Sunday, December 6, 2015

எத்தனை கோடிப்பணம் இருந்தாலும் ஊழின் முன் (விதியின் முன்பாக )அது செல்லுபடியாகாது !! திருவள்ளுவர் தரும் விளக்கம்.








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  ஊழ்.


குறள் எண் :- 377.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது... ... ...


பொருள் :-  கோடி கோடியாய்ச் செல்வம் 

இருந்தாலும் ஊழ் வகுத்திருக்கும் வகையால் 

அன்றித் தாம் விரும்பியவாறு அனுபவிக்க 

இயலாது.  இது வள்ளுவர் நமக்கு அருளிச் 

சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம்:-


பீட்டர் :-  வாங்க ஜேம்ஸ். ஸ்தோத்திரம். என்ன 
உங்க பகுதியிலே மழை மற்றும் வெள்ளத்தின் 
பாதிப்புக்கள் எப்படி இருக்கு ?

ஜேம்ஸ் :- ஸ்தோத்திரம். அதை ஏன் கேக்கறீங்க ?
வெள்ளம்னா வெள்ளம் அப்படி ஒரு வெள்ளம்.
கடந்த ஒரு முப்பது ஆண்டுகளில் இதுபோல 
ஒரு இயற்கையின் கோர தாண்டவத்தை நான் 
பாக்கவே இல்லங்க. எங்க பாத்தாலும் மக்களின் 
அழுகையும் கண்ணீரும்தான்.

பீட்டர்:-  ஆமா ஏன் ஜேம்ஸ் நம்ம கோடீஸ்வரர் 
கடற்கரை உங்க ஏரியா தானே. எப்படி இருக்கார்.

ஜேம்ஸ் :-  ஐயோ அந்தக் கூத்தை கேக்காதீங்க. அவருட்ட இருக்குற பணத்துக்கு, நல்ல மேடான இடத்துலே அழகா பங்களா கட்டி குடியிருந்திருக்கலாம். ஆனா பாருங்க 
அவரோட கிரகம், பழைய வீடு, ராசியான வீடுன்னு சொல்லி எங்க பேட்டையிலேயே இருந்தாருல்ல.என்ன ஆச்சு கடைசியிலே, வீட்டுலே வச்சிருந்த நகை, ரொக்கம் எத்தனையோ கோடிகள், வாங்கி 
வச்சிருந்த சொத்துப்பத்திரங்கள், வெள்ளிப்பாத்திரங்கள் எல்லாமே வெள்ளத்துலே அடிச்சுக்கிட்டுப் போயி 
இப்ப கட்டுன துணியோடத்தான் நம்மகூட இருக்காரு.எல்லாம் நம்ம பாலு ஐயா மேலே எழுதியிருக்குற திருக்குறள் விளக்கத்துலே சொல்லியிருக்குற மாதிரியில்லே அவரு கதையும் ஆயிருச்சு. இதுல இருந்து நாம கத்துக்க வேண்டிய பாடம் என்னான்னா இந்த உலகத்துலே யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்ல.
இதை மறந்துவிட்டு, ஊரை அடிச்சு உலையிலே போட்டு,ஆட்சி,அதிகாரத்தை பயன்படுத்தி, பல ஆயிரம்கோடிகள்சம்பாதிச்சு, எல்லா திரை அரங்குகளையும் அடிமாட்டு விலைக்கு, கட்டுனவன் வயிறு எரிய வாங்குறாங்களே 
இவங்க இத்த பாத்து திருந்தனும். சரி. எனக்கு நேரம் ஆச்சு. வரட்டுமா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.


No comments:

Post a Comment