Monday, March 30, 2015

எவ்வகை உணவு உட்கொண்டால் உன் உடலுக்கு கேடு வராது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  மருந்து.


குறள் எண்:-  945.



மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

வேறுபாடு இல்லை உயிர்க்கு... ... ...



விளக்கம் :-  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத 

உணவினைஏற்க (உட்கொள்ள) மறுத்து 

ஒத்துக்கொள்ளும்உணவினை மட்டுமே உண்டு 

வாழ்ந்தால் உயிருக்கு எந்தத் துன்பமும்இல்லை. 

இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் நல்ல விளக்கமும் ஆகும். 

நாமும் இனியாகிலும் அதனைக் கடைப்பிடித்து 

வாழ்ந்திடுவோமாக.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- 



சக்ரபாணி :-  ஏண்டா தம்பி சாரங்கபாணி நம்ம 

பைய முத்துபரணியை ஒரு வாரமா 

இந்தப்பக்கமே காணலை.

உனக்கு எதுனாச்சும் விவரம் தெரியுமா ? 

தெரிஞ்சா சொல்லுடா தம்பி.

சாரங்கபாணி :-  அண்ணே உங்களுக்கே 

தெரியும் அவன் முத்துபரணி ஒருதிருநெல்வேலி 

சைவப்பிள்ளைமகன் என்று.  அவன் ஆபீசுலே 

யாருக்கோ விருந்தாம். எல்லா நண்பர்களும் 

திண்டுக்கல்: தலைப்பாக்கட்டி பிரியாணி

கடைக்குப் போய் நல்ல ஒரு வெட்டு 

வெட்டியிருக்கான்.

அதுக்கு முந்தி டாஸ்மாக் கடைலே போயி 

எல்லோரும் ஊத்து வேற. கேக்கணுமா என்ன ? 

பயலுக்கு ரூமுக்கு வந்ததில் இருந்து ஒரே 

வயத்தால போயிட்டே இருக்கு.

அதாலே அவனை அப்போலோ மருத்துவ 

மனையிலே சேத்திருக்காங்க அண்ணே. 

இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் வீட்டுக்கு 

வருவானாம். 


சக்ர:- ஏண்டா நம்ம உடம்புக்கு எது எத்துக்குமோ 

அத்த மட்டும் நாம சாப்பிடுவோம்ன்கிற 

அடிப்படைகூடவா இவனுக்குத் தெரியல்லே. 

அனுபவிச்சாத்தான் இனிமே அந்தப்பக்கம் 

போகமாட்டான். இதைப்பற்றி நம்ம தெய்வப் 

புலவர் திருவள்ளுவர்கூட பாட்டு 

எழுதியிருக்கார். நம்ம மதுரை TR. பாலு ஐயா 

எழுதியிருக்குற தினம் ஒரு திருக்குறள்

விளக்கத்தைப் படிச்சுப் பார். உனக்கே தெரியும் 

விஷயம்.சரிடா தம்பி. எனக்கு நிறைய வேலை 

இருக்கு. வாரேன்.


சாரங்க:-  ஆட்டும் அண்ணே. நல்லபடியா 

போயிட்டு வாங்க.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு)


No comments:

Post a Comment