Monday, August 22, 2016

முறைதவறி ஆளும் மன்னவன் முடிவில் இழப்பது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.

குறள் எண் :-  554.





கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 

சூழாது செய்யும் அரசு... ... ... 


பொருள்  :-  பின்னால் வருவதை அறியாமல் 
முறை தவறி ஆட்சி செய்திடும் மன்னவன் 
வருவாயையும் குடிமக்களையும் முடிவில் 
இழப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிய 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-

ஜபாரு :- என்ன மன்னாரு, ஒரே சந்தோசமா 
இருக்காப்புலே. இன்னாடா நயினா விசயம் ?
சும்மா சொல்றா தம்பி.

மன்னாரு :-  அது ஒன்னும் இல்ல அண்ணே 
நேத்து எங்க ஆத்தா, யாரோட எதிர்ப்பும் 
இல்லாங்காட்டி, சோலிய முடிச்சுப்புட்டாங்க 
இல்ல அதான் செம ஜாலியா கீறேன்.

ஜபாரு :- இன்னாடா சொல்றே ? உங்க ஆத்தா 
உங்க நயினாவை போட்டுத் தள்ளிருச்சா ?

மன்னாரு :- அட..உங்க வாயிலே வசம்ப வச்சு 
தேய்க்க. அண்ணே நான் இன்னா சொல்றேன்னு 
உங்களுக்கு புரியலையா ? எங்க ஆத்தான்னு 
சொன்னது ஆளும் எங்க அம்மாவை இப்ப 
புரிஞ்சுதா ?

ஜபாரு :- பார்ரா. உம்.. என்னமோ உங்கட்டே 
அதிகாரம் கீது அதாலே இந்த ஆட்டம் போட்டு 
அலையுறீங்க. செய்ங்க செய்ங்க ஆனா ஒன்னு 
தம்பி எதுலையும் ஒரு முறை இருக்கணும் 
அப்பாலே அது இல்லன்னு வச்சுக்க,அது யாரா 
இருந்தாலும், மன்னவனா இருந்தாலும் ஆளும் 
அதிகார வர்க்க தலயா இருந்தாலும் கடோசிலே 
அம்புட்டும் காலியாப்போகும் அப்டீன்னு நான் 
சொல்லலே தம்பி நம்ம வள்ளுவர் ஐயாதான் 
சொல்லிகீறாரு. அத்த நம்ம மதுரை பாலு ஐயா 
இன்னக்கி எடுத்து போட்ட்ருக்குற குறள் படிச்சு 
சொல்றேன்.பாத்துக்க.உங்களுக்கும்உங்களோட 
கூட்டத்துக்கும் சீக்கிரமே கருமாதி வரப்போது 
அம்புட்டுத்தான் சொல்வேன். வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு. 

No comments:

Post a Comment