Monday, September 12, 2016

நல்லாட்சி செய்திடாத மன்னவனின் நாடு என்னவாகும் ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  553.




நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 

நாடொறும் நாடு கெடும்... ... ... 

பொருள் :-  நாளுக்குநாள் தீமைகளைக் கண்டு 
அறிந்து, அவற்றை நீக்கி, ஆட்சி செய்யாத 
மன்னனது நாடு, நாளுக்கு நாள் அழிந்துகொண்டே போகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கமலா :- என்ன விமலாக்கா. ராத்திரி பூரா 
வூட்டில ஒரே ரகள போல இருக்கு. சத்தம் 
ஓயவே இல்ல. என்ன ? வழக்கம் போல 
வூட்டுக்காரர் பிரச்சின தானா ?

விமலா :- ஆமாடி கமலா. சம்பாரிக்கிற காசு 
பூராத்தையும் டாஸ்மாக்ல வுட்டுட்டு குடிச்சு 
குடிச்சு வந்தா நான் என்னடி செய்வேன் ? உம்.
புள்ளைகளுக்கு வேற வயசு வந்துட்டு இருக்கு.
என்ன சொன்னாலும் இந்த மனுசன் அப்பாலே 
குடிக்குறதை நிறுத்துற மாதிரி தெரியல்ல.

கமலா :- அக்கா இருநூறுக்கும் முன்னூறுக்கும் 
ஓட்டை வித்துட்டு அந்த கேடுகெட்ட பொம்பள 
கட்சிக்க்குத்தானே அப்பால நீ ஒட்டு போட்ட ?
உக்கும்..இப்ப அல்லாடி இன்னா பிரயோசனம் ?
உனக்கு வேணும்டி இதுவும் இதுக்கு மேலும்.
தல எவ்வளவு சொன்னாரு நான் ஆட்சிக்கு 
வந்தா முத கையெழுத்து இந்த பாழாப்போற 
டாஸ்மாக்கை இழுத்து மூடுறதுதான்னு. நீ 
கேக்கல. இப்ப அழுது இன்னா லாபம்.

விமலா :- ஏண்டி நானே நொந்து நூலா கீறேன்.
ஆறுதலா எதுனாச்சும் சொல்லுடி.

கமலா :- இப்ப நொந்து இன்னா சொல்லு. கண் 
போனாங்காட்டியும் சூரியன ஒருத்தி கும்பிட்ட 
கதையால்ல கீது. ஆனா ஒன்னுக்கா. இந்த 
மாதிரி குடிமக்களை கெடுத்து தீமைகளை 
தர்ற விசயத்தை தடுத்து நிறுத்தாத எந்த 
ஆட்சியும் அழிஞ்சு போகும் அத்த ஆளுற 
ராசாவும் அழிஞ்சே போவானாம். இத்த நான் 
சொல்லலக்கா. நம்ம மதுரை பாலு சார் 
இன்னைக்கு எடுத்து எழுதிருக்க " தினம் ஒரு 
திருக்குறள் " படிச்சுட்டுத்தான் சொல்றேன்.
ஒன்னும் கவலைப்படாத அக்கா. கூடிய 
சீக்கிரம் நல்ல சேதி நமக்கு வந்து சேரும்.
அப்பாலே நான் மார்கெட் வர போனும். பொறவு 
பார்க்கிறேன். வரட்டா ?

***************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment