Monday, March 9, 2015

கள்ளுக்கு (மதுவுக்கு) இல்லாத போதை வேறு எதற்கு உண்டு ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  புணர்ச்சி விதும்பல்.


குறள் எண் :-  1281.



உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு... ... ... 


விளக்கம் :-  நினைத்தால் களிப்படையச் 

செய்வதும் காணும்போது மகிழ்ச்சி அடையச் 

செய்வதும் கள்ளுக்கு இல்லை. காமத்திற்கு 

மட்டிலுமே உண்டு.  இது திருவள்ளுவர் 

நமக்கு அருளிச் சென்ற குறளும் அந்தக் 

குறளின் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கந்தன் :- என்ன அண்ணே பெரியண்ணே !!

இப்ப எல்லாம் உங்களை நம்ம டாஸ்மாக் 

கடைபக்கமே பாக்க முடியறதே இல்லை.

ஏன்னா சமாச்சாரம். கண்ணாலம் கட்டிக் 

கிட்டதுக்கு அப்புறம் மதினி வந்து உங்களை 

ரொம்பவும் திருத்திட்டாகளோ ? இல்ல நான் 

கேக்கேன்.


பெரியண்ணன் :- டேய் கந்தா உனக்கு இன்னும் 

கண்ணாலம் ஆவலடா. அதாலே உனக்கு 

விஷயம் தெரில்லே. தம்பி கள்ளை நாம 

உண்டாத்தான் மனமும் மகிழ்ச்சி அடையும் 

அப்புறந்தான் பார்க்கவே சந்தோசமும் துள்ளி 

விளையாடும். ஆனா பெண்ணிடம் இருக்குதே 

அந்த காமம், அத்த நினைச்சாலே இனிக்கும்.

பாத்தாலோ அத்தவிடவும் மகிழ்ச்சி பெறுமடா 

நம்ம மனசு. உனக்கும் கண்ணாலம் ஆவட்டும்

அதுக்கு அப்பாலேதான் உண்மை தெரியவரும். 

இந்தக் கருத்தை நான் உனக்குச் சொல்லலடா.


கந்தன் :- உம்....பிறவு...வேற யார் அண்ணாத்தே 

சொல்லிருக்காரு ? சித்த விவரமாத்தான் எனக்கு 

சொல்லேன் பெரியண்ணே.


பெரிய:தம்பி..இந்தக்கருத்தைநம்மதிருவள்ளுவர் 

சொல்லிருக்காருலே.

கந்தன் :- அவரு சொன்னா அல்லாம்சரியாத்தான் 

இருக்கும். நான் வாறன்.

பெரிய :- சரிடா...தம்பி...எனக்கும் வேலை கிடக்கு 

நானும் போயிட்டு வாறன்.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

( மதுரை. TR. பாலு.) 

No comments:

Post a Comment