஜூ எப்படி வள்ளுவர் 

சொன்ன மாதிரி உதவியிருக்கான். இவன் தானே 

உண்மையான நண்பன். என்ன நான் சொல்றது ?

ராம் :-  தம்பி நீ சொல்றதுஉண்மைதான்டா.ஆனா 

இந்தக்காலத்துலே இப்படி உடனே ஓடிவந்து 

உதவி செய்ய யார்லே இருக்கா ?

சோம்: அண்ணே யாருமே இல்லை அண்ணே.

சரி அண்ணே நான் மதுரை பாலு சாரை போயி 

பாத்துட்டு வந்துடுறேன்.

பாலு :- வாங்க தம்பி சோம்ராஜூ என்ன இந்தப்

பக்கம் அத்தி பூத்தாப்புலே.

சோம்:- இல்ல அண்ணே. ( கந்துவட்டி கணேசன் 

கிட்டே ராம்ராஜூ மாட்டின கதைய சொல்றான்)

பாலு :-  தம்பி கேட்கவே சந்தோசம் தம்பி.

ஆனா இந்தக் காலத்துலே நண்பனுக்கு நாம 

உதவினோம்னு வச்சுக்க நம்ம நிலைமை நான் 

எழுதின இந்த " காலக்குறள் " மாதிரித்தான்

தம்பி அமைஞ்சுடும்.

சோம் :- அது  என்ன அண்ணே காலக்குறளா ? 

இது ஏன்னா அண்ணே 

புதுசா இருக்கு ? நீங்களே எழுதினீங்களா ? அத்த 

கொஞ்சம் சொல்லுங்க அண்ணே !!

பாலு : கேட்டுக்குங்க தம்பி:-


உடுக்கையை இழந்தாலும் நட்பிற்கு உதவினால் 

இடுக்கண் வருவது உறுதி... .... .... 


பாலு :- என்னதம்பிவாய்அடைச்சுப்போயிட்டீங்க 

இந்தக்குறள் எப்படி இருக்கு ? நீங்களே 


சொல்லுங்க 



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு )

Friday, February 6, 2015

(மனைவியைத்தவிர) பிற பெண்கள், விலைமாதர்களின் தோள்களை யார் தழுவுவார்கள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :-  917.



நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் 


பேணிப் புணர்பவர் தோள்... ... ... 



விளக்கம்:-நெஞ்சில்பொருளைமட்டுமே எண்ணி 

உடலால் கட்டித் தழுவும் விளைமாதர்களது 

தோள்களை, நிறைகுணம் அற்ற நெஞ்சம் 

உள்ளவரே பற்றிக்கொள்வார். 

இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ரெங்கநாயகி :-  ஏண்டி சரசு,நம்மபண்ணைப்புரம் 

ஜமீந்தார் பரஞ்சோதி, இப்ப எல்லாம் உன்னையத்

தேடி இங்கே வர்றதே இல்லையே. ஏண்டி ?


சரசு :-  ஏன் ரெங்கநாயகி அக்கா. அவன் என்ன 

என்னையத் தொட்டுத் தாலி கட்டிய புருசனா 

என்ன ? இங்கேயே வந்து கிடக்க. எனக்கு 

வேண்டியதெல்லாம் அவர்கிட்ட இருக்கிற 

பணமும் நகை நட்டும் மட்டும் தான். எந்தப் 

பணக்காரப்பய முன்னாலும் நான் நின்னேன்னு 

சொன்னா அவன் எனக்கு அடிமை. ஏன்னா 

என்னோட அழகு அப்படியாக்கும் !!


ரெங்க:- அட.. பரவாயில்லையே சரசு. நான் 

என்னவோ உன்னைய வெறும் கத்துக்குட்டி 

அப்படீன்னுதான் நினைச்சேன். நீ பரீட்சையிலே 

பாஸ் பண்ணிட்டடி. அறிவு, தன்மானம்,சூடு,

சொரணை,மானம்,வெட்கம் இல்லாத மடப்பய 

மவனுக தானே நம்ம காலடியே கதின்னு 

கிடப்பானுக.  சரி விடுரி. அடுத்த வலுவான 

ஆளைக்கணக்கு பண்ணுடி சீக்கிரமாடி. நான் 

வரட்டுமா சரசு. 


சரசு சரசுதான்.


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 

பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !!   வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



மதுரை T.R. பாலு.

Thursday, February 5, 2015

பயனில்லாத சொற்களைப் பேசாதீர்கள் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பயன் இல சொல்லாமை.



குறள் எண்:-  2௦௦.



சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 

சொல்லிற் பயனிலாச் சொல்... ... ... 


விளக்கம் :-   பயன்தரும் சொற்களை மட்டுமே 

சொல்லிட வேண்டும். பயன் தராத சொற்களை 

ஒருபோதும் பேசிடவே கூடாது. இது வள்ளுவர் 

நமக்கு அருளிச்சென்ற குறளும் விளக்கமும் 

ஆகும்.



நமது நாட்டு விளக்கம் :-


ராம்ராஜ் :-  என்னடா தங்கராஜ். அப்ப்புறம் 

இடைத்தேர்தல் என்ன சொல்லுது ? ஸ்ரீரங்கம் 

தேர்தலில் யார்டா ஜெயிப்பாங்க ?

தங்கராஜ் :-  அண்ணே !! உங்க கேள்வியே 

சரியில்லையே !!இதிலென்ன சந்தேகம் 

உங்களுக்கு ? ஓட்டுக்காக லஞ்சம் பல 

உருவத்துலே எல்லா இடத்திலும் வழங்கிடப் 

படுகிறது. இலவசமாக வாக்காளர்களுக்கு 

வேட்டி, சேலை, ரொக்கப்பணம்,

காலை உணவு, மதியம் சாப்பாடு, மாலை 

டிபன், இரவு விருந்து, (பிரியாணி,மது) அப்படி 

இப்படீன்னு கண்டமேனிக்கு ஆளும்கட்சி 

காவிரித்தண்ணி போல பணத்தை 

செலவழிக்கும் நிலையிலே, வேற யார்ணே 

ஜெயிப்பாங்க ?நிச்சயம் ( அ.இ.அ.தி.மு.க.)

அயோக்கிய இளிச்சவாய்,அறிவுகெட்ட 

திருட்டு முட்டாள்கள் கட்சிதான் ஜெயிக்கும்.


ராம்ராஜ் :-  இல்லடா தம்பி நான் என்ன 

சொல்றேன்னா........................................................... 

தங்க :- அண்ணே. வள்ளுவர் என்ன 

சொல்லியிருக்காரு?

பயன் உள்ளதை மட்டும் பேசுங்க. பயன் இல்லாத 

சொற்களைப் பேச வேண்டாம்னு 

சொல்லியிருக்கார்.

அதனால வேற பேச்சு வேண்டாம். எனக்கு நேரம் 

ஆச்சு. நான் வாறன்.


இத்துடன் நமது நாட்டு விளக்கம் 

முடிவடைகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


(மதுரை T.R. பாலு)