Sunday, July 31, 2016

நம்மை இகழ்பவர்களிடம் நாம் எப்படி நடந்திட வேண்டும் ? திருவள்ளுவர் நமக்கு காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பொறை உடைமை.

குறள் எண்:-   151.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார்ப் பொறுத்தல் தலை... ... ... 


பொருள் :-  தன்னைத் தோண்டுபவர்களையும்
தாங்கிக் கொள்கிற நிலத்தை போல, தம்மை 
இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்வதே 
தலையாய பண்பு. இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

சின்னச்சாமி :-  வணக்கம் தம்பி கண்ணுச்சாமி.
சுகமா இருக்கீயளா ?
கண்ணுச்சாமி :- உம்..சுகத்துக்கு இங்கன என்ன 
குறைச்சல் அண்ணே. ஏதோ இருக்கேன்.
சின்ன :- அட..என்னடா..தம்பி.. அலுத்து பேசுற 
மாதிரியில்லே இருக்கு ? என்னடா சொல்றா ?
நான் உன் அண்ணாத்தை கேக்குறேன்ல.
கண்ணு :- அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணே 
அப்புறம் நீங்க எப்டி இருக்கீய ?
சின்ன :- நல்லா சவுக்கியமா இருக்கேண்டா 
தம்பி. அப்புறம் நாட்டு நடப்புக்கு வருவோம்டா 
தம்பி.  இந்த பொம்பள நம்ம தளபதிய, நம்ம 
தலைய கொஞ்சமாச்சும் மதிக்குதாடா தம்பி.
எப்ப பார்த்தாலும் ரொம்ப திமிராவே பேசுது 
கட்சியை நம்ம கழகத்தை ரொம்ப இழிவா 
இகழ்வாவே  பேசுதுடா தம்பி. இது மாறவே 
மாறாதாடா தம்பி.
கண்ணு :-  அண்ணே விடுங்க இன்னைக்கு 
நம்ம மதுரை TR.பாலு ஐயா, எடுத்துப்
போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள்ளே
என்ன போட்டிருக்கார்னா திருவள்ளுவர் 
நம்மளை இகழ்பவர்களை  நாம பொறுத்துத்
தான் போகணும் எப்டின்னா நிலம் எப்டி 
தோண்டுறவங்களை தாங்குதோ அது போல 
நாமளும் இருக்கணும் என்று எழுதிருக்கார் 
அண்ணே. அது மாதிரி நாமளும் இருப்போம்.
அட..என்ன..நான்..சொல்றது ? சரிதானே 
அண்ணே.
சின்ன :-  தம்பி நீ சொல்றப்ப எல்லாமே 
சரியாத்தாண்டா இருக்கும். அப்புறம் அண்ணே 
கொஞ்சம் டவுண் வரைக்கும் போயிட்டு 
வாறன். 
************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு. 


No comments:

Post a Comment