Wednesday, November 11, 2015

செல்வந்தர் எனும் பதவி நிலையானதா ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  நிலையாமை.


குறள் எண் :-  332.



கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே                                                                                                          பெருஞ்செல்வம் 

போக்கும் அதுவிளிந் தற்று... ... ... 



விளக்கம் :-  மனிதனிடம் செல்வம் வந்து 

சேர்வதும் பின்பு அவனை விடுத்து போவதும் 

கூத்தாட்டு அரங்கத்திற்குள் மக்களின் கூட்டம் 

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்வதும் 

கூத்து முடிந்து பின்னர் அரங்கம் முழுவதும் 

உடனடியாக காலியாகிப்போவதையும் 

போன்றது. இது திருவள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கந்தன் :- ஏண்டா..தம்பி..கடம்பா. நம்ம ஊரு 

பண்ணையார் பரமசிவம், முன்பு ஒரு 

காலத்திலேபெரிய பணக்காரராக இருந்தாரு. 

அம்பது அறுபது ஏக்கருக்கும் மேலாக  நஞ்சை 

நிலம் மூணு போகம் விளையக்கூடியது அவரு 

கிட்டே இருந்துச்சு.பிறவு அவரு சம்சாரம் 

சரோஜா அக்கா கழுத்துலே போட்டுக்கினு 

இருந்ததே சுமார் ஐம்பது பவுன் இருக்கும். 

ரெண்டு கையிலேயும் வளவிக சுமாரா ஒரு 

முப்பது பவுன் இருக்கும். இதுக்கு மேலே 

வூட்டுலே எப்படிப் பார்த்தாலும் ஒரு நானூறு 

பவுனுக்கு மேலே தேறும். இதையெல்லாம் 

தாண்டி ரொக்கப்பணம் பீரோவுலே ஒரு பத்து 

பதினைஞ்சு லட்சம் இருக்கும்.

இது தவிர பாங்க்ல சுமார் ரெண்டு கோடிக்கு 

மேலே டெபாசிட் பண்ணியிருந்தாரு. சொந்த 

வீடுதான் , காருமேலே அம்பாரி சவாரிதான் ,

இம்புட்டும் வச்சுக்கிட்டு அனுபவிச்ச மனுஷன் 

இன்னைக்கு இன்னாடான்னா, கிழிஞ்சதை தச்சு 

ஒட்டுப்போட்ட நாலு முழ வேட்டி, பழைய ஜிப்பா, 

போட்டுக்கினு எங்கயோ கணக்குப்பிள்ளை 

வேலைக்கு இல்லை போறாராம். அவரு 

சம்சாரம் சரோஜா அக்கா ஏதோ ஒரு வீட்டுலே 

பத்து பாத்திரம் தேச்சுக் கழுவி, வீட்டு வேலை 

செஞ்சுக்கிட்டு வயுத்த கழுவுதாமுல்லே. 

என்னடா கொடுமை இது. என்னடா இது உலகம். 

எப்படி வாழ்ந்த மனுஷன் இன்னைக்கு 

இப்படி ஆயிட்டாரு. எப்படிடா போச்சு அவரோட 

அம்புட்டு சொத்து, சுகம், நகை, ரொக்கம் ? இல்ல 

தெரியாமத்தான் நான் கேக்குறேன்.

கடம்பன்:-அண்ணேஉனக்குவிசயமேதெரியாதா ?

அந்தப் பண்ணையாரு பரமசிவம், சம்சாரம் 

சரோஜா அக்கா எம்புட்டு அழகானவங்க. 

நல்லவங்க.. அவுகளை வுட்டுப்புட்டு 

கேரளாவுலே இருந்து ஒரு பொண்ணு, 

சும்மா சினிமா நடிகை ராஜகுமாரி போல 

இருக்கும் .அதோட அழகுலே மயங்கி அம்புட்டு 

காசு, பணம்,நகை, நிலபுலம் அம்புட்டையும் 

தொலைச்சு சின்னாபின்னமாக்கி 

இன்னைக்கு தெருவுந்தண்ணியுமா இல்லை 

திரியுறாரு.

போதாக்குறைக்கு அப்பயே  குதிரை ரேஸ், 

லாட்டரி அப்படி இப்படின்னு வேற காசு கற்பூரம் 

மாதிரி கரைஞ்சு போச்சு. 

இதுக்கு மேலே சாராயம் அதுலேயும் சீமைச் 

சாராயம்தான் மனுஷன் குடிப்பாரு. இப்படியே 

அம்புட்டும் போயிருச்சு அண்ணே.

இப்ப அன்னாடம் கணக்கு எழுதுற வேலைக்கு 

போனாத்தான் காசு பாக்க முடியும். 

பாவம் அந்த சரோஜா அக்கா வூட்டு வேலை 

செஞ்சு காலத்தை ஓட்டுறாங்க. என்னகொடுமை 

அண்ணே இதெல்லாம்.

கந்தன் :-  தம்பி. மனுஷனுக்கு அதுலேயும் 

குறிப்பாச் சொல்லனும்னா பணக்கார 

மனுஷனுக்கு இப்படிஎல்லாம் ஒரு நிலைமை 

வரும்னு ரெண்டாயிரம் வருசத்துக்கு 

முன்னாடியே நம்ம அய்யன் திருவள்ளுவர் 

அழகா பல குறள்களில் மிகத் தெளிவாச் 

சொல்லி இருக்காரு.

நம்ம பாலு ஐயா மேலே எழுதி வச்சுருக்குற 

திருக்குறளை படிச்சா நீயே தெரிஞ்சுக்குவ. 

இதுதான் தம்பி உலகம்.

சரி...அப்பாலே...எனக்கு...டவுன்லே கொஞ்சம் 

வேலை கிடக்கு. போயிட்டு வாரேண்டா தம்பி.

************************************************************************************************************

நன்றி !!   வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.


No comments:

Post a Comment