Saturday, June 28, 2014

காதலியின் அங்க அடையாளங்களைப் பற்றி வள்ளுவர் கூறுவது என்ன ?








தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :-  நலம் புனைந்துரைத்தல்.


குறள் எண் :-  1113.


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு... ... ... ... ...


விளக்கம் :-  மூங்கில்போன்ற தோள்களை 


உடைய இவளுக்கு தளிரே மேனி, முத்தே பற்கள், 


இயற்கை மணமே மணம், வேல் போன்ற 


கண்கள்.  இது நமக்கு திருவள்ளுவர் அருளிய 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  




மங்கன் :-  என்னப்பா ரங்கா உனக்கு அனேகமா 


அடுத்த வாரம்  இந்நேரம் கல்யாணங்காட்சி 


எல்லாம் முடிஞ்சு இருக்கும். ஆமா தம்பு ரங்கா 


 தம்பதிகள் நீங்க தேன்நிலவுக்கு எங்க 


போப்போறதா உத்தேசம். ஆமா உனக்கு 


பொண்டாட்டியா வரப்போறவளை நீ பாத்தியா?


எப்படிப்பா இருப்பா ? நிறம் எப்படி ? உடம்பு 


எப்படி, உயரம் எப்படி ? நல்ல பேரழகியா ? 


சொல்றா தம்பி விவரமா !!


ரங்கா :-  அண்ணே !! எனக்குப் பொண்டாட்டியா 


வரப்போறவ பேரு வள்ளி நாயகி. 



 பேருக்கேத்தபடிநல்ல நாட்டுக்கட்டை. 


உருட்டுக்கட்டை மாதிரி 


உடம்பு, நிறம் என்னவோ மாநிறம்தான் 


இருந்தாலும் அவளுக்கு இருக்கு முத்துப்போல் 


பல்வரிசை, மூங்கிலைப் போன்ற தோள்கள், 


நல்ல இயற்கை கிராம மணம் பொண்ணு 


அப்டியே பாத்தீன்னு சொன்னால் அப்சரஸ்தான் 


அண்ணே.


மங்கன் :-  உம்...உனக்கு என்ன...கொடுத்து 


வச்சவன்.நீ சொல்றதைப்பாத்த அந்தக்காலத்து 


திருமதி. நடிகை K.R.விஜயா, சாவித்திரி, ஜமுனா 


இவங்க எல்லோருடனும் கூட்டி, அப்படியே 


ராஜசுலோச்சனாஇவங்களையும் சேத்துப் 


பிசைஞ்சு மாவிலே அச்சு வாத்தாப்புலே  


அப்படியே இருக்கும். சரி நான் இப்ப நான் 


பாத்-ரூம் போயிட்டு வாறன்.


நன்றி !! வணக்கம் !!



மதுரை TR பாலு.


Friday, June 27, 2014

அறச்செயல் என்பது எது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கொல்லாமை.


குறள் எண் :-  321.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்... ... ... ... ... ... ... 


விளக்கம் :-  அறச்செயல் என்பது எதுவென்றால், 


பிற உயிர்களைக் கொள்ளாமல் இருப்பதே ஆகும்.


கொல்வதால், தீயவினைகள் எல்லாம் 


தானாகவே வந்து சேரும். 


இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

Tuesday, June 24, 2014

அழும்படியாக நமக்கு அறிவுரை சொல்பவனே நல்ல நண்பன் ஆகும்--வள்ளுவர் தரும் அறிவுரை!!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  நட்பாராய்தல்.


குறள் எண் :-  795.



அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய 


வல்லார்நட்பு ஆராய்ந்து கொளல்... ... ... ... ...         



விளக்கம் :-   நனமையல்லாத செயலை 


நாம் செய்கின்றபோது கண்ணுற்று நாம் 


வருந்தும்படியாக (அழும்படியாக) இடித்துச்           


சொல்லி நம்மைத் திருத்தபவர்களின் நட்பை 


நாம் ஆராய்ந்து கொள்ளவேண்டியது அவசியம். 


இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

Thursday, June 19, 2014

புறங்கூறிப் போட்டுக்கொடுப்பவனை என்ன செய்திட திருவள்ளுவர் சொல்லியுள்ளார் பாருங்கள் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  புறங்கூறாமை .


குறள் எண் :-   183.



புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்


அறங்கூறும் ஆக்கம் தரும் ... ... ... ... ... ...



விளக்கம் :-  புறங்கூறிப் பொய்யாக உயிர்


வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாமல்


வறுமையுற்று இறந்துவிடுதல், அறநூல்கள்


சொல்லும் ஆக்கத்தைத் தரும். இது வான்


புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்


அதன் விளக்கமும் ஆக்கமும் ஆகும்.                         



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-                                         



ரகோத்தமன் :- டேய் !! புருஷோத்தமா !! 


நோக்கு விஷயம் தெரியுமோ ?                                     


புருஷோத்தமன் :-  ஏண்டா காலங்கார்த்தாலே 


அபிஷ்ட்டு மாதிரி பேசிண்டு இருக்காய். நீ வந்து 


சொன்னால்த்தானேடா மண்டு, நேக்குயாரையும் 


பற்றி தெரியவரும். சொல்றா அபிஷ்ட்டு, 


விஷயத்தை.                                                                               


ரகோத்:-  சொல்றேன்டா. நோக்கு விஷயத்தைச் 


சொல்லாம வேற யாரண்டடா நான் 


சொல்வேன்?நம்ம அக்ராஹாரத்து அம்பி 


ஆகாஷ் இருக்கான்லயோ அவன் யாரோ நம்ம 


விட கீழ்சாதியிலே பொறந்த  பொம்னாட்டியோட 


ஸ்நேகம் வச்சுனுட்ருக்கானாம். நேக்குத் தகவல் 


வந்தது. அதாண்டா அழுக்குத் துணிவெளுத்து 


தருவானோல்யோ நம்ம குப்பன் அவனோட 


இளைய சம்சாரத்தோட  பொண்ணு பேரு 


பொன்னுத்தாயி, அவளும் இவனும் தினசரி 


சினிமா, டிராமா,ஸர்க்கஸ்,பீச்சுன்னு, சுத்தோ 


சுத்துன்னு சுத்திண்டு இருக்கா. ஊரையே 


கேவலப்படுத்திண்டு இருக்க. நாத்தமா நாத்தம் 


படு நாத்தம் நார்றது.அட பெருமாளே 


இந்த அன்யாயத்த நீ கொஞ்சம் தட்டிக் 


கேக்கப்படாதோ.                                                                     


புருஷோ:- அது என்னடா ஜாதியிலே கீழ்ஜாதி 


மேல்ஜாதின்னுட்டு அம்பி ரகு லோகத்திலே  


இரண்டேஜாதிதான் உண்டு. ஒன்னு இரக்கப்பட்டு 


கஷ்டப்பட்ரவாளுக்கு உதவுரஜாதி,இன்னொன்னு 


என்சுகம்தான் எனக்கு குறி, யார் எக்கேடு 


கெட்டாலும் அத்த பத்தி கவலையே 


இல்லைன்னுட்டு சுகம்மா வாழ்றாளே அவா ஒரு 


ஜாதின்னுட்டு நம்ம அவ்வைக் கிழவி 


சொல்லிருக்காளே அது நோக்கு தெரியாதோ 


என்ன ?                                                                                       


ரகோத்:- டேய். நீ இத்த தப்பித்தவறி 


யாரன்டையும் போட்டுக்கொடுத்துராதேடா, 


என்னோட செல்லம். ( மனசுக்குள். இவன் 


ஒருத்தன்ட்ட சொன்னாப்ப் போதுமே, அது 


தினத்தந்தி பேப்பர்லே போட்டா மாதிரி)                   



புருஷோத்:- நேக்கு என்னடா வீண் வம்பு. எந்த 


ஆண் நாய். எந்த பொட்டநாயோட போனாநேக்கு 


என்ன ஆச்சு. யாரண்டையும் நான் சொல்லிட 


மாட்டேன். (மனசுக்குள். முதல்லே இத  


ஆகாஷோட தோப்பனாரன்டையும் அவனோட 


தாயாரன்டையும் போய் சொல்லன்னா நேக்குத் 


தலையே வெடிச்சுடும். பெருமாளே என்னமட்டும் 


காப்பாத்து) நேக்கு கோவிலுக்குப் போகணும். 


நான் வரட்டுமாடா அம்பி ரகோத்தமா.                       


ரகோத்:- நானும் கிளம்புரேண்டா. என்ன நம்ம 


ரங்கஅய்யங்காரோட மாமி ரங்கநாயகி 


சாயங்காலமா, பொழுது சாஞ்சதுக்கு அப்புறமா, 


மாமாவும் நைட் ஷிப்ட் வேலைக்குப் போன 


பிறவாட்டி, மாமி ஆத்துக்கு வரச்சொல்லி 


யிருக்கா அவா ஆத்துலே இன்னைக்கு பட்சணம் 


பண்ணனுமாம். நான்தான் போயி மாவு பிசஞ்சு 


அடுப்பிலே விறகுக் கட்டையை சொருகணும். 


அப்பத்தான் மாமி ரொம்ப சந்தோஷப்படுவா. 


அப்பத்தான் அடுப்பும் நன்னா பத்திண்டு 


எரியுமாம். வாரேண்டா அம்பி. 




நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் அடுத்த நாட்டு நடப்ப்பு 


விளக்கத்திலே நாம அனைவரும் சந்திப்போம். 


அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி 


விடைபெறுவது, உங்கள் அன்பு தமிழ்பற்றுள்ள 


எழுத்தாளன், மதுரை T.R. பாலு.

Saturday, June 14, 2014

காதல் வயப்பட்டவர்கள் அடைந்திடும் இன்பங்கள் எத்தன்மை படைத்தது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-  புணர்ச்சி மகிழ்தல்.


குறள் எண்  :-  11௦9.


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன் ... ... ... ... ... ...


விளக்கம் :-   ஊடுதல், ஊடலை உணர்ந்து பின்

விடுதல், அதன் பின் கூடுதல், ஆகிய இவை

அனைத்தும்காதல் வாழ்வு நிறைவேறப்

பெற்றவர் பெற்ற பயன்கள் ஆகும். இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிய திருக்குறளும் 

அதன் விளக்கமும் ஆகும்.