Thursday, August 11, 2016

அறிவற்றவர்கள் நிறைந்த சபையில் அறிஞர்கள் பேசினால், அது எதற்கு ஒப்பாகும் ? திருவள்ளுவர் கூறிய கருத்து !!





தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அவை அறிதல்.

குறள் எண் :-   720.




அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் 
அல்லாதார்முன் கோட்டி கொளல்... ... ...

பொருள் :-  தம்மைப்போன்று அறிவுடையார் அற்ற சபையில், நல்ல கருத்துக்களைச் சொல்வது,தூய்மை இல்லாத இடத்தில், அமிழ்தத்தை ஊற்றியதைப் போன்றது. இது வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளுமாகும்.

நாட்டு நடப்பு விளக்கம்:-

சங்கிமங்கி :-  என்னடா மங்கி சங்கி இப்ப 
நடந்துட்டு இருக்கிற சட்டமன்றக் கூட்டத்தில் 
நம்ம தல தளபதி புள்ளி விவரங்களோட எப்டி 
பேசி சும்மா கலக்குறாரு பாத்தியாடா ?

மங்கிசங்கி :-  ஆமா ..நானும் பாத்தேன் அத்த.
ஏண்ணே நான் கேக்கேன், நம்ம தளபதி நல்ல 
அரசியல்லே அனுபவசாலி. அதிலும் பழுத்த 
அரசியல்வாதி. அவர் போயிட்டு இந்த ஒன்னும் 
தெரியாத முட்டாப்பயலுவ நிறைஞ்ச அந்த 
சபையிலே ஏன் பேசணும் ? இப்டி பேசினா 
அது எதுக்கு ஒப்பாகும் அப்டின்னு நம்ம மதுரை 
TR.பாலு அவுக எழுதியிருக்குற தினம் ஒரு 
திருக்குறள் பகுதியிலே படிச்சேன் அதான் 
நான் உங்கட்ட கேக்குதேன்.

சங்கிமங்கி :- தம்பி நீ சொல்லறது என்னவோ 
சரிதான். ஆனா நம்மள தேர்ந்தெடுக்குற அந்த 
பகுதி மக்களுக்காக, நாம எதுனாச்சும் பேசித் 
தானேடா ஆவணும். அதுக்குத் தாண்டா நம்ம 
தளபதி, ரொம்ப பொறுமையோட பேசுறார்.
என்ன புரிஞ்சுதா ? சரி தம்பி நான் கடைக்குப் 
போவனும். வரட்டா ?

மங்கிசங்கி :- அண்ணே பாத்து சூதானமா நீங்க 
போய்ட்டு வாங்கண்ணே. அப்பாலே நாம 
சாயங்காலம் பூங்காலே சந்திச்சு பேசுவோம்.

**********************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

No comments:

Post a Comment