Tuesday, December 8, 2015

கெட்டஎண்ணம் கொண்டவன் நல்லாயிருப்பதும் நல்லவன் வறுமை நிலையில் வாடுவதற்கும் காரணம் என்ன ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அழுக்காறாமை.


குறள் எண் :-  169.



அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 

கேடும் நினைக்கப் படும்... ... ...


பொருள் :-  பொறாமை மனம் கொண்டவன்/

கெட்டவன் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் 

அப்படிப்பட்ட பொறாமை அற்றவன்/நல்லவன் 

வறுமையில் வாடி வதங்கி அழிவதற்கும் என்ன 

காரணம்*என்பதைஆராய்ந்துபார்க்கவேண்டும்.

(முற்பிறவியில்கெட்டவன்செய்தநற்பலன்களும் 

நல்லவன் செய்த தீயபலன்களுமே காரணம்*)

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 

ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

மன்னாரு :  வாங்க அண்ணே ஜப்பாரு அண்ணே 

என்ன ஒரு வழியா மழைக்கு விடைகொடுத்து 

அனுப்பி வச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன். 

என்ன சொல்றீங்க?


ஜப்பாரு :- அட தம்பி மன்னாரு.நீ ஒன்னு. மழை 

இன்னா எங்க வூட்டுக்கு வந்த விருந்தாளியா 

என்ன விடையைக் கொடுத்து அனுப்பறதுக்கு. 

உக்கும்..இன்னும்கூட அது பெஞ்சாலும் 

பெயும்னுதானே சொல்லிகிறாங்க. சரி...

அத்த விடுறா தம்பி. எனக்கு ரொம்ப நாளா ஒரு 

சந்தேகம்.

அது இன்னான்னு கேட்டுக்கினின்னா அல்லார் 

குடியையும்கெடுக்குறவன், ஊரை அடிச்சு 

உலையில போடறவன்,லஞ்ச லாவண்யத்தாலே 

கோடிகோடியாக் கொள்ளையடிக்கிறவன்,

நல்ல வருமானத்தைக் கொடுக்கிற அல்லா 

சொத்தையும் தியேட்டர்கள், நஞ்சை நிலம், 

நீலகிரி மலையில் உள்ள எஸ்டேட்டுகள், 

டவுண்ல இருக்குற பெரிய பெரிய மனைகள் 

இந்த மாதிரி ஆட்டையப் போடுறதே தொழிலா 

செஞ்சுகிட்டு அரசியலிலும் ஈடுபட்டு அதிகார 

பதவியை நீதிமன்றத்தாலே இழந்தாலும் 

மேல்நீதி மன்றத்திலே கொடுக்க வேண்டியதைக் 

கொடுத்து மீண்டும் அதிகார வெறியோடு 

திரியுறவங்க இவங்க எல்லாரும் நல்லாத்தானே 

இருக்காங்க. ஆனா அதேநேரம் தினசரி 

உழைப்பாலே வருமானம் பாத்து, பொண்டாட்டி,

புள்ளைங்க, இவங்களை எல்லாம் கஷ்டப்பட்டு 

காப்பாத்துறவன் நல்ல நெஞ்சம் உள்ளவன், 

வறுமையிலே வாடுறானே. இதுக்கு எல்லாம் 

இன்னா காரணம் ?சொல்றா தம்பி.

மன்னாரு :-  அண்ணே. இதுக்குத்தான் நம்ம 

திருவள்ளுவர் மேலே குறிப்பிட்டிருக்குற 

பாட்டுலே விளக்கம் கொடுத்துருக்காறே

இப்ப கெட்டவன் போன ஜென்மத்துலே 

நன்மையா சென்ஜ்ருக்கான்.

ஆனா அதே சமயம் இந்த ஜென்மத்துலே 

நல்லவனா இருக்கவன் போன பிறவியிலே 

அநியாயம், அக்கிரமம் பண்ணி வாழ்ந்ததால் 

இப்ப கஷ்டப்படுரான்னு சொல்லிகீறாரு அத்த 

படிங்க அண்ணே.

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் 

வரட்டா.


நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.


No comments:

Post a Comment