Monday, August 1, 2016

யாரைக்கண்டு நாம் அஞ்சிட ( பயம்கொள்ள ) வேண்டும் ? திருவள்ளுவர் கருத்து !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  உட்பகை.

குறள் எண் :-  882.


வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு... ... ...

பொருள் :-  வாள் போல, வெளியில் தெரியும் 
பகைவர்களைக் கண்டு நாம்அஞ்சிடத் தேவையில்லை.உறவினர் போல மறைந்திருக்கும் பகைவர்களைக் 
கண்டு அஞ்ச வேண்டும். இது திருவள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
பொருளுமாகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கவிதா :- என்ன நமீதா அக்கா நம்ம தோழியோட 
நிலைமை கடைசியிலே இப்படி ஆயிருச்சே.
நமீதா :- யாரைடி சொல்லுறே நீ ?
கவி :-  அதான் நம்ம மேட்டுத்தெரு மேனகா 
அவளைப் பத்தித்தான் சொல்றேன்.
நமீ:-  ஒ.  அவ கூடவே ஒண்ணா உரசிட்டே 
ஒட்டிக்கிட்டு இருந்தாளே அந்த ஓடுகாலி 
புவனா, அவளைப்பத்தியா ?
கவி :- ஆமா அக்கா. மேனகா அவள எவ்வளவு 
நம்பி இருந்தா. உசுரையே வச்சிருந்தா. 
கடைசியிலே என்னாடான்னு பாத்தா, ஒருநாள் 
இவ பாடுபட்டு சேத்து வச்சிருந்த அம்புட்டு 
பணம்,நகை, அல்லாத்தையும் சுருட்டிகிட்டு,
திருடிட்டு ஓடிப்போயிட்டாளே அக்கா. உம்..
இது என்ன கொடுமை ?
நமீ :- அடியே கிறுக்குச் செருக்கி. நீ ஒருத்தி 
உலகம் புரியாதவளாவே இருக்கியேடி. நம்ம 
வள்ளுவர் இல்ல திருவள்ளுவர் அவர் இன்னாடி 
சொல்லிருக்கார் ? அதான் நம்ம மதுரை TRபாலு 
சார், தினம் தினம் எழுதிட்டு வர்றாரே தினம் ஒரு 
திருக்குறள் அப்டின்னு முக நூல்லே. அத்தை நீ எங்கே படிக்கப்போறே. படிடி அதை சோம்பல் படாமே. இன்னைக்கு கூட அவரு நீ சொன்ன இத்தப்பத்தித்தான்டி எழுதியிருக்கார் 
யாரைப் பாத்து நாம பயப்படணும்னு சொல்லி.
அதான் நான் யாரையுமே நம்பறதே இல்லை.
சரி..சரி..நீ இடத்தைக் காலி பண்ணு; நான் வெளியே போகப்போறேன். வரட்டா.
***************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.

No comments:

Post a Comment