Monday, November 30, 2015

நாணம் என்னும் பெண், யாரை விட்டு விலகிச் செல்வாள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  கள் உண்ணாமை.


குறள் எண் :- 924.


நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்                                                                                             கள்ளென்னும் 

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு... ... ... 


பொருள் :-  கள் குடித்தல் என்னும் விரும்பத்
தகாத பெரிய குற்றத்தினைச் செய்பவர்களிடம் 
இருந்து, நாணம் என்னும் நல்ல பெண் விலகிச் 
செல்வாள். இது திருவள்ளுவர் நமக்கு அருளிச் 
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

மஸ்தான் :-  வாங்க சுல்தான். அஸ்ஸலாமு 
அலேக்கும்.
சுல்தான் :- வ அலேக்கும் சலாம் வ ரஹமத்து
ல்லையோ பரக்காத்து ஹூ என்ன பாவா நீங்க 
எப்படி இருக்கீங்க ?
மஸ்தான் :-  அல்லாஹ்வின் கிருபையாலே 
சுகத்தோடும் சவுக்கியத்தோடும் இருக்கேன்.
ஆமா நம்ம பய இப்ராஹீம் இப்ப எப்படி 
இருக்கான் ? மது என்னும் அந்தக் கொடிய 
பழக்கத்தில் இருந்து இன்னும் அவன் விடுபட்டதா தெரியல்லையே.
சுல்தான் :-  பாவா. அந்தக் கொடுமைய ஏன் 
கேக்கிறீங்க ? நேத்து நம்ம தெருவில் நம்ம 
அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் பாரில் பய 
எக்கச்சக்கமா குடிச்சிருப்பான் போலிருக்கு.
நிதானம் இல்லாம வீதியிலே உடை எல்லாம் 
அலங்கோலம் ஆனதொரு நிலையிலே 
அந்தப் போகும் பெண்களில் இவன 
திட்டித் தீர்க்காதவர் யாருமே இல்லை.

மஸ்தான் :- நம்ம பெரியவர் திருவள்ளுவர் 
மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறளில் கூட 
இதைத்தானே வலியுறுத்தி சொல்லியிருக்கார்.
யார் கேக்கிறா. இன்ஷா அல்லாஹ். கூடிய 
விரைவில் அவன் திருந்தி நம்மை போல 
மனுஷனா மாறி குரான் வழி நடந்து ஐந்து 
வேளையும் தொழுகை நடத்துபவனாக 
ஆக்கிட வேண்டும் என்று அல்லாஹ்விடம் 
நாம் அனைவரும் தூஆ  செய்திடுவோம்.
சுல்தான் :-  ஆமீன். 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment