Tuesday, November 17, 2015

இருவருக்கும் விதி என்பது வெவ்வேறு ஆகும் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  ஊழ்.


குறள் எண் :- 374.


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு... ... ..


பொருள் :-   செல்வம் உடையவராக இருத்தலும்

தெளிந்த அறிவு உடையவர் ஆவதும், வெவ்வேறு

விதிகளின்செயலால்நடைபெறும்.திருவள்ளுவர்

நமக்கு அருளிச் சென்ற குறளும் விளக்கமும் 

ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரங்கம்மா :-  ஏண்டி மங்கம்மா  நம்ம தங்கம்மா 

எப்டி இவ்வளவு குறுகிய காலத்துலே இம்புட்டுப்

பெரியபணக்காரி ஆனாடி.  உனக்கு எதுனாச்சும் 

தெரியுமா ?


மங்கம்மா :-  யக்கா ரங்கம்மக்கா உனக்கு 

விசயமே தெரியாதா ஏன்னா . அவ இப்ப 

சினிமாலே துணை நடிகையாஇருக்கா. 

அப்டி இப்டி எப்டி பாத்தாலும் எட்டு மணி

நேரத்துலே சுளையா எட்டுநூறு ரூபா 

கிடைச்சுப்போவுது.

போதாக்குறைக்கு அவ வூட்டுக்காரர் 

ஆட்டோ விருமாண்டி அண்ணே கீறாரே  

இப்ப முப்பது நாப்பது வட்டிக்கு பைனான்ஸ் 

வேற செய்யுறாரு. அப்புறம் என்னாடி திடீர்னு 

பணக்காரி அவுரதுக்கு ? இல்ல கேக்குறேன்.

ரங்கம்மா :- சரிடி. அத்தவுடு..நம்ம கங்கையம்மா 

அதாண்டி தங்கம்மாவோட தங்காச்சி 

 அவளைத்தான் சொல்றேன். அவ இருந்த 

இருப்புக்கு இப்ப என்னடி  ரொம்பவே 

படிச்சாமாதிரி உபன்யாசம் எல்லாம் 

போராளாமே. அவ எங்க போய் பேசினாலும் 

கூட்டம் சும்மா கட்டி ஏறி காதைப் 

பிக்குதாமே.எப்டிறி? ஒண்ணுமே புரிலடி.

அக்கா இன்னாடான்னா பணக்காரியாக்கீரா. 

அப்பாலே அவதங்காச்சி இன்னாடான்னா பெரிய 

அறிவுக்கொழுந்தா விளங்குறா ?.  ஒண்ணுமே 

விளங்கலடி !!

மங்கம்ம்மா :-  ஐயோ அக்கா. இத்தப் பத்தித்தான் 

நம்ம திருமலை.இரா. பாலு சார் இன்னைக்கு 

விதியைப்பத்தி வள்ளுவர் ஏன்னா 

சொல்லிகீறாருன்னு தினம் ஒரு திருக்குறள் 

பகுதிலே எழுதிக்கீறாறு. அத்தப்போயி 

நீயே உன்னோட கைப்பொட்டிலே ( LAPTOP) 

படிச்சு த்தெரிஞ்சுக்க அக்கா.


ரங்கம்மா :-  அடே எம்மவனே மகாலிங்கம் 

அம்மாவோட லாப்-டாப்பை சித்த கொண்டாடா. 

அப்டி இன்னாதான் தாத்தா வள்ளுவர் 

எழுதிக்கீராருன்னு பாப்போம்.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.





No comments:

Post a Comment