Monday, September 19, 2016

ஊழை ( விதியை) விடவும் வலியது எதுவும் இல்லை !! திருவள்ளுவர் தந்த விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  ஊழ்.

குறள் எண் :-  380.


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும்... ... ...

பொருள் :-  ஊழிலிருந்து(விதியிலிருந்து)விடுபட, 
வேறொரு வழியை எண்ணினாலும் அவ்வூழே 
(அந்த விதியே )முன்வந்து நிற்கும். ஆதலால் 
ஊழை விட வலிமையானது யாது ? இது வான் புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :-  வாங்க கிந்தன். ஏன் முகம் ஒருமாதிரி 
வாட்டமா இருக்கு ? 

கிந்தன் :-  என்னத்த சொல்ல. நடந்து முடிஞ்ச 
சட்டமன்றத் தேர்தல்ல இந்த முடங்கிப்போன 
கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு 
நம்ம தளபதி எவ்வளவோ முயற்சி செஞ்சு நாடு முழுசும்சுற்றுப்பயணம்போனாரு.ஆனாஒன்னும் நடக்கலையே. திருப்பி இதே மக்களுக்கு எந்த 
முன்னேற்றமும் செய்யாத, ஆளத்தெரியாத 
அதே கட்சிக்கு ஆட்சிக்கு வந்துருச்சே. அதான் 
கடந்த நாலு மாசமா நானும் இந்த வருத்தத்த 
எப்டியாவது மறக்கணும்னு பாக்கேன் முடியல.

கந்தன் :-  தம்பி எல்லாம் விதிதாண்டா. நம்ம 
பாலு சார் இன்னைக்கு எடுத்து எழுதியிருக்குற 
" தினம் ஒரு திருக்குறள் " பகுதிய முகநூல்ல 
இருக்கு. அத்த முதல்ல படி. நாம என்னதான் முயற்சி எடுத்தாலும் விதி முந்திக்கிட்டு போயி நின்னு அது நினச்சபடிதான் எல்லாமே நடக்கும் அப்டின்னு திருவள்ளுவர் எழுதிருக்கார். அதான் காரணம். சரி..விடு..விடு..எல்லாம் மாறித்தான் ஆகணும். கூடிய சீக்கிரம் நல்ல சேதி நம்மள தேடி வரும்.அதுவரை கொஞ்சம்பொறுத்துத்தான் இருக்கணும்.  நான் வரட்டா ? கொஞ்சம் ஆபீஸ்ல வேல கிடக்கு. அப்பாலே சாயங்காலம்பாப்போம்.

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment