Sunday, November 1, 2015

கெட்டவர்களோடு நட்பு வைத்துக் கொள்ளக்கூடாது.--மீறி வைத்துக்கொண்டால் ?





தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  சிற்றினம் சேராமை.


குறள் எண்:-  452.


நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றதாகும் மாந்தர்க்கு 

இனத்தியல்ப தாகும் அறிவு... ... ... 


விளக்கம் :-  நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் 

தன்மை மாறுவது போலவே தான் சேர்ந்த 

இனத்தின் (நண்பர்களின் )தன்மைக்கு ஏற்பவே 

மனிதர்களின் அறிவும் மாறும்.இது வான் புகழ் 

வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் 

விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

ராம்ஸ்:-  வாடா ஜேம்ஸ். என்ன சுகம்தானா ? 

ஆமா இப்பல்லாம் நம்ம ஜெயந்தனை  எங்கேடா 

ஆளையே காணோம்எங்கேபோயிதொலஞ்சான்.

ஜேம்ஸ் :-  ஆமா அண்ணே நம்ம ஜெயந்தன் 

இப்ப கெட்டநண்பர்களோடுதான் சுத்திக்

கிட்டு இருக்கான். நானும் எம்புட்டோ அறிவுரை 

சொன்னேன். பயபுள்ளே கேக்கலே.

அதிலேயும் அவன்கூட இருக்கான் பாரு அந்த 

சசிப்பய, அவன் ஒரு கெட்ட நாமிருதாப்பாய. 

ஊரை கொள்ளை அடிச்சு உலையிலே 

போடுறதுலே அவனுக்கு நிகர் அவனேதான்.



ராம்ஸ் :-அவனுக்குசொந்தஊருமன்னார்குடி

தானே ?

ஜேம்ஸ் :-  கரெட்டா சொன்னீங்க. அதே 

ஊருதான்.

ராம்ஸ் :- அவனை பாத்தா நான் சொன்னேன்னு 

சொல்லு.ஜெயந்தன் நல்லவன்தான்.  ஆனா 

அவன்கூட இருக்குற அந்த சசிப்பய கெட்டவன். 

அவன்கூட இவன் சேர்ந்தான்னு சொன்னா  

அவனோட கெட்ட குணம் இவனுக்கும் வந்துரும்.

அப்புறம் இவனும் கெட்ட செயல்களைச் செய்ய

ஆரம்பிச்சுருவான். அப்புறம் பேரு ரிப்பேர் 

ஆயிரும்.சொல்றதை சொல்லிருவோம். 

அப்புறம் அவனவன் தலை எழுத்து. அட.. 

என்ன..நான்..சொல்றது.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா. பாலு.

No comments:

Post a Comment