Friday, September 9, 2016

நாட்டினை ஆளும் மன்னவன் எப்போது அழிந்து போவான் ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்:-

பெரியாரைப்பிழையாமை.

குறள் எண் :-  899.




ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்... ... ... 

பொருள் :-  உயர்ந்த குறிக்கோளுடைய சான்றோர் சினமடைந்தால், இடையிலேயே வேந்தனும் அழிவான். அவனது ஆட்சியையும் அழிந்து போகும்.இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

சுப்பையா :-  வணக்கம் வேலையா. அப்புறம் 
நாட்டு நடப்பு என்ன சொல்லுது ?

வேலையா :-  என்னத்த சொல்ல. இங்க என்ன 
ஆட்சியா நடக்கு ? எல்லாமே பழிக்குப்பழி
இரத்தத்துக்கு இரத்தம். இதானே நடக்கு ?
அட..என்ன..நான்..சொல்றது ?

சுப்ப:-  அட..என்னல சொல்லுதே. ஒன்னும் 
விளங்கலை. புரியுங்காட்டி சொல்றா தம்பி.

வேலை:-  அதாண்ணே இந்த பொம்பள மேல
அவங்க உச்ச நீதி மன்றத்துலே மேல் முறையீடு 
செஞ்சுட்டாங்கங்ற ஒரே காரணத்தாலே அந்த 
மாநிலத்துலே அமைதிய நிம்மதியகெடுக்கணும் 
என்று திட்டம்போட்டு பழிவாங்க , இரண்டு மாசம் கழிச்சு இப்ப உச்ச நீதி மன்றத்துலே வழக்கு போட்டு தகராறு நடக்குறதுக்கு இந்த பொம்பள மனசுலே உள்ள பழிவாங்குற எண்ணம்தானே காரணம். வயசுல அனுபவத்துலே மூத்தவங்க யாரைத்தான் இந்த பொம்பள மதிச்சு அவங்கட்ட யோசனை கேட்டு செயல் பட்டுருக்கு ? அல்லாமே எடுத்தோம் கவுத்தோம் என்பது தானே? இப்படி அறிவில் சிறந்த மூத்தவர், நம்ம தல, கோபத்துக்கு 
ஆளானா கூடிய விரைவுல இந்த பொம்பள 
அழிஞ்சுபோய் ஆட்சியும் அழிஞ்சு போயிரும்.

சுப்ப :-  என்னடா நீ பாட்டுக்கு எல்லாம் தெரிஞ்ச 
ஜோசியர் மாதிரி சொல்ற ?

வேலை :-  இத்த நான் சொல்லல அண்ணே. இன்னைக்கு நம்ம மதுரை பாலு சார் எடுத்து போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள் பகுதியிலே உள்ள விளக்கம் படிச்சுட்டுத்தான் சொல்றேன் அண்ணே.

சுப்ப :-  அப்டியா தம்பி. நீ இதுவரை செஞ்ச காரியம் அனைத்துலேயும் உருப்படியானது எதுன்னு கேட்டா இது ஒன்னு தாண்டா தம்பி. தினம் ஒரு திருக்குறள் தினமும் படிறா தம்பி. உன் அறிவும் வளரும். திருக்குறள் வேற யார் உனக்கு இந்த மாதிரி சொல்லித்தரப் போறா ? சரி தம்பி எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு. அப்பாலே பாப்போம்.வரட்டா !!

*******************************************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment