Sunday, August 7, 2016

மனம்போன போக்கில் செலவு செய்பவன் கதி என்ன ஆகும் ? திருவள்ளுவர் கருத்து இதுதான் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வலியறிதல்.

குறள் எண் :-  479.




அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்... ... ...

பொருள் :-  வருவாயின் அளவை அறிந்து அதற்கு 
ஏற்றவாறு வாழாதவனுடைய வாழ்க்கை, 
இருப்பது போலத் தோன்றி முடிவில் எதுவும் 
இல்லாமல், அழிந்தே போகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

சின்னச்சாமி :-  என்ன தம்பி கண்ணுச்சாமி நம்ம 
பெருமாள்சாமி இன்னடா ஆனான் ? ஒரு மாசமா 
வீடு பூட்டியே இருக்கு. ஆளை கண்ணுலேயே 
பாக்க முடிலே. உனக்குஎதுனாச்சும்தெரியுமாலே.

கண்ணுச்சாமி :-  அண்ணே !! உங்களுக்கு மேட்டரே தெரியாதா ?

சின்ன :- என்னால..மேட்டர்..கீட்டர்..ன்னு பேசிட்டு 
தமிழ்லே பேசுலே.அப்பாலே அறைஞ்சு புடுவேன்.

கண்ணு :-  அண்ணே. அவன் ஒரு ஒட்டைக்கை
அப்டீங்கறது அல்லாருக்குமே தெரியும். சும்மா 
கண்டமேனிக்கு செலவு செஞ்சுட்டு இருந்தான்.
தன்னோட இருப்பு இன்னா, வரவு இன்னா, அத்த 
தெரிஞ்சுகிட்டு, அதுக்குள்ளே அவன் வாழலே 
அண்ணே. அதான் கடோசியிலே கோவிந்தா ஆயிப்போயி, ஓடிப்போயிட்டான் அண்ணே. இந்த விசயத்தை நம்ம திருவள்ளுவர் ஒரு குறள்லே அருமையா எடுத்து எழுதிருக்காரு. அதத்தான் நம்ம மதுரை T.R.பாலு சார் இன்னைக்கு தனது முகநூல் பதிவுலே தினம் ஒரு திருக்குறள்லே பதிவு பண்ணிருக்கார் அண்ணே. இப்ப அத்த படிச்சுட்டுத்தான் வாரேன். அப்பாலே எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு. பொழுது சாஞ்ச பொறவு நான்வந்துஉங்களபாக்குறேன்அண்ணே.
வரட்டா ?

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment