Sunday, December 7, 2014

சிற்றறிவு எதனை நமக்கு உண்டாக்கித் தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  நிலையாமை.



குறள் எண் :-  331.



நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை... ... ... ... ... 



விளக்கம் :-  நிலையில்லாதவைகளை 


நிலையானவை என்று எண்ணி மயங்கும் 


புல்லறிவு உடையவராக இருத்தல்,வாழ்வில்


இழிந்த நிலையே ஆகும். இது வள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரங்கசாமி :-  அண்ணே !! ராமசாமி அண்ணே !!

எங்க அண்ணே போயிட்டு வரீங்க ?


ராமசாமி :-   தம்பி, நம்ம ஊருலேயே பெரிய 


பணக்காரர் சண்முகம் செட்டியாரு, நேத்து 


செத்துப்போயிட்டாருல்ல. அதான் அவரோட 


இறுதி ஊர்வலத்துலே கலந்துகிட்டு,


மயானக் கரை வரைக்கும் போயிட்டு 


வீட்டுக்குபோய் குளிச்சிட்டு வாறன் தம்பி.



ரங்க :-  ஏண்ணே !! சண்முகம் செட்டி, அவர் 


வாழ்நாளிலே எக்கச்சக்கமா சொத்து சேத்து


வச்சிருந்தாரே ? அவருக்கு வாரிசுகூட 


இல்லையே. வட்டி மூலமா கோடிகோடியா 


ரொக்கப் பணம், அடகுக் கடையிலே ஏராளமான 


நகை நட்டு இதெல்லாம் என்ன செஞ்சாரு ?


ராமசாமி :-   அவரு நேத்து வரைக்கும் தன்னாலே 


சேத்து வச்சிருந்த ரொக்கம்,நகை,வீடு,நிலம் 


இது எல்லாம் நிலையானது என எண்ணிக்கிட்டு 


இருந்தாரு. டாக்டர் நேத்து சாயங்காலம் வந்து 


நாளைக்கு செத்துருவீங்க அப்படீன்னு 


சொன்னதுக்கு பிறகுதான் உணர்ந்தாரு. 


அதாலே அவர் சொத்து அத்தனையையும்  


தலைவர் கலைஞர் அனாதைக்குழந்தைகள் 


இல்லத்திற்கு எழுதி வச்சிட்டு ராத்திரி மண்டைய


போட்டுட்டாரு. இதுதான் உலகின் நிலைமை 


தம்பி.சிற்றறிவு உள்ளவங்களுக்குத்தான் இது 


சம்பந்தமாக இழிவு ஏற்படும்னு திருவள்ளுவரே 


சொல்லிச் சென்றுள்ளார்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் . திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு ) 


No comments:

Post a Comment