Monday, March 30, 2015

எவ்வகை உணவு உட்கொண்டால் உன் உடலுக்கு கேடு வராது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  மருந்து.


குறள் எண்:-  945.



மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

வேறுபாடு இல்லை உயிர்க்கு... ... ...



விளக்கம் :-  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத 

உணவினைஏற்க (உட்கொள்ள) மறுத்து 

ஒத்துக்கொள்ளும்உணவினை மட்டுமே உண்டு 

வாழ்ந்தால் உயிருக்கு எந்தத் துன்பமும்இல்லை. 

இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் நல்ல விளக்கமும் ஆகும். 

நாமும் இனியாகிலும் அதனைக் கடைப்பிடித்து 

வாழ்ந்திடுவோமாக.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- 



சக்ரபாணி :-  ஏண்டா தம்பி சாரங்கபாணி நம்ம 

பைய முத்துபரணியை ஒரு வாரமா 

இந்தப்பக்கமே காணலை.

உனக்கு எதுனாச்சும் விவரம் தெரியுமா ? 

தெரிஞ்சா சொல்லுடா தம்பி.

சாரங்கபாணி :-  அண்ணே உங்களுக்கே 

தெரியும் அவன் முத்துபரணி ஒருதிருநெல்வேலி 

சைவப்பிள்ளைமகன் என்று.  அவன் ஆபீசுலே 

யாருக்கோ விருந்தாம். எல்லா நண்பர்களும் 

திண்டுக்கல்: தலைப்பாக்கட்டி பிரியாணி

கடைக்குப் போய் நல்ல ஒரு வெட்டு 

வெட்டியிருக்கான்.

அதுக்கு முந்தி டாஸ்மாக் கடைலே போயி 

எல்லோரும் ஊத்து வேற. கேக்கணுமா என்ன ? 

பயலுக்கு ரூமுக்கு வந்ததில் இருந்து ஒரே 

வயத்தால போயிட்டே இருக்கு.

அதாலே அவனை அப்போலோ மருத்துவ 

மனையிலே சேத்திருக்காங்க அண்ணே. 

இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் வீட்டுக்கு 

வருவானாம். 


சக்ர:- ஏண்டா நம்ம உடம்புக்கு எது எத்துக்குமோ 

அத்த மட்டும் நாம சாப்பிடுவோம்ன்கிற 

அடிப்படைகூடவா இவனுக்குத் தெரியல்லே. 

அனுபவிச்சாத்தான் இனிமே அந்தப்பக்கம் 

போகமாட்டான். இதைப்பற்றி நம்ம தெய்வப் 

புலவர் திருவள்ளுவர்கூட பாட்டு 

எழுதியிருக்கார். நம்ம மதுரை TR. பாலு ஐயா 

எழுதியிருக்குற தினம் ஒரு திருக்குறள்

விளக்கத்தைப் படிச்சுப் பார். உனக்கே தெரியும் 

விஷயம்.சரிடா தம்பி. எனக்கு நிறைய வேலை 

இருக்கு. வாரேன்.


சாரங்க:-  ஆட்டும் அண்ணே. நல்லபடியா 

போயிட்டு வாங்க.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு)


Thursday, March 26, 2015

பெண்களின் மனமே இப்படித்தான் சந்தேகம் கொண்டது !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள் 


அதிகாரம் :-  புலவி நுணுக்கம்.


குறள் என்ன :- 1319.




தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் 

இந்நீரர் ஆகுதிர் என்று... ... ... 



விளக்கம் :-   அவளது (காதலியின்) உடலைநீக்கி 


அவளை மகிழ்வித்திட்ட போதிலும், அவர், 


(காதலன்)  இதுபோலத்தானே 


இவர், இன்னொரு பெண்ணையும் உடலைநீக்கி 


மகிழ்வித்திருப்பார் என்று நினைத்து என்னிடம் 


அவள் சினம் கொள்வாள். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-



கவிதா :-  என்ன விஜயா !! எப்பிடிடி இருக்கே ?

அதான் நீ நினைத்தவனே உனக்கு கணவன் 

ஆகிட்டானே. அப்புறமும் ஏண்டி முகத்தை 

உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கே ?

விஜயா :-  நீ சொன்னது என்னவோஉண்மைதான்.

நான் இல்லைன்னு சொல்லலே. ஆனா அவர் 

என்னை எப்படி காதல் வலையிலே வீழ்த்தி 

எனக்கு தேவையான சுகத்தை வாரி வாரி 

வழங்குகிறாரோ அதுபோலத்தானே அவர் 

இன்னொரு பெண்ணுக்கும் வழங்கி இருப்பார் ?

என்று நினைச்சுட்டு இருந்தேன். அதான் முகம் 

உம்ம்னு இருக்கு. சொல்லுடி கவிதா, நான் 

சொன்னதிலே தப்பு ஒன்னும் இல்லையே.


கவிதா :-  ஒரு தப்பும் கிடையவே  கிடையாது.

ஆனா ஒன்னு மட்டும் விஜயா நிச்சயம்.


விஜயா :-  அது என்னன்னு கேட்டாத்தான் 

சொல்லுவியாக்கும்.


கவிதா :-  இல்லடி, வெளியே போற ஆம்பிள 

தன்னோட வேட்டியை எங்கே கழட்டி 

வைக்கிறார்னு நம்மாலே வேவு பார்க்கவா 

முடியும். சரிதான்னு விட்டுத்தள்ளுடி.


இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் 

நிறைவு பெறுகிறது.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R. பாலு )

Monday, March 9, 2015

கள்ளுக்கு (மதுவுக்கு) இல்லாத போதை வேறு எதற்கு உண்டு ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  புணர்ச்சி விதும்பல்.


குறள் எண் :-  1281.



உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு... ... ... 


விளக்கம் :-  நினைத்தால் களிப்படையச் 

செய்வதும் காணும்போது மகிழ்ச்சி அடையச் 

செய்வதும் கள்ளுக்கு இல்லை. காமத்திற்கு 

மட்டிலுமே உண்டு.  இது திருவள்ளுவர் 

நமக்கு அருளிச் சென்ற குறளும் அந்தக் 

குறளின் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கந்தன் :- என்ன அண்ணே பெரியண்ணே !!

இப்ப எல்லாம் உங்களை நம்ம டாஸ்மாக் 

கடைபக்கமே பாக்க முடியறதே இல்லை.

ஏன்னா சமாச்சாரம். கண்ணாலம் கட்டிக் 

கிட்டதுக்கு அப்புறம் மதினி வந்து உங்களை 

ரொம்பவும் திருத்திட்டாகளோ ? இல்ல நான் 

கேக்கேன்.


பெரியண்ணன் :- டேய் கந்தா உனக்கு இன்னும் 

கண்ணாலம் ஆவலடா. அதாலே உனக்கு 

விஷயம் தெரில்லே. தம்பி கள்ளை நாம 

உண்டாத்தான் மனமும் மகிழ்ச்சி அடையும் 

அப்புறந்தான் பார்க்கவே சந்தோசமும் துள்ளி 

விளையாடும். ஆனா பெண்ணிடம் இருக்குதே 

அந்த காமம், அத்த நினைச்சாலே இனிக்கும்.

பாத்தாலோ அத்தவிடவும் மகிழ்ச்சி பெறுமடா 

நம்ம மனசு. உனக்கும் கண்ணாலம் ஆவட்டும்

அதுக்கு அப்பாலேதான் உண்மை தெரியவரும். 

இந்தக் கருத்தை நான் உனக்குச் சொல்லலடா.


கந்தன் :- உம்....பிறவு...வேற யார் அண்ணாத்தே 

சொல்லிருக்காரு ? சித்த விவரமாத்தான் எனக்கு 

சொல்லேன் பெரியண்ணே.


பெரிய:தம்பி..இந்தக்கருத்தைநம்மதிருவள்ளுவர் 

சொல்லிருக்காருலே.

கந்தன் :- அவரு சொன்னா அல்லாம்சரியாத்தான் 

இருக்கும். நான் வாறன்.

பெரிய :- சரிடா...தம்பி...எனக்கும் வேலை கிடக்கு 

நானும் போயிட்டு வாறன்.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

( மதுரை. TR. பாலு.)