Saturday, October 17, 2015

பேசும் திறன் என்பது எல்லோருக்கும் வரும் கலையா ? வள்ளுவரின் நிலை என்ன ?








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  சொல் வன்மை.


குறள் எண்:-  649.



பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற 

சிலசொல்லல் தேற்றா தவர்... ... ...


பொருள் :-  குற்றம் அற்ற சில சொற்களை 

சொல்லிப் பெருமை அடையத் தெரியாத

நபர்களே, பல சொற்களை சொல்லிட 

ஆசைப்படுவார்கள். இது வான்புகழ் 

வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கந்தசாமி :-  வாங்கோ..வாங்கோ.. அண்ணா 

குப்புசாமி அவர்களே. நலமா. கொஞ்ச நாளா 

எங்கே போயிருந்தேள். நம்ம வள்ளுவர் சபை 

நிகழ்ச்சியில் உங்களைக் காணாது இருந்தேன் 

அதான் கேட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம்.


குப்புசாமி :-  நான் கடந்த பத்து நாளா சென்னை 

போயிருந்தேன். அதான் என்னை உங்களால் 

பார்க்க முடியலை. என்ன விஷயத்திற்கு நான் 

சென்னை போனேன்னா கவிஞர் வைரமுத்து 

அவர்கள் எனது நெருங்கிய நண்பர். அவரது 

சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு 

அவசியம் வரவேண்டும்னு வேண்டி விரும்பி 

கேட்டதாலேயும், கலைஞர் அவர்கள் அந்தப் 

புத்தகத்தை வெளியிட, உலகநாயகன் நம்ம 

திரு கமல்ஹாசன் அவர்கள் பெற்றுக்கொள்ள 

அடடா....அந்த நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் 

பேச்சு, சர்க்கரைப் பந்தலில் தேன்மாறிப் 

பொழிந்தார் போலன்னா இருந்தது. இவருக்கு 

இருக்கும் அந்த பேச்சாற்றல் திறமை 

எல்லோருக்கும் வராது.வரவே வராது. இதுதான் 

என் கருத்து.

கந்தசாமி :- நீங்க சொன்னது நூத்துக்கு நூறும் 

மிகச் சரியான கருத்து. நம்ம மாநில முதல்வர் 

போனவாரம்ஆச்சிமனோரமாஇறுதிநிகழ்ச்சியில்

அவர் ஆற்றிய உரையில் இருந்தே அவர் தப்பு 

தப்பா பேசியதில் இருந்தே நான் 

தெரிஞ்சுண்டேன். அவரால் சரியா, முறையா, 

அவை நாகரீகமாக  பேசவே வராது என்று. 

மனோராமாவை பெண் நடிகர் திலகம் என்று 

சொல்கிறார் அவர். இதற்கு என்ன அர்த்தம் 

என்று அவர்தான் சொல்லவேண்டும். இது 

எவ்வளவு பெரிய இலக்கணப்பிழை. சும்மாவா 

நம்ம திருவள்ளுவர் மேலே சொன்ன குறளில் 

சொல்லி இருக்கிறார்.


சரிங்கோ அண்ணா நான் வரேன். சித்த 

கோவில்வரை போக வேண்டியிருக்கு. 

வணக்கம்.

No comments:

Post a Comment