Sunday, July 31, 2016

நம்மை இகழ்பவர்களிடம் நாம் எப்படி நடந்திட வேண்டும் ? திருவள்ளுவர் நமக்கு காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பொறை உடைமை.

குறள் எண்:-   151.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார்ப் பொறுத்தல் தலை... ... ... 


பொருள் :-  தன்னைத் தோண்டுபவர்களையும்
தாங்கிக் கொள்கிற நிலத்தை போல, தம்மை 
இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்வதே 
தலையாய பண்பு. இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

சின்னச்சாமி :-  வணக்கம் தம்பி கண்ணுச்சாமி.
சுகமா இருக்கீயளா ?
கண்ணுச்சாமி :- உம்..சுகத்துக்கு இங்கன என்ன 
குறைச்சல் அண்ணே. ஏதோ இருக்கேன்.
சின்ன :- அட..என்னடா..தம்பி.. அலுத்து பேசுற 
மாதிரியில்லே இருக்கு ? என்னடா சொல்றா ?
நான் உன் அண்ணாத்தை கேக்குறேன்ல.
கண்ணு :- அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணே 
அப்புறம் நீங்க எப்டி இருக்கீய ?
சின்ன :- நல்லா சவுக்கியமா இருக்கேண்டா 
தம்பி. அப்புறம் நாட்டு நடப்புக்கு வருவோம்டா 
தம்பி.  இந்த பொம்பள நம்ம தளபதிய, நம்ம 
தலைய கொஞ்சமாச்சும் மதிக்குதாடா தம்பி.
எப்ப பார்த்தாலும் ரொம்ப திமிராவே பேசுது 
கட்சியை நம்ம கழகத்தை ரொம்ப இழிவா 
இகழ்வாவே  பேசுதுடா தம்பி. இது மாறவே 
மாறாதாடா தம்பி.
கண்ணு :-  அண்ணே விடுங்க இன்னைக்கு 
நம்ம மதுரை TR.பாலு ஐயா, எடுத்துப்
போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள்ளே
என்ன போட்டிருக்கார்னா திருவள்ளுவர் 
நம்மளை இகழ்பவர்களை  நாம பொறுத்துத்
தான் போகணும் எப்டின்னா நிலம் எப்டி 
தோண்டுறவங்களை தாங்குதோ அது போல 
நாமளும் இருக்கணும் என்று எழுதிருக்கார் 
அண்ணே. அது மாதிரி நாமளும் இருப்போம்.
அட..என்ன..நான்..சொல்றது ? சரிதானே 
அண்ணே.
சின்ன :-  தம்பி நீ சொல்றப்ப எல்லாமே 
சரியாத்தாண்டா இருக்கும். அப்புறம் அண்ணே 
கொஞ்சம் டவுண் வரைக்கும் போயிட்டு 
வாறன். 
************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு. 


Saturday, July 30, 2016

செல்வம், செல்வாக்கு,இவைகளை இழந்துவிட்ட மனிதனின் நிலைமை இப்படித்தான் !! வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மானம்.

குறள் எண் :-  964.


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை... ... ...

பொருள் :-  நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
தமது நிலையில் இருந்து தாழ்வடைந்தால்,
தலையில் இருந்து கழிந்த/வீழ்ந்த மயிரின்
நிலைமையை அடைவார். இது வள்ளுவர்
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன்
பொருளும் ஆகும்.

Saturday, July 16, 2016

யார் இனிமை நிறைந்த சொற்களையும் கேட்டவுடன் கொடுக்கும் குணத்தை உடையவனும் ஆவான் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  சுற்றம் தழால்.

குறள் எண் :-  525.




கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய 

சுற்றத்தால் சுற்றப் படும்... ... ... ... 


பொருள் :-  இனிமை நிறைந்த சொற்களையும் 
கேட்டதைக் கொடுக்கும் பண்புடையவன் எவன் எனில் அவன் எராளமான சுற்றத்தினரால் சூழப்பட்டு இருப்பான். இது வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் அதன் பொருளும் ஆகும்.

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

கன்னையா :- வாங்க தம்பி பொன்னையா. என்ன 
நேத்து வீட்டுலே ஏகப்பட்ட கூட்டம் ஏதாவது 
விசேஷமா ?

பொன்னையா :- அண்ணே. அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணே. ஊரிலே இருந்து என்னோட ஐந்தாவது அக்காவும் அத்தானும் குழந்தைகளும் எங்களோட வீட்டுக்கு வந்திருந்தாங்க. என் மருமகனுக்கு 
நேத்து பொறந்த நாள். அதான் வீட்டுலே விருந்து 
அப்டி,இப்டின்னு கொஞ்சம் கூட்டம். வேற ஒன்னும் இல்லை அண்ணே.

கன்னையா :- டேய்..தம்பி..உன்னை பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா. இன்னைக்கு இம்புட்டு விலைவாசி இருக்குற இந்த காலத்துலேயும் சொந்த பந்தத்தை 
விட்டுறாம அரவணைச்சு போற பாத்தியா அது 
உண்மையிலேயே மனசுக்கு ரொம்பவே இதமா 
இருக்குடாதம்பி.உம்..இந்தக்காலத்துலேயாருடா 
தம்பி உன்னைய மாதிரி சொந்தத்தை கொண்டாடும் குணம் உள்ளவங்க இருக்காங்க. நீ நல்லா அன்பா பேசுறே. உன்கிட்டே இருக்குறத சொந்தக்காரங்க கேக்குறதை இல்லன்னு சொல்லாம கொடுக்குறே உன்னைய மாதிரி திருவள்ளுவர் காலத்துலேயும் ஆளுக இருந்திருக்கானுவ. அதால தான் அந்த 
மனுசனும் இன்னைக்கு நம்ம மதுரை TR பாலு 
சார் எடுத்துப் போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள் பகுதியிலே ஒரு குறள் எழுதி இருக்காருடா  தம்பி. எந்த சூழலிலும் இந்த குணத்தை மட்டும் நீ மாத்திக்கவே செய்யாதடா தம்பி. சரி. அண்ணே கொஞ்சம் டவுண் வரை போயி காய்கறி வாங்கிட்டு வாறன். மதினி காத்துட்டு இருப்பா. வரட்டடா தம்பி.

பொன்னையா :-  சரிங்க அண்ணே சூதானமா 
பாத்து போயிட்டு வாங்க அண்ணே. நன்றி அண்ணே.


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.