Tuesday, August 23, 2016

பெருமை என்றால் என்ன ? சிறுமை என்றால் என்ன ? திருவள்ளுவர் அருளிச்சென்றது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெருமை.

குறள் எண் :-  797.



பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல்... ... ... 

பொருள் :-  செருக்கு (திமிர்,ஆணவம்,அடங்காமை) கொள்ளாமல் இருப்பதே பெருமை ஆகும். காரணம் ஏதுமின்றி செருக்குடன் திரிவதே சிறுமை ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

சுப்பையா :-  வணக்கம் தம்பி கந்தையா.என்ன எப்படி சுகம் எல்லாம்.

கந்தையா :-  அண்ணே !! உங்க அன்பும் ஆதரவும் இருக்குறவரை என் சுகத்துக்கு என்ன குறைச்சல். நல்லா இருக்கேன்.

சுப்ப:-  ஆமா ஏண்டா தம்பி இந்த பொம்பளே நான் யாரைச் சொல்லுதேன்னு உனக்கு புரியுதா ?

கந்த:-  என்னண்ணே !! இது புரியாமலா?

சுப்ப:- அது ஏண்டா தம்பி இம்புட்டு திமிர்,ஆணவம்,அடங்காமையோட அலையுது?

கந்த:-  எல்லாம் பணத்திமிர்தான் வேற என்ன ? கேக்க ஆள் இல்லைங்கற மமதை.பெரும்பான்மை கையிலே இருக்கின்ற அகம்பாவம் இதாண்ணே காரணம்.

சுப்ப:- ஏண்டா தம்பி இதெல்லாம் நிலைக்குமா?

கந்த :-  அண்ணே எல்லாம் கொஞ்சகாலம்தான்.ஆனானப்பட்ட இதுக்குமேலே திமிரோட திரிஞ்சவங்க அம்புட்டுப்பேரும் மண்ணோடு மண்ணாகிப் போனானுவ. இது மட்டும் என்ன சாஸ்வதமாவா இருக்கப்போகுது. எல்லாம் கொஞ்சகாலம்தான். தசா புத்தி நல்லா இருக்கும்வரை நடக்கும்.  

சுப்ப :- அப்புறம் தம்பி ?

கந்த:- அப்புறம் என்ன ? கோவிந்தா கோவிந்தா !!எல்லோரும் போன இடத்துக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் எனக்கு வேலை கிடக்கு. அண்ணே நாம சாயந்திரமா பாப்போம்.நான் போயிட்டு  வாரேன் அண்ணே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment